என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ராமாயண பட்டாபிஷேகம்
    X

    மார்த்தாண்டம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ராமாயண பட்டாபிஷேகம்

    • ராமாயண ஞான வேள்வி கடந்த 12-ந் தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிமூலை அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பம்மம் ஆதிமூலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி விழா மற்றும் ராமாயண ஞான வேள்வி நடைபெற்றது. பவுர்ணமி விழாவில் திருவிளக்கு பூஜை அம்மனுக்கு வளை காப்பு வைபவம், ஊஞ்சல் சேவை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமாயண ஞான வேள்வி கடந்த 12-ந் தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது. இந்த ஞான வேள்வி தினசரி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடை பெற்றது. நிகழ்ச்சியின் கடைசி நாளான சனிக்கிழமை ராமாயண பட்டாபிஷேகம் மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தர்ம ரட்சண சமிதி பொறுப்பா ளர்கள் சுதர்சனராஜ், ஜெகதீஷ், ஜெகன், சவுந்தள பாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி யில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைஆதிமூலை அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை தர்மகர்த்தா உத்தமன் குட்டி, தலைவர் வழக்கறிஞர் விஜயராகவன், கோவில் போற்றி இளங்கோ, சேவா அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×