என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pathirakali Amman Temple"

    • திருவிழாவையொட்டி நேற்று இரவு அலங்கார பூஜை, அம்பாள் ஊஞ்சல் சேவை, சுவாமி சப்பர பவனி ஆகியன நடந்தது.
    • சிறப்பு நிகழ்ச்சிகளாக வில்லிசை, திருவிளக்கு பூஜை, பட்டிமன்றம், தினசரி அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி கொட்டங்காடு தேவி பத்ரகாளி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு அலங்கார பூஜை, அம்பாள் ஊஞ்சல் சேவை, சுவாமி சப்பர பவனி ஆகியன நடந்தது.

    வருகிற 30-ந்தேதி 11-ம் திருவிழாவில் கொடியிறக்க சிறப்பு பூஜையும், மறுநாள் காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    சிறப்பு நிகழ்ச்சிகளாக வில்லிசை, திருவிளக்கு பூஜை, பட்டிமன்றம், தினசரி அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சுந்தர ஈசன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

    ×