என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
    • பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கான டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைக்குப் பதிலாக 'லக்கி டிப்' (குலுக்கல்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் 'லக்கி டிப்' முறையால் வெளியிடப்படும். தற்போது டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு இன்று முதல் 20-ந்தேதி வரை 'லக்கி டிப்' பதிவு செய்ய வேண்டும். 'லக்கி டிப்' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கே டோக்கன்கள் ஒதுக்கப்படும். வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.

    பக்தர்கள் மீண்டும் இந்தச் சேவையைப் பெறுவதற்கான கால இடைவெளி 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    ரிஷபம்

    பணவரவு திருப்தி தரும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பால் பெருமைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    மிதுனம்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உண்டு.

    கடகம்

    சேமிப்பு அதிகரிக்கும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆபணரங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

    சிம்மம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    கன்னி

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    துலாம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். சென்ற வாரத்தில் நடைபெற வேண்டிய காரியம் இன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    விருச்சிகம்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

    தனுசு

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவை காட்டிலும் செலவு கூடும்.

    மகரம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். இடம், பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். புது முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புக் கிடைக்கும்.

    கும்பம்

    தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

    மீனம்

    யோகமான நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.

    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-2 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி நள்ளிரவு 1.18 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : பூசம் காலை 9.28 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

    இன்று சன்யஸ்த மகாளயம், சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-சாதனை

    மிதுனம்-முயற்சி

    கடகம்-செலவு

    சிம்மம்-வரவு

    கன்னி-பெருமை

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-யோகம்

    தனுசு- பரிசு

    மகரம்-நன்மை

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-உவகை

    • தொழிலில் முதலீடு செய்வது, திருமண பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை திடீர் விளைவுகளை ஏற்படுத்தும்.
    • கிரகணம் கன்னி ராசிக்காரர்களின் உடல் மற்றும் மனநலனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படுகிறது.

    சந்திரன் சூரியனின் ஒளியை மறைப்பதால் பூமியின் மீது சில பகுதிகளில் சூரிய ஒளி விழாமல் இருக்கும் போதே சூரிய கிரகணம் நிகழ்கிறது.

    இந்த மாதம் 21-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது கன்னி ராசியில் நிகழ இருப்பதாகவும், அந்த நாளில் கன்னி ராசிக்காரர்கள் செய்யக்கூடியவகைள், செய்யக்கூடாதவை ஆகிவைகளை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

    இந்த சூரிய கிரகணம் ஏற்படும் காலம் வழக்கமான அமாவாசையைப் போல் இல்லாமல் இருப்பதால், அவை நம் மனநிலைகள் மற்றும் உணர்வு நிலைகளில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரக்கூடும். இது துல்லியமான தெளிவுக்கு நல்ல அறிகுறியாக இருந்தாலும், உங்கள் விருப்பங்களை ஒத்துப்போகாதவற்றுடன் இணைப்பதற்கு வழிவகுக்கும். அதனால் தெளிவான மனநிலையுடன் இருங்கள்.

    இந்த நேரத்தில் பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள், உங்கள் உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

    உதாரணமாக தொழிலில் முதலீடு செய்வது, திருமண பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவை திடீர் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால் இந்த காலத்தில் பொறுமை காப்பது நல்லது. கிரகணம் கன்னி ராசிக்காரர்களின் உடல் மற்றும் மனநலனின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

    இந்த காலங்களில் சுய பராமரிப்பை மேற்கொள்வது, போதுமான ஓய்வு எடுப்பது முக்கியமான ஒன்றாகும். யோகா மற்றும் சீரான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.

    கிரகணம் மனநலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், உறவுகளை கையாள்வதை திறம்பட செய்யவேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகள், உறவுக்காரர்கள் என யாரையும் கட்டுப்படுத்த முயலாதீர்கள், நீங்கள் இறுகப்பிடிக்க முயற்சித்தால் உறவுகளிடையே மோதல் உருவாக வாய்ப்புண்டு. அதனால் உறவுகளிடையே பொறுமையை கடைபிடியுங்கள். உறவுப்பிரச்சனைகளை அமைதியாக கவனியுங்கள்.

    கிரகணங்கள் ஆழ்ந்த ஆன்மீக சக்தியைக் கொண்டுள்ளன. கவனச்சிதறல் இருந்தால் சக்தி வாய்ந்த நுண்ணுர்வுகளை தவறவிடுவீர்கள். ஆகையால் தியானத்தில் ஈடுபடுங்கள், உள்ளத்தை குவித்து ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு நல்வழியை மீட்டுத் தரும் ஒரு வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு கன்னி ராசிக்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஜோதிடர்கள் விளக்கியுள்ளனர்.

    • தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான்.
    • தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான். இதனை சுருக்கி 'குலசை' என்பார்கள்.

    குலசை தசரா பெருந்திருவிழாவில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் நாள் திருவிழாவான அக்டோபர் 2-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த கோவிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞான மூர்த்தீஸ்வரரும், அம்பிகை முத்தாரம்மனும் வீற்றிருக்கிறார்கள்.

    பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.

    இந்த கோவில் முன்பு சாதாரண ஒரு தெருக் கோவிலாக இருந்து வந்தது. ஆனால் இன்று உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாக சிறப்பு பெற்று வளர்ச்சி பெற, அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் அளவு கடந்த நம்பிக்கை தான் காரணம்.

    முன்பெல்லாம் அம்மை நோய் குணமாக வேண்டி மட்டுமே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை என சகல துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனின் அருளை பெறப் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் அதிகரித்து கொண்டே வருகிறது.

    கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் அருள் பெறும் சக்தி தலமாகவே இந்த கோவில் விளங்கி வருகிறது. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறு வேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம் உள்ளதாம்.

    இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதனை அம்மனே நேரில் வந்து கேட்பதாகக் கருதி மக்கள் தர்மம் செய்கிறார்கள்.

    தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, நர்சு, போலீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று, அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, கோவில் உண்டியலில் செலுத்துவது தான் இதன் சிறப்பு ஆகும். முனிவர் வேடமானது முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதாகவும், குறவர் வேடமானது மன குறைகளை தீர்க்கும் எனவும், பெண்கள் வேடமானது திருமண குறையை தீர்க்கும் எனவும், காளி வேடம் காரிய சித்தியை தரும் எனவும் கூறப்படுகிறது.

    ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடங்களை அணிந்து வருவர். காவல்துறை வேடம் முதல் செவிலியர், மருத்துவர், எமதர்மன், சித்திரகுப்தன் என பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிந்து வருவர்.

    அம்மன் அருளின்படி , காளி வேடம் அணிபவர்கள் 41 நாட்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். அவர்கள் வீட்டருகே, குடில் அமைத்து அதில் அம்மனின் புகைப்படம் வைத்து தினமும் பூஜை செய்து அங்கேயே விரதம் இருந்து தங்கி இருப்பர். மற்ற வேடம் அனுபவர்கள் காளி வேடம் அணிபவர்களிடம் காப்பு கட்டி கொள்வர். மற்ற வேடம் அணிபவர்கள் குடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.

     

    ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பது போல, ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. பச்சை வண்ண மாலையானது பசுமையான வாழ்வை தரும் எனவும், மஞ்சள் வண்ண மாலை மங்கல நிகழ்வை தருவதாகவும், கருங்காலி மாலை நல்லெண்ணத்தை தருவதாகவும், துளசி மாலை புனிதத்தை தருவதாகவும், ருத்திராட்ச மாலை சன்னியாச வாழ்வையும் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

    ஒவ்வொரு வேடம் அணிந்தவர்களும், அது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அருகில் வீடுகளில் யாசகம் பெற்று, அந்த காணிக்கையுடன் சூரசம்காரம் நடக்கும் நாளன்று கோவில் சென்று தங்கள் வேடத்துடன் அம்மனை தரிசித்து பின்னர் கடலில் சென்று நீராடிவிட்டு வருவர்.

    பின்னர் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, சூரனை வீழ்த்தும் சூரசம்கார நிகழ்வு கடற்கரையில் நிகழும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து இருப்பார்கள். சூரசம்காரம் முடிந்து அம்மன் சன்னதி தேரில் ஊர்வலம் வருவார்.

    அம்மன் சன்னதியை அடைந்த பிறகு காப்பு தரிக்கப்படும். காளி வேடம் அணிந்தவர்கள் மட்டும் கோவிலில் காப்பு தரிப்பார்கள். மற்ற வேடம் அணிந்தவர்கள் காளி வேடம் அணிந்தவர்களிடம் காப்பு தரித்து கொள்வர். அதன் பிறகே குலசை முத்தாரம்மன் தசரா விரத காலம் நிறைவுபெறும்.

    இந்த ஆண்டு தசரா திருவிழாவுக்காக 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த மாதம் 4-ந் தேதியே மாலை அணிந்தனர். 51 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த மாதம் 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 17-ந் தேதியும், 41 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 24-ந் தேதியும் விரதம் தொடங்கினர்.

     

    கோவிலில் இன்று விரதம் தொடங்கிய பக்தர்கள்.

    31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த 13-ந் தேதியும் விரதம் தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குலசை வந்து கடற்கரையில் நீராடி அம்மன் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் உடன்குடி, குலசை, திருச்செந்தூர் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் மாலை அணிந்த பக்தர்கள் காட்சியளிக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 7 லட்சம் பக்தர்கள், 2023-ம் ஆண்டு 8 லட்சம் பக்தர்கள், கடந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் வேடம் அணிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமான அளவில் பக்தர்கள் வேடம் அணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் உண்டியல் வசூலே, மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதிபடுத்துவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு சூரசம்ஹாரம் நாளில் மட்டும் 20 லட்சம் பேர் திரண்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • 1-ந்தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
    • விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் கோவில் உள்பிரகாரத்தில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் மண்டபம் அருகே பல அடுக்குகள் கொண்ட நவராத்திரி கொலு வைக்கப்பட்ட உள்ளது.

    இதில் மரம், செடி, கொடி, துர்க்கையின் 9 வடிவங்கள், பறவைகள், விலங்கினங்கள் மற்றும் விவேகானந்தர், வள்ளலார், பார்வதி, சரஸ்வதி, லட்சுமிதேவி, அஷ்டலட்சுமி, திருப்பதி ஏழுமலையான், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், குபேரன் மற்றும் தேவ, தேவியர் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் கொலுவில் இடம்பெற உள்ளது.

    22-ந்தேதி இரவு அம்மன் குமாரிகா (துர்க்கை) அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். 23-ந்தேதி திருமூர்த்தி அலங்காரத்திலும், 24-ந்தேதி கல்யாணி அலங்காரத்திலும் எழுந்தருளுகிறார். 25-ந்தேதி ரோகினி அலங்காரத்திலும், 26-ந்தேதி காளகா அலங்காரத்திலும், 27-ந்தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார். 28-ந்தேதி சாம்பவி அலங்காரத்திலும், 29-ந்தேதி துர்க்கை அலங்காரத்திலும், 30-ந்தேதி சுபத்ரா அலங்காரத்திலும் (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார். 1-ந்தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் கோவில் உள்பிரகாரத்தில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    இதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 1-ந்தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு ஆதிமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் பிச்சைமணி, ராஜசுகந்தி, லட்சுமணன், மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • பெண்களுக்கு இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.
    • கல்யாண முயற்சி கைகூடும்.

    தனுசு ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சந்திரனும் இணைந்து 'குரு சந்திர யோகம்' உருவாகும் விதத்தில் மாதம் தொடங்குகிறது. எனவே தொட்ட காரியங்கள் வெற்றிபெறும். தோள் கொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பர். வெற்றிக்குரிய தகவல்கள் வீடு தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை என்பதால், கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கேட்காமலேயே சில நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் வழிகாட்டுவர். இளைய சகோதரர்களிடம் இணக்கம் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். புனித பயணங்கள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்க மேலதிகாரிகள் முன்வருவர். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும் நேரம் இது.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் குரு. அவர் இப்பொழுது அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆனாலும் ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பது யோகம்தான். ஆரோக்கிய தொல்லை அகலும். அரைகுறையாக நின்ற பணிகள் ஒவ்வொன்றாக முடியும். நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது. குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுய தொழில் செய்ய முன்வருவர். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றமும் உண்டு. அது உயர்வானதாகவே இருக்கும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவும். புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் நன்மை கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு இல்லம் தேடி நல்ல தகவல் வரும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 21, 24, 25, அக்டோபர்: 3, 4, 6, 7, 17.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மகர ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். அதே நேரத்தில் அஷ்டமத்தில் சுக்ரனோடு கேது இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பார்த்த காரியங்களில் எண்ணற்ற தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். எதிலும் ஈடுபாடு ஏற்படாமல் மனம் அலைபாயும். அதுமட்டுமல்லாமல் மனதில் ஏதோ ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். பிறரின் உதவியை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். குருவின் அதிசார பெயர்ச்சிக்கு பிறகு நெருக்கடி நிலை அகன்று நிம்மதி கிடைக்கும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். 'பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கு ஏற்ற விதம் சம்பள விகிதமும் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும் நேரம் இது.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பது ஒரு அற்புதமான நேரமாகும். ஏழரைச் சனி நடந்தாலும் கூட குருவின் பார்வையால் நல்ல மாற்றம் இல்லம் தேடிவரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க குரு பகவானை வழிபடுவது நல்லது. சப்தம ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையை செவ்வனே செய்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பதவி தானாக வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தொழில் சிறப்பாக நடைபெறும். என்னயிருந்தாலும் ஏழரைச் சனி நடைபெறுவதால் திடீர் செலவுகளை சமாளிக்க கூடிய சூழல் உருவாகும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தன ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் ஆரோக்கிய சீர்கேடுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் உண்டு. குடும்ப பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். 'கட்டிய வீடு பாதியில் நிற்கிறதே' என்று கவலைப் படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. பணத்தேவை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி புரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். கலைஞர்களுக்கு அதிக முயற்சி தேவை. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப சுமை கூடும். பயணங்களால் விரயம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 22, 23, 26, 27, அக்டோபர்: 5, 6, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கும்ப ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் சேர்ந்திருக்கிறார். சப்தம ஸ்தானத்தில் சுக்ரனும், கேதுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றது. சனியும் ஜென்மச் சனியாக இருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கடன்சுமை கூடிக் கொண்டே செல்லும். தொழிலில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த இயலாது. மனவருத்தம் அதிகரிக்கும். வருமானப் பற்றாக்குறை யின் காரணமாக இனம்புரியாத கவலை மேலோங்கும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய தகவல் கிடைக்கும். அவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மனதிற்கினிய பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் 6-ம் இடத்திற்கு வரும்போது எதிரிகளின் பலம் மேலோங்கும். எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். வீடு தேடி வம்பு, வழக்குகள் வரலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளத்தை வாடவைக்கும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.

    குருவின் பார்வை பலத்தால் ஓரளவு நன்மை கிடைக்கும். என்றாலும் ஏழரைச் சனியும் நடைபெறுகிறதல்லவா?. எனவே புது முயற்சிகள் செய்யத் தொடங்கும் பொழுது, அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறை வேறும். பொதுவாக குரு வழிபாடு இக்காலத்தில் நன்மையை வழங்கும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இருப்பினும் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் நல்ல சம்பவங்கள் நடைபெறலாம். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் சூடுபிடிக்கும். ஆனால் புரட்டாசி 22-ந் தேதிக்கு மேல் குரு அதிசாரமாக பெயர்வதால், மகிழ்ச்சியும், மனநிம்மதியும் குறையும். சனிபகவான் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மாற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் உயர்வு உண்டு. பெண்களுக்கு கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சி கைகூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 25, 26, 29, 30, அக்டோபர்: 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    மீன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 4-ம் இடத்தில் சஞ்சரித்து அர்த்தாஷ்டம குருவாக இருக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. அஷ்டமத்தில் செவ்வாயும் இருக்கிறார். எனவே இக்கட்டான சூழ்நிலையும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இதயத்தை வாடவைக்கும் அமைப்பும் உண்டு. ஆயினும் மாதக் கடைசியில் குருபகவானால் மகிழ்ச்சியும், எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலைமை சீராகி நினைத்தது நிறைவேறும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த நற்பலன் கிடைக்கும். மறைந்த புதன் நிறைந்த தன லாபத்தைக் கொடுப்பார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளிநாட்டு அழைப்பு வந்து மனதை மகிழ்விக்கும். முன்பு குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று அதன் மூலம் லாபம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். அவர் உங்கள் ராசிநாதன் மட்டுமல்ல. தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாவார். எனவே அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் உயர நண்பர்கள் வழிகாட்டுவர்.

    குருவின் பார்வை பலத்தால் உங்கள் ராசி புனிதமடைவதால், ஏழரைச் சனியால் ஏற்படும் சிரமங்கள் குறையும். சிந்தனைகளில் வெற்றி பிறக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். 'கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறாமல் தாமதப்படுகின்றதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் வந்துசேரும். மங்கல ஓசை மனையில் கேட்கும். ஒட்டு மொத்தத்தில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும் நேரம் இது.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இந்த வக்ரம் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உங்கள் ராசிக்கு சனி பகவான் லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருப்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். பயணங்கள் ஆதாயம் தருவதாக அமையாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கலாம். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சனி பகவான் வழிபாடு நன்மை பயக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபமும், விரயமும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதிப்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க இயலாது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்

    • உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.
    • வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர்.

    சிம்ம ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சுக்ரனும், கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். உணவில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. கும்பத்தில் ராகு இருப்பதால் பொருளாதார நிலை திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலை மேலோங்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபச் செலவுகளை செய்வது நல்லது.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். வெற்றிச் செய்திகள் வீடுதேடி வரும். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வார்கள். அவர்களோடு ஏற்பட்ட பனிப்போர் அகலும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். தொழில் நடத்துபவர்கள் 'புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளலாமா?' என்பது பற்றி சிந்திப்பர். அதிக மூலதனம் போடுவதற்காக, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். வீடு வாங்கும் யோகம் அல்லது இடம் வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால், சுப விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதடைந்த பிள்ளைகள் இருந்தால் அவர் களின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பெற்றோரின் மணிவிழாக்கள், பவளவிழாக்கள் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    குருவின் பார்வைக்கு அதிக பலன் உண்டு. அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தாய் வழி ஆதரவு உண்டு. பிறரை சார்ந்திருப்பவர்கள் தன்னிச்சையாக இயங்கக்கூடிய நேரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகள், வேண்டிய சலுகைகளைக் கொடுப்பர். இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று நினைத்தவர்களுக்கு, புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. கண்டகச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. எதிரிகளின் பலம் கூடும். தொழிலில் லாபம் வந்தாலும், அது கைக்கு கிடைப்பது அரிது. முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். அவற்றில் இருந்து விடுபட சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு கொடுக்கல் - வாங்கல் சிறப்பாக இருக்கும். சுபச்செலவு அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 22, 26, 27, அக்டோபர்: 8, 9, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    கன்னி ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று, விரயாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் ஒருபுறம் வந்தாலும், விரயங்கள் மறுபுறம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்றுவர வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடலாம். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றமும், இடமாற்றமும் வருவதற்கான அறிகுறி தென்படும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். வீடு வாங்குவதோ, வீடு கட்டுவதோ போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். 'கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'வேலையில் இருந்து விடுபட்டு, சுயமாக ஏதேனும் செய்யலாமா?' என்று சிந்திப்பார்கள்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம்பெறுவது நன்மைதான். என்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றிருப்பதால் குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் உருவாகி மனக்கலக்கம் ஏற்படும். பெற்றோர் வழியில் வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தப்பட்ட கவலை மேலோங்கும். என்ன இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலம் அதிகம் என்பதால், ஒருசில காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு அகலும். பூர்வீகச் சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. 6-க்கு அதிபதி வக்ரம்பெறுவது நன்மைதான். என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் சனி அதிபதியாக விளங்கு வதால் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொத்துக்களால் பகை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை கிட்டும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 24, 25, 29, 30, அக்டோபர்: 10, 11, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    துலாம் ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் விரய ஸ்தானாதிபதி புதன் விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் திருப்தி கரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். அதிகப் பயணங்களால் அலைச்சலும், மன அமைதிக் குறைவும் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத நேரம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். என்றாலும் அதுவரை மனக்குழப்பம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக தொழில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு, ஊதியம் எதிர்பார்த்தபடி கிடைத்தல், அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் போன்றவை படிப்படியாக நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்வை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சி்ந்தனை அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்றுக்கொள்ளும் விதம் அமையும். பிள்ளைகளின் வேலை அல்லது படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு குரு வருகிறது. 10-ல் குரு வந்தால் பதவி மாற்றம் உருவாகும் என்பது நியதி. அதற்காக பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. சகாய ஸ்தானாதிபதியான அவர் உச்சம் பெறும்பொழுது எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறை வேறும். மதிப்பும், மரியாதையும் உயரும். ஆனால் நீங்கள் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து, எப்போதும் நேர் மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

    குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் வராவிட்டாலும், வந்த மாற்றம் நல்ல மாற்றமாகவே அமையும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அந்த எண்ணமும் ஈடேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சுக ஸ்தானாதிபதியான அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலனில் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மனக்கவலையும், விரயங்களும் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் சனிக்கிழமை விரதமும், சனீஸ்வர வழிபாடும் நன்மையைத் தரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெண்களுக்கு பிள்ளைகளால் விரயம் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 20, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    விருச்சிக ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். லாபாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 'புத ஆதித்ய யோக'த்தோடு மாதம் பிறக்கிறது. எனவே பொருளாதார நிலை உயரும். வெற்றிக் குரிய தகவல் வீடு தேடி வரும். தொழில் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சியால் பல நல்ல காரியங்களை நடத்திக் காட்டுவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரியும் மாதம் இது.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி புதன் 12-ம் இடத்திற்கு வரும்போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படப் போகிறது. மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். கல்வி, கலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நாலாபுறமும் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும், சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவலும் வந்துசேரும். வீடு வாங்குவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்ற நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மகத்தான பதவி கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகளும், சுபச்செய்திகளை கேட்கும் சூழலும் உண்டு.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர் உச்சம் பெறும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். குருவின் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதிவதால் வருமானம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக வரும். புதிய ஒப்பந்தங்களும் வந்து கொண்டே இருக்கும். வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு, பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அர்த்தாஷ்டம சனியான அவர் வலிமை இழக்கும் இந்த நேரத்தில் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வாகன மாற்றம் செய்யும் முயற்சி கைகூடும். வருமானம் உயரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. சனி பகவான் வழிபாடு சந்தோஷம் தரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், புகழ் சேரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வாரிசுகளுக்கு சுபகாரியங்கள் நடைபெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 22, 23, 29, 30, அக்டோபர்: 5, 6, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    • பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் நிகழும்.
    • உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

    மேஷ ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தேக நலன் சீராகும். சொத்துக்களால் யோகமும், சொந்தங்களால் நன்மையும் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் சில காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகளின் திருமண முயற்சி கைகூடும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சென்ற மாதம் 6-ம் இடத்தில் உச்சம் பெற்று இருந்தபோது, கடன் சுமை அதிகரித்து, கவலைகள் மேலோங்கி இருக்கலாம். அந்த நிலை இப்பொழுது மாறும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்துசேரும். சப்தம ஸ்தானத்திற்கு வரும் புதனால் வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானம் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு உச்சம் பெறும் நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். குரு பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இந்த இடங்களை உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை. குருவின் பார்வை பலத்தால் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார் - உறவினர்களின் ஆதரவு திருப்தி தரும். ஊர் மாற்றம், இடமாற்றம் நன்மை தரும் விதம் அமையும். தொழிலில் பணியாளர்களின் மாற்றங்களும், புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் காட்டும் ஆர்வமும் பலன்தரும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாபாதிபதியாக விளங்கும் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை சனி மீது பதிகிறது. எனவே அதன் கடுமை கொஞ்சம் குறையும். மாதக் கடைசியில் குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் சனி வலிமையடைவதால் தொழில் வியாபாரத்தில் மிகமிக கவனம் தேவை. நெருக்கடி நிலை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிக்க இயலாது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் நிகழும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதக் கடைசியில் பண நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாறுதலான இடத்தால் மனதிற்கு திருப்தி இருக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் குறுக்கீடுகள் உண்டு. மாணவ - மாணவியர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்க்கை சக்கரம் சுழலும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 29, 30, அக்டோபர்: 5, 6, 10, 11, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.

    ரிஷப ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் கேதுவோடு சஞ்சரிக்கிறார். 'குரு சந்திர யோக'த்தோடு மாதம் தொடங்குவதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புகழ் கூடும். புனிதப் பயணங்கள் உண்டு. நல்ல சந்தர்ப்பங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வாகன யோகமும், தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் நற்பலன்கள் நடைபெறும். உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். பெரிய மனிதர்களின் உதவியால் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். பிள்ளைகளின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு வாங்குவது அல்லது இடம் வாங்கி வீடு கட்டுவது என்ற சிந்தனையை செயல்படுத்த முற்படுவீர்கள். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பதால், பொருளாதார நிலை உச்சம் அடையும். எனவே கடன் சுமை குறையவும் வழிபிறக்கும்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகை கிரகம் ஆவார். இருப்பினும் குருவின் பார்வை சகல தோஷங்களையும் அகற்றும் என்பதால், அவரது பார்வை பதியும் இடங்கள் அத்தனையும் புனிதமடைகிறது. அதன் விளைவாக எண்ணற்ற நற்பலன் உங்கள் இல்லம் தேடி வரலாம். முன்னேற்றம் தரும் குரு பகவானை இக்காலத்தில் முறையாக நீங்கள் வழிபடுவது நல்லது.

    குருவின் பார்வை பலத்தால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கருத்து வேறுபாடு அகலும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளமும், குதூகலமான சூழ்நிலையும் உருவாகும். உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் இப்பொழுது விலகுவர். கடை திறப்புவிழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் இப்பொழுது நிறைவேறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால், சில காரியங்களில் திடீர் திடீரென மாற்றம் செய்வீர்கள். வாகனங்களால் பிரச்சினைகள் வரலாம். ஒரு சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். தொழில், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வருமானம் உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, அக்டோபர்: 3, 4, 6, 7, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மிதுன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் குருவும், சந்திரனும் இணைந்து 'குரு சந்திர யோக'த்தை உருவாக்கு கிறார்கள். உங்கள் ராசிநாதன் புதன் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதியான குரு, உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் தொழில் வளர்ச்சியும், கூடுதல் லாபமும் வந்துசேரும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பிள்ளைகளின் கல்வி நலன் கருதியும், எதிர்கால முன்னேற்றம் கருதியும் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் தடைப்பட்ட மங்கல நிகழ்வுகள், இப்பொழுது நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெறும் இந்த நேரத்தில் கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். குருவின் பார்வைக்கு பலன் அதிகம் என்பதால் எதிர்பார்ப்புகள் இக்காலத்தில் எளிதில் நிறைவேறும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். இதுவரை அடிக்கடி ஆரோக்கிய குறைபாட்டால் அவதிப்பட்ட நீங்கள், இப்போது உற்சாகத்தோடு செயல் படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். கொடுக்கல் - வாங்கல்களில் தாராளம் காட்டுவீர்கள். வளர்ச்சிக்கு உறுதுணையாக பிற இனத்தார்களின் அறிமுகம் கிடைக்கும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழாக்களை நடத்துவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், பாக்யாதிபதியாகவும் சனி விளங்குவதால் தொழிலில் சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். உற்றார் - உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும். கடமையைச் செவ்வனே செய்ய இயலாது. புதிய முயற்சிகளை பலமுறை செய்த பிறகுதான் வெற்றி காண முடியும். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும் நேரம் இது.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வரலாம். மாணவ - மாணவி களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிப்பீர்கள். தேவையான நேரத்தில் உங்கள் தேவைக்குரிய பணம் கைகளில் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 22, 23, அக்டோபர்: 4, 5, 8, 9, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடக ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வது கடினம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நண்பர்கள் பகைவர் களாக மாறலாம். நல்ல சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளும் எதிர்வரும் இடர் பாடுகளை அகற்றும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் செலவழிக்கும் சூழல் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், இப்பொழுது சொந்த வீட்டிற்கு குடியேறும் யோகம் வாய்க்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை தீரும். வருமானம் திருப்தி தரும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசியிலேயே குரு உச்சம் பெறுவது யோகம்தான். 'குரு பார்த்தாலும், சேர்ந்தாலும், இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்' என்பர். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பலம்பெற்ற குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்தபடியே வருமானம் உயரும். இல்லத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு. இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். 'தொழில் தொடங்க முடியவில்லையே' என்ற கவலை இப்போது மாறும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் ஒரு சில நல்ல காரியங்கள் நடந்தேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மேலோங்கும். இக் காலத்தில் முறையாக வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி வக்ரம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். எதிர்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகள் பலரும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவர். பெண் களுக்கு இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, 24, 25, அக்டோபர்: 6, 7, 11, 12, 17.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    • மலைவாழ் மக்கள் பேச்சியம்மனுக்கு பாறையில் பீடம் அமைத்துள்ளனர்.
    • இங்குள்ள கிணற்று தண்ணீரை அருந்தினால் கற்கண்டு சுவை போல் இனிக்கும்.

    கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு அருகே பிரசித்திப் பெற்ற பேச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த பேச்சியம்மனுக்கு வழிபாடு நடத்திய பின்னர்தான், பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கிறார்கள்.

    தல வரலாறு

    சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது, வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. அப்போது பூமியை சமநிலைப் படுத்த வேண்டி சிவபெருமான் அகத்திய முனிவரை பணிக்கிறார். அதன்படி அகத்திய முனிவரும், ரிஷிகளும் சேர்ந்து தென்திசை நோக்கி வந்தனர். அப்போது அகத்திய முனிவர் பேச்சிப்பாறையில் சுயம்புவாக தோன்றிய காளிதேவியைக் கண்டதாகவும், தேவி அகத்தியரிடம் பேசி மகிழ்ந்ததால் அகத்தியரே காளிதேவியை 'பேச்சியம்மன்' என்று திருநாமம் சொல்லி வணங்கியதாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.

    மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்தபோது தென்கோடியில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அடர்காட்டில் தங்கியுள்ளனர். அந்த சமயம், பீமனுக்கும் அர்ஜூனனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணபரமாத்மா தோன்றி, உங்களில் யார் பக்கம் நியாயம் உள்ளது? என்பதை அருகிலுள்ள தேவியிடம் சென்று கேட்குமாறு கூறினார். உடனே பீமனும், அர்ஜூனனும் அருகில் இருந்த பேச்சியம்மனிடம் சென்றனர். அப்போது, தேவியானவள் வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்து அருள்பாலிக்க, இருவரும் வந்த விஷயத்தை மறந்ததாக கூறப்படுகிறது.

     

    கோவில் தோற்றம்

    இப்பகுதி மலைவாழ் மக்கள் பேச்சியம்மனுக்கு பாறையில் பீடம் அமைத்துள்ளனர். ஆண்டுதோறும் தங்களின் இஷ்டதெய்வமான தேவிக்கு காட்டு விலங்குகளை பலிகொடுத்து வழிபட்டுள்ளனர். ஆனால் தற்போது சைவ பூஜையே நடைபெறுகிறது.

    1897-ம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா மகாராஜா விவசாயத்துக்காக பேச்சிப் பாறையில் அணைகட்ட உத்தரவிடுகிறார். அதன்படி அணைகட்டும் வேலைகள் நடந்து, மறுநாள் வந்து பார்த்தால் கட்டப்பட்ட பகுதி இடிந்து போயிருக்கும். தினந் தோறும் இதே நிலைதான் ஏற்பட்டது. இதனால் மன்னரும் மக்களும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் மூட்டுக்காணி ஆதிவாசி கிராமத் தலைவனின் கனவில் தோன்றிய தேவி, ''தான் காலம்காலமாக இப்பாறையில் நிலைகொண்டிருக்கிறேன், தன்னுடையை பார்வையை மறைத்து அணை கட்டக்கூடாது'' என்று கூறியுள்ளார்.

    இதை அவர் அணைகட்டும் தலைமைப் பொறியாளர் மின்சின் அலெக்சாண்டரிடம் கூறினார். உடனே அவர், அன்றிரவு கோவில் பீடமிருந்த பாறையில் சென்று தேவியை பிரார்த்திக்க, அவருக்கு காட்சி தந்தார் தேவி. அப்போது அவர் தேவியிடம் தனக்கு அணை கட்டிமுடிக்க உதவ வேண்டும் என்றும், அப்போதுதான் தென் திருவாங்கூர் மக்களின் தண்ணீர் பஞ்சம் அகலும் என்றும் வேண்டினார். இதனால் மனம் இரங்கிய தேவி, தன்னுடைய திவ்ய ரூபத்தைக்காட்டி, ''நான்தான் பேச்சியம்மன். தனக்கு இப்பாறையில் உள்ள இடத்துக்கு பதில், அணையின் முன்பகுதியில் (தற்போது கோவில் இருக்கும் இடம்) இருப்பிடம் அமைத்து, தன்னை பூஜித்தால் எந்தவித தடங்கலும் வராது'' என்று கூறி மறைந்தார்.

    அதன்பின் பொறியாளர் மின்சின் அலெக்சாண்டர் தற்போது கோவிலிருக்கும் இடத்தில் பீடம் போன்ற கோவில் அமைத்தார். ஏழு தினங்கள் பூஜையும், ரத்த பலியும் கொடுத்த பின் அணை கட்டும் பணி எந்தவித இடையூறுமின்றி துரிதமாக நடந்தது. 1906-ம் ஆண்டு அணை கட்டும் வேலை முடிந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்று முதல் இன்று வரை பேச்சிப்பாறை அணை தண்ணீரை ஜூன் மாதம் விவசாயத்துக்காக திறக்கும்போது பேச்சியம்மன் கோவிலுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் வழிபாடு, பூஜைகள் நடத்துவார்கள். கோவிலில் வழிபாடு நடத்தியபின்னர், அணைக்கட்டில் தண்ணீர் திறக்கும் கதவுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னரே அணை திறக்கப்படும்.

    அணைக்கட்டில் இருந்து சற்று முன்புறம் காணப்படும் கோவில், தற்கால கோவில் வடிவமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளே தேவி, பீடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறாள். கோவிலின் இடதுபுறம் விநாயகருக்கு சிறிய சன்னிதி உள்ளது. சற்றுதொலைவில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு 1965-ம் ஆண்டு மாசி மாதம் பரணி நட்சத்திரம் நாளில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனால் ஆண்டு தோறும் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுகிறது. இங்குள்ள கிணற்று தண்ணீரை அருந்தினால் கற்கண்டு சுவை போல் இனிக்கும்.

    கோவில், காலை 5 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    நாகர்கோவிலில் இருந்து 67 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். வீடு மாற்றம், ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். வெளிநாட்டுப் பயண வாயப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு.

    மிதுனம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் உருவாகலாம். நண்பர்கள் உதவுவதாகச் சொல்லி விட்டுக் கடைசி நேரம் கையை விரிக்கலாம்.

    கடகம்

    வளர்ச்சி கூடும் நாள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். பயணம் பலன் தரும்.

    சிம்மம்

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்களைச் சந்திக்க வரலாம். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

    கன்னி

    பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

    துலாம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். ஆதாயம் தரும் விதத்தில் மற்றவர்களின் ஆலோசனை அமையும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி எடுப்பீர்கள்.

    விருச்சிகம்

    பெருமைகள் வந்து சேரும் நாள். சேமிப்பு உயரும். பிற இனத்தாரின் ஒத்துழைப்புடன் தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.

    தனுசு

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்லியதால் பிரச்சனை ஏற்படலாம்.

    மகரம்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவலொன்று வந்துசேரும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    கும்பம்

    சோதனைகளை வென்று சாதனை படைக்கும் நாள். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வரன்கள் முடிவாகும்.

    மீனம்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். உத்தியோக்தில் இழந்த பதவியை மீண்டும் பெறும் வாய்ப்பு உண்டு.

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையானுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்.
    • கரூரில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-1 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி பின்னிரவு 2.09 மணி வரை. பிறகு துவாதசி.

    நட்சத்திரம் : புனர்பூசம் காலை 9.56 மணி வரை. பிறகு பூசம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகார்த்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்

    இன்று சர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீஏழுமலையானுக்கு சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால்அபிஷேகம். நான்காம் நவதிருப்பதி, திருபுளிங்குடி, ஸ்ரீபூமி பாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் திருமஞ்சனம்.

    கரூரில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம், திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகார்த்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-ஓய்வு

    கடகம்-அசதி

    சிம்மம்-பரிவு

    கன்னி-விருத்தி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- பரிவு

    மகரம்-நன்மை

    கும்பம்-பயணம்

    மீனம்-கடமை

    ×