என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
    • பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-2 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி மாலை 4.43 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : பூராடம் இரவு 7 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

    இன்று சனிப்பிரதோஷம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுப்பு

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-தெளிவு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-கடமை

    கன்னி-ஆக்கம்

    துலாம்- ஓய்வு

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- நன்மை

    மகரம்-மேன்மை

    கும்பம்-உழைப்பு

    மீனம்-லாபம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சிவாலய வழிபாட்டில் சிந்தையை செலுத்தும் நாள். வருமானம் உயரும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உறவினர்கள் ஒத்துழைப்பு உண்டு.

    ரிஷபம்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். எதை செய்தாலும் தெளிவாக யோசித்துச் செய்வது நல்லது. முன்னேற்றத்தில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம்.

    மிதுனம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தனித்து இயங்குவதில் ஆர்வம் கூடும். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். பணியாளர்களின் தொல்லை அகலும்.

    கடகம்

    நண்பர்கள் நல்ல தகவலை தரும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சியை தரும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    சிம்மம்

    முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    கன்னி

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பாராட்டும், புகழும் கூடும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

    துலாம்

    நந்தி வழிபாட்டில் நலம் கிடைக்கும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    விருச்சிகம்

    பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கணிசமான தொகை கைகளில் புரளும்.

    தனுசு

    நீண்டநாள் பழகிய நண்பர் ஒருவரால் நினைத்த காரியம் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    மகரம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

    கும்பம்

    தெய்வ நம்பிக்கை கூடும் நாள். வருமானம் உயரும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மீனம்

    முயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. பயணங்கள் பலன் தரும்.

    • சிவராத்திரி அன்று ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
    • சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை விலகும். சிவராத்திரி விரதம் யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 100 அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் (குறியல்) செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்துக்கு ஈடாகாது. சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

    அன்றைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். இரவு சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ தூங்க வேண்டும். மறுநாள் சிவராத்திரி அன்று அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவ சிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் ஈசனை வணங்க வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் சிவ அர்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.

    கோவிலில் 4 காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நான்கு கால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம். சிவராத்திரியில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

    மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் நீராடி அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைக்கும். 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி.
    • சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி.

    சூரிய பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் புண்ணியமான மாதமாகவும் சுபநிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது. மாசி மாத சிறப்புகளின் மகுடம் மகாசிவராத்திரி. தேய்பிறை சதுர்தசி திதி நாள் சிவராத்திரி ஆகும். என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

    சாந்திராயனம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியின் படி இந்த மாதத்தை `மகா' மாதம் என்று கூறுவர். எனவே இந்த மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்கின்றனர்.

    பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.

    தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை சிவபெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.

    உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளுதலும் இந்த நாளில்தான் நடக்கும் என்கின்றன புராணங்கள்.

    மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி எனவும், மற்ற மாதங்களிலும் சிவன் மீது மிகுந்த பற்று இருப்பவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமான் குறித்த அறிவை அடைய உதவுவதினால் அவை மாத சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.

    மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனை வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.

    • மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையை திறந்துவைத்தார்
    • பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை திறந்திருக்கும். அதன்படி மாசி மாத பூஜைக்காக நேற்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்துவைத்தார். அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை நடை திறக்கப்பட்டபிறகு, எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்பட்டது.

    இன்று மாதாந்திர பூஜை தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம், களப பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.

    கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் நேற்று சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. நள்ளிரவு முதல் பஸ்கள் வழக்கம்போல் ஓடியதால், இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

    இதனால் பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • அகத்தியருக்கு, சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • பல்வேறு சிறப்புகள் அடங்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு, சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் அடங்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் மகர தோர வாயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நந்தி பகவான் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது.

    இதில் யாழ்ப்பாண பரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, குருகுல நிர்வாகி வேதரத்தினம், கேடிலியப்பன், கோவிலின் செயல் அலுவலர் ஜெயக்குமார், உபயதாரர் சுப்பையா பிள்ளை குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் வரலாற்று ஐதீக விழா வருகிற 18-ந் தேதியும், தேரோட்டம் 28-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.
    • சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    மலையே சிவன். சிவனே மலை. ''வானனை, மதி சூடிய மைந்தனை, தேனனை, திருவண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த ஆனனை, அடியேன்மறந்து உய்வனோ?" என்று உருகுகிறார் நாவுக்கரசர். நெருப்பு தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.

    மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

    மகா சிவராத்திரியின் போது, கோவில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலையைச் சுற்றி வருகிறார்கள். சிவராத்திரி விழா உருவானதும் இங்கு தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    • மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும்.
    • பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும்.

    சிவராத்திரி 5 வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.

    மாக சிவராத்திரி:

    மாக சிவ ராத்திரியே 'மகா சிவராத்திரி' என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவ ராத்திரி' என்ற பெயரும் உண்டு.

    யோக சிவராத்திரி:

    யோக சிவ ராத்திரியில் நான்கு வகை உண்டு. திங்கள்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் - இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி நேரம்) அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி. திங்கட் கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியிலிருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரிதான்.

    திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.

    இந்த நான்கு 'யோக' சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்தாலும், அதற்கு 'மூன்று கோடி சிவராத்திரி' விரதம் கடைப்பிடித்த பலன் கிடைக்கும்.

    மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நட்சத் திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்தச் சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம் என்பார்கள்.

    நித்திய சிவராத்திரி:

    வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் 24 நாள்களும் நித்திய சிவராத்திரி.

    பட்ச சிவராத்திரி:

    தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, 13 நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, 14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.

    மாத சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த `மாத சிவராத்திரி' என்பது, மாதத்தின் மற்ற திதி நாள்களிலும் வரும். மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, பங்குனி மாத வளர்பிறை திருதியை, சித்திரை மாதத் தேய்பிறை அஷ்டமி, வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி, ஆனி மாத வளர்பிறை சதுர்த் தசி, ஆடி மாதத் தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி, ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை மாத வளர்பிறை திருதியை ஆகிய இந்த 14 நாட்களும் மாத சிவராத்திரி எனப்படும்.

    • சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்ததினம்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-1 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி பிற்பகல் 3.11 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : மூலம் மாலை 5 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

    இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்ததினம். ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் தங்க விருஷப சேவை. திருமாலிருஞ்சோலை, ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

    கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் காலை சிறப்பு பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-திறமை

    கடகம்-ஆளுமை

    சிம்மம்-வாழ்வு

    கன்னி-போட்டி

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- வரவு

    மகரம்-யோகம்

    கும்பம்-பெருமை

    மீனம்-சிறப்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வியாபாரம் சிறப்பாக அமையும். சொந்தங்களால் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

    ரிஷபம்

    விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. மனக்குழப்பம் ஏற்படலாம். வீண் விரயம் உண்டு.

    மிதுனம்

    வளர்ச்சி கூடும் நாள். வாகன யோகம் உண்டு. இடமாற்றம் இனிமை தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். வரன்கள் வாயில் தேடிவரும்.

    கடகம்

    புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் சேரும். உதிரி வருமானம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    சிம்மம்

    வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். நெஞ்சம் மகிழும் விதத்தில் நண்பர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற செயல்படுவீர்கள்.

    கன்னி

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் சில புதுமைகளைப் புகுத்துவீர்கள்.

    துலாம்

    நினைத்தது நிறைவேறும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் கைகூடும்.

    விருச்சிகம்

    வருமானம் உயரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டு. தொழில் வளம் மேலோங்கும். கடந்த சில நாட்களாக எதிர்பார்த்த காரியம் இன்று முடிவடையும்.

    தனுசு

    யோகமான நாள். சுபச்செய்தி வந்து சேரும். முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மகரம்

    முன்னேற்றம் கூடும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

    கும்பம்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். நீண்டநாள் பிரிந்த நண்பர் ஒருவர் வந்திணைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.

    மீனம்

    இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். இடம் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    • விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
    • பொங்கல் நிகழ்வு, காப்பு களைந்து அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

    கடையம்:

    கீழக்கடையம் 18 பட்டி நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 27-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.

    விழாவில் தினமும் காலை, மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் வடக்கு உடையார் பிள்ளையார் கோவிலில் இருந்து 18 பட்டி தீர்த்தம் மேளதாளம், வானவேடிக்கையுடன் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். இதையடுத்து ஒவ்வொரு நாளும் அன்னதானம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பூஜைகளுடன் விழா நடைபெற்றன.

    நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சப்பர ஊர்வலம், மதியம் அல தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மதிய கொடை சிறப்பு வழிபாடு, அம்மன் ஊர்விளையாடல், இரவு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு அல தீர்த்தம் கொண்டு வரப்பட்டு நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் சாம கொடை, படைப்பு தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 2 மணிக்கு அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வருதல், அதிகாலை 4 மணிக்கு பத்திரகாளியம்மன், முப்புடாதியம்மன் தேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சப்பர ஊர்வலம் சென்று படைப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் இன்று முதல் 16-ந்தேதி வரை இரவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதையடுத்து 17-ந்தேதி செவ்வாய்க்கிழமை 8-ம் பொங்கல் நிகழ்வு, காப்பு களைந்து அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா நடத்தும் 7-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள், கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • சில தெய்வங்களின் கடுமையான அல்லது கோப வடிவங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல.
    • வீட்டு பூஜை அறை தொடர்புடைய வேறு சில விதிகளையும் மனதில் கொள்ள வேண்டும்.

    தினசரி வழிபாடு என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதாவது கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டு பூஜை அறையை கோவிலாக கருதி பயபக்தியுடன் வழிபடுவார்கள். இதனால் பூஜை அறையை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைக்க வேண்டும். பூஜை அறையில் உடைந்த அல்லது பயனற்ற பொருட்களை வைக்கக்கூடாது. அதே போல் பூஜை அறையில் எத்தனை சிலைகள் வைக்க வேண்டும் என்பது விதிமுறை உள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் ஏற்படும். அதன்படி, வீட்டு பூஜை அறையில் எத்தனை சிலைகள் வைக்க வேண்டும், எந்த சிலைகளை வைக்கக்கூடாது, சிலைகளைக் கையாள சரியான முறை என்ன என்பதையும் பார்ப்போம்...

    பூஜை அறையில் இந்த சிலைகளை மட்டும் வைத்திருங்கள்

    வாஸ்து சாஸ்திரம் மற்றும் நம்பிக்கைகளின்படி, வீட்டு பூஜை அறை புனிதமானதாகக் கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒருவர் வீட்டு பூஜை அறையில் அதிக சிலைகளை வைக்கக்கூடாது. குறைந்த எண்ணிக்கையிலான சிலைகள் பராமரிக்க உதவுவதோடு தியானம் மற்றும் வழிபாட்டை எளிதாக்குகின்றன. பொதுவாக, குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து சிலைகள் பொருத்தமானவை. இது பூஜை அறையில் நேர்மறை ஆற்றலைப் பராமரிக்கிறது மற்றும் எளிதாக சுத்தம் செய்ய அனுமதிக்கிறது.

    தவறுதலாக கூட இந்த சிலைகளை பூஜை அறையில் வைக்காதீர்கள்

    அமைதியான மற்றும் மென்மையான வடிவங்களைக் கொண்ட சிலைகளை வீட்டு பூஜை அறையில் வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சில தெய்வங்களின் கடுமையான அல்லது கோப வடிவங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. கடுமையான அல்லது கோப வடிவங்களைக் கொண்ட நடராஜர், சனீஸ்வரர் அல்லது ராகு-கேது சிலைகள், மா காளி சிலை அல்லது கால பைரவரின் கடுமையான வடிவம் ஆகியவற்றை வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடாது. அத்தகைய சிலைகள் சக்தி மற்றும் தவத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. எனவே, அவற்றை வீட்டு பூஜை அறையில் வைப்பது சரியல்ல. பொதுவாக, அமைதியான மற்றும் மென்மையான வடிவங்களைக் கொண்ட சிலைகளை வீட்டில் வைக்க வேண்டும். இந்த சிலைகளின் ஆற்றல் வீட்டின் சூழ்நிலையை அமைதியாகவும், நேர்மறையாகவும் வைத்திருக்கிறது.

    இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

    வீட்டு பூஜை அறை தொடர்புடைய வேறு சில விதிகளையும் மனதில் கொள்ள வேண்டும். முதலில், வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தில், வடகிழக்கு மூலை வடகிழக்கு திசை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த திசை மிகப்பெரிய சக்தி மூலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு பூஜை அறை இருப்பது பலனளிக்கும். அனைத்து தெய்வங்களும் இந்த திசையில் வசிப்பதாகவும் நம்பப்படுகிறது. கூடுதலாக, பூஜை அறையில் உள்ள சிலைகளுக்கு இடையே குறைந்தது 1-2 அங்குல தூரம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். படுக்கையறை அல்லது கழிப்பறைக்கு அருகில் பூஜை அறை ஒருபோதும் அமைந்திருக்கக்கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். 

    ×