என் மலர்
ரஷ்யா
- ரஷியா அருகே 2 அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
- அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்கிறோம் என ரஷியா அறிவித்துள்ளது.
மாஸ்கோ:
ரஷியாவிற்கு அருகே 2 அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஷியாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்திருந்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ரஷியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம்.
அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
- இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.
உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் சண்டை உட்பட பல போர்களை தடுத்து நிறுத்தியதாக தம்பட்டம் அடுத்துவரும் டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த முடியவில்லை.
இதனால் கோபமடைந்த டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாக குறைத்தார்.
ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக பேசிய ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "அமெரிக்காவின் சட்டவிரோத ஒருதலைபட்சமான வரிவிதிப்பை ரஷ்யா எப்போதும் எதிர்த்து நிற்கும். புதிய காலனித்துவம் மூலம் உலகத்தை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் போக்கை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.
- பசிபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
- ரஷியாவின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவானது.
இதையடுத்து அப்பகுதியை சுனாமி அலைகள் தாக்கியது. மேலும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் அலாஸ்கா, ஹவாய் ஆகியவற்றை சுனாமி தாக்கியது. பசிபிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்த நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷியாவின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள 15 ஆயிரம் அடி உயரம் கொண்ட க்ளூச் செவ்ஸ்காய் எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றன. இந்த எரிமலை வெடிப்பை ரஷிய அறிவியல் கழகத்தின் யுனைடெட் புவி இயற்பியல் சேவை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பெரிய சுனாமி அச்சுறுத்தல் முற்றிலும் கடந்துவிட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார். ஆனாலும் வடக்கு கலிபோர்னியா கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது.
சிலி நாடு தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை நீட்டித்து உள்ளது. இந்த நிலையில் பசிபிக் கடல் பகுதியில் மேலும் நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
- ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மருத்துவர்கள் பீதியடையாமல் அறுவை சிகிச்சையை முடித்தனர்.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷியா, ஜப்பான், அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது கம்சட்கா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் அதிர்ந்த போதிலும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மருத்துவமனை கட்டடம் குலுங்கியது. அப்போது மருத்துவ ஊழியர்கள் அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள ஸ்ட்ரெச்சரை இறுக்கமாகப் பிடித்தனர்.
மருத்துவர்கள் பீதியடையாமல் அறுவை சிகிச்சையை முடித்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், நோயாளி குணமடைந்து வருவதாகவும் ரஷிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
- ரஷியாவின் கிழக்கு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான், ஹவாய், அலாஸ்கா மற்றும் ரஷியாவின் கிழக்கு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்தின் விமானம் மாயம்.
- விமானத்தில் 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகள் இருந்தனர்.
ரஷியாவின் கிழக்கே வெகு தூரத்தில் சீனா எல்லையில் உள்ள பிராந்தியம் அமுர். இந்த பிராந்தியத்தில் டிண்டா என்ற நகர் உள்ளது. இந்த நகருக்கு இன்று சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான AN-24 பயணிகள் விமானம் இன்று ஐந்து குழந்தைகள் உள்பட 43 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 49 பேருடன் சென்று கொண்டிருந்தது.
விமானம் டிண்டா அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து திடீரென விலகியது. அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானத்தின் பாகங்கள் சீனா எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பின்னர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடுமையான தடைகளை விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார்.
- யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் ஏற்கவில்லை.
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 நாட்கள் கெடு விதித்தார். ரஷியா போரை தொடர்ந்தால் அந்நாட்டின் மீது 100% கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார்.
இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷியா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார். தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது என்று தெரிவித்தார்.
டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் நமது அதிபர் புதினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது.
யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை (We Dont care). வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். அதிபர் புதின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார்" என்று தெரிவித்தார்.
- உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.
- ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மாஸ்கோ:
உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.
போர் தொடர்ந்து நீடித்து வருவதால் இரு தரப்பிலும் ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷியா தரப்பில் சண்டையிட போதுமான ஆட்கள் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை களம் இறக்கி சண்டையிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ரஷியா வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் அரசுமுறை பயணமாக வடகொரியாவுக்கு இன்று செல்கிறார். 3 நாட்கள் பயணமாக இதில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னைச் சந்தித்து ராணுவ உதவிகளைக் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தலாம் என பாதுகாப்பு அச்சுறுத்தலால் விமானப் போக்குவரத்து பாதிப்பு.
- கடந்த வருடம் மே மாதம்தான் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் அதிரடியாக நீக்கினார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் கவர்னராக செயல்பட்டு வந்தார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.
- உக்ரைனுடனான போரில் சுமார் 250,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது.
பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ரஷியாவின் மக்கள்தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாகாணங்களின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை ரஷியா தொடங்கியிருந்தது. இருப்பினும், இந்த திட்டத்தால் பெரியவர்கள் மட்டுமே பயனடைந்தனர். இது இப்போது பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2023 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக உள்ளது. இது முன்பு 2.05 ஆக இருந்தது. இதற்கிடையில், டீனேஜ் கர்ப்பம் குறித்த கணக்கெடுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பை ரஷிய பொது கருத்து ஆராய்ச்சி மையம் நடத்தியது.
இதில், 43 சதவீதம் பேர் ரஷியாவின் புதிய கொள்கையை ஆதரித்தனர், 40 சதவீதம் பேர் எதிர்த்தனர்.
இதற்கிடையே உக்ரைனுடனான போரில் சுமார் 250,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இளம் ரஷியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது.
ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது. கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரஷியா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 75 சதவீத நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
- குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுமியில் சண்டை நடைபெற்று வருகிறது.
- படை வீரர்களை சந்திக்கும்போது கொல்லப்பட்டதாக தகவல்.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள சுமி பிராந்தியத்தின் அருகே உள்ள குர்ஸ்க் பகுதியில் சண்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இருநாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் வகையில் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷியாவின் கப்பற்படை துணைத் தளபதி மேஜர் ஜெனரல் மிக்கைல் குட்கோவ், சண்டை நடைபெறும் இடத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்போது சண்டைக்கான பணியில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த விளக்கத்தை ரஷிய ராணுவம் வெளியிடவில்லை. குட்கோவ் கடந்த மார்ச் மாதம் கடற்படைத் தளபதியின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, கடற்படையின் 155வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தார்.
- ஐ.எஸ். (Islamic State), ரஷியாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன்மீது கவனம் செலுத்தவில்லை.
- மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
யூரேசியன் பொருளாதார யூனியன் (EAEU) மாநாட்டில் கலந்து கொண்ட ரஷியா அதிபர் புதின், ரஷியாவில் பிரிவினைவாதத்தை மேற்கத்திய நாடுகள் ஊக்கப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக புதின் கூறியதாவது:-
ஐ.எஸ். (Islamic State), ரஷியாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன்மீது கவனம் செலுத்தவில்லை. மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ரஷியாவிற்கு எதிராக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று விரும்பினர். நமது நாட்டில் பிரிவினைவாதத்தை கூட்டு மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்தபோது, பயங்கரவாதம் போன்ற தாக்குதல் நடத்த அது ஒரு கருவியாக இருந்தது.
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் ரஷியா தொலைக்காட்சியில் "உக்ரைன் மோதலில் தீர்வு காண்பது மற்றும் நேட்டோ செலவினத்தை விரிவுப்படுத்துதல் தொடர்பான அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு தொடர்ந்து சதி செய்து வருகிறது.
ரஷியாவின் ஆக்கிரமிப்புத்தன்மையை சுட்டிக்காட்டி, நேட்டோ தற்போது அதன் உறுப்பினர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக பாதுகாப்பு செலவினங்களை உயர்த்தவும், ஐரோப்பாவில் ராணுவக் கட்டமைப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும்போது அந்த அமைப்பின் உறுப்பினர்கள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகிறார்கள். சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் எவ்வாறு வந்துள்ளோம் என்பது பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை" எனப் பேசியுள்ளார்.






