என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசன் வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார்.
- என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். டொனால் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டொனால்டு டிரம்ப் அதிகாரிகளை அறிவித்து வருகிறார். வெற்றி உரையின்போது ஜே.டி. வின்ஸை துணை அதிபராக அறிவிப்பதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய தேர்தல் பிரசார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார். இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசன் வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார். என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். அவர் கடினமானவர். புத்திசாலி, புதுமையானவர். அத்துடன் உலகளவில் போற்றப்படுகிறவர். மதிக்கப்படுகிறவர் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சூசி (சூசன் வைல்ஸ்) தொடர்ந்து அயராது உழைக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி இருப்பது மிகவும் தகுதியான மரியாதை. அவர் நம் நாட்டைப் பெருமைப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
- தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள்.
- மக்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அதிபர் பைடன்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உலக வரலாற்றில் சுயாட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டு உள்ளது.
மக்கள் அமைதியாக வாக்களித்து தங்கள் தலைவரை தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே எப்போதும் மேலோங்கும்.
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பை அழைத்து பாராட்டு தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடப்பதை, அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற எனது நிர்வாகத்திற்கு உத்தரவிடுவேன் என அவரிடம் தெரிவித்துள்ளேன். மக்களும் அதனை விரும்புகின்றனர்.
கமலா ஹாரிஸ் எனது கூட்டாளி. பொது சேவகர். அவர் தனது முழுமனதுடன் கடுமையான முயற்சியில் ஈடுபட்டார்.
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். மக்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்க தேர்தல் முறையின் ஒருமைப்பாடு பற்றிய கேள்விகள் இனி வராது என நம்புகிறேன். அந்த முறை நேர்மையானது. நியாயமானது. வெளிப்படையானது என்பதை நம்பலாம்.
ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என தெரிவித்தார்.
- சுனிதா வில்லியம்சின் உடல் எடை குறைந்ததாக வெளியான தகவலை நாசா மறுத்துள்ளது.
- சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்சின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை நாசா மறுத்துள்ளது.
இந்நிலையில், நாசா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல் துறை தெரிவித்துள்ளது.
- விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
அரிசோனா விமான நிலையத்தில் ஹோண்டா HA-420 ரக ஜெட் விமானம் நேற்று மாலை 4.40 மணியவில் புறப்பட முயன்றபோது விமான நிலையத்தின் சுற்றுப்புற வேலி மீது மோதி, அருகில் இருந்த வாகனங்கள் மீதும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
விமானம் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதில், 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் தீயில் கருகி உயிரழிந்தனர்.
இதில், விமானத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெசா காவல் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில், அரிசோனாவைச் சேர்ந்த ஸ்பென்சர் லிண்டால், 43, ரஸ்டின் ராண்டால், 48, ட்ரூ கிம்பால், 44 மற்றும் கிரஹாம் கிம்பால், 12 என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்தாவது நபர் உயிர் தப்பியதாகவும், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
- பாலஸ்தீன போரை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று எனக்கு தெரியும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து, உடனே வாக்குகளை எண்ணும் பணிகளும் துவங்கின. அமெரிக்காவில் அதிபர் பதவியை பெற வேட்பாளர் குறைந்தபட்சம் 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னணியில் இருந்து வந்த குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 295 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை வென்றுள்ளார். வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
டொனால்டு டிரம்ப் இரண்டவாது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி எடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் வாக்கு சேகரிப்பின் அங்கமாக டொனால்டு டிரம்ப் யு.எஃப்.சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, யு.எஃப்.சி. வீரர் கபீப் நூர்மகோமெடோவை சந்தித்து பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவின் படி முதலில் பேசிய கபீப், "டொனால்டு டிரம்ப்-இடம் பாலஸ்தீன போரை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று எனக்கு தெரியும்," என்றார். இதற்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், "நாம் நிறுத்துவோம். நான் போரை நிறுத்துவேன்," என்று தெரிவித்தார்.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் விரைந்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், டிரம்ப் கொடுத்த வாக்குறுதி தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் விடாமல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிகிறது.
- தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார்.
- எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 13 சதவீதம் உயர்ந்து 286.10 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது.
அதிபர் தேர்தலில் டிரம்புக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார். எக்ஸ் வலைதளத்தில் டிரம்புக்கு ஆதரவாக தினமும் கருத்துக்களை பதிவிட்டார். மேலும் டிரம்ப் பிரசாரத்துக்காக நன்கொடையை வாரி வழங்கினார். இதற்கிடையே தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார்.
இந்த நிலையில் டிரம்பின் வெற்றிக்கு பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்தது. அவரது சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.1.68 லட்சம் கோடி) அதிகரித்து 285.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சொத்து மதிப்பு 7.73 சதவீதம் உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 13 சதவீதம் உயர்ந்து 286.10 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது. இதேபோல் அவரது மற்ற நிறுவன பங்குகளின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்தன. டிரம்ப் தனது பிரசாரத்தின்போது, தான் அதிபராக வெற்றி பெற்றால் எலான் மஸ்க்குக்கு மந்திரி பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தலின் முடிவு நாம் விரும்பியது, போராடியது, எதற்காக வாக்களித்தோம் என்பதற்கானது அல்ல.
- அமைதியான முறையில் அதிகார மாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் ட்ரம்பிடம் கூறினேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இந்திய நேரப்படி நேற்று உரையாற்ற இருந்தார். ஆனால் தோல்வியை நோக்கி சென்றதால் உரையாற்றவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:-
* ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்
* நமது சுதந்திரத்திற்காக போராடுவது கடின உழைப்பை எடுக்கும். ஆனால் நான் எப்போதும் சொல்வதுபோல் நாங்கள் கடின உழைப்பை விரும்புகிறோம். நம் நாட்டிற்கான போராட்டம் எப்போதும் மதிப்புக்குரியது
* சில நேரங்களில் போராட்டத்தில் வெற்றி கிடைக்க சிறிது நேரம் எடுக்கும். ஆனால் நாம் வெற்றிபெற மாட்டோம் என்று அர்த்தமல்ல. முக்கிய விஷயம் என்னவென்றால், ஒருபோதும் கைவிடாதீர்கள்.
* இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும் பிரசாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன்.
* அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் தொடரும்.
* இன்று முன்னதாக, நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புடன் பேசினேன், அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்
* டிரம்ப் மற்றும் அவரது குழுவின் மாற்றத்திற்கு நாங்கள் உதவுவோம் என்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் ட்ரம்பிடம் கூறினேன்
* தேர்தலில் போட்டியிட்டது பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
* இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது, போராடியது, எதற்காக வாக்களித்தோம் என்பதற்கானது அல்ல.
* முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்
* நாம் போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதி வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக எரியும்.
இவ்வாறு கமலா ஹாரிஸ் தனது உரையின்போது தெரிவித்தார்.
- நாங்கள் சண்டையை தொடங்கப் போவதில்லை. சண்டையை நிறுத்த போகிறோம்- டிரம்ப்.
- உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்ப்பு.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வெளியுறவுக் கொள்கையில் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தற்போது உக்ரைன்- ரஷியா இடையேயும், இஸ்ரேல்- காசா, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையேயும் சண்டை நடைபெற்று வருகிறது. நேற்றைய வெற்றி உரையில் நாங்கள் சண்டையை தொடங்கப் போவதில்லை. சண்டையை நிறுத்த போகிறோம் எனத் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம். ஆனால் எங்களுடைய நிலைமைகள் (conditions) மாற்றப்படவில்லை. ரஷியா தங்கள் நாட்டின் நலனில் உறுதியாக நிலைத்துகிறது. உக்ரைன் மோதலில் தங்களுடைய இலக்கை அடையும் வகையில் செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடரும் என்பதை ரஷியா மறைமுகமாக தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்க மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. டொனால்டு டிரம்ப் அதிபர் ஆனதும் இது தொடருமா? என்பது வைத்துதான் உக்ரைன்- ரஷியா போர் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
- அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
- பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஸ்கான்சினில் வெற்றி பெற்றதன் மூலம் அதிபர் பதவிக்கு தேவையான 270 தேர்தல் வாக்குகளை டிரம்ப் பெற்றார்.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். துணை அதிபர் கமலா ஹாரிஸ் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவும், மாற்றம் குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகை வரும்படி அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகை ஒரு தேதியை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
- பிரதமர் மோடி, தனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிபராக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த, டிரம்புடன் இணைந்து பணிபுரிவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா மாபெரும் தேசம். பிரதமர் மோடி மகத்தான மனிதர். பிரதமர் மோடி, இந்தியாவை உண்மையான நண்பராகக் கருதுகிறேன். உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியுடன் தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-------------
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஸ்விங் ஸ்டேட்டசில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.
அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
கருத்துருக்கணிப்புகளுக்கு முரணாக ஆரம்பத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வழக்கமாக இழுபறி ஏற்படும் ஸ்விங் ஸ்டேட்சிலும் டிரம்ப் வெற்றி பெற்றார். எலக்ட்டோரல் வாக்குகளாகவன்றி மக்கள் செலுத்திய வாக்குகள் அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி அதிக வாக்கு சதவீதத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு மொத்தமாக 70,952,259 வாக்குகள் [51%] கிடைத்துள்ளது. கமலாவின் ஜனநாயக கட்சிக்கு 66,046,171 [47.50%] வாக்குகள் கிடைத்துள்ளது.
மொத்தம் உள்ள 50 மாகாணங்களின் வெற்றிப் பட்டியல்
டிரம்ப் வென்ற மாகாணங்கள் - அலபாமா, அலாஸ்கா, அரிசோனா , ஆர்கன்சாஸ், புளோரிடா, ஜார்ஜியா , இடாஹோ, இன்டியானா, அயோவா, கான்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிச்சிகன், மிஸிஸிப்பி, மிசெளரி, மோன்டனா, நெப்ரஸ்கா, நெவேடா, வடக்கு கரோலினா, வடக்கு டகோடா, ஓஹையா, ஆக்லஹோமா,பென்சில்வேனியா, தெற்கு கரோலினா, தெற்கு டகோடா, டென்னஸ்ஸி, டெக்ஸாஸ், உடா ,மேற்கு விர்ஜீனியா, விஸ்கான்சின், வியாமிங் என 31 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸ் வென்ற மாகாணங்கள் - கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட் , டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மேரிலான்ட், மாஸசூட்ஸ் , மின்னசோட்டா, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், ஓரிகான், ரோட் தீவு, வெர்மான்ட், விர்ஜீனியா, வாஷிங்டன், டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியா 19 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
- நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.09 ஆக இருந்தது.
சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அவ்வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.84.33-ஆக சரிந்துள்ளது.
நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.09 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.84.33-ஆக சரிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் வெற்றி, இந்திய ரூபாய் மதிப்பு மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






