என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் உணவு சாப்பிட்டப்படியே நடந்து முடிந்த தேர்தல் குறித்து நீண்டநாள் நண்பர்கள்போல சகஜமாக பேசுகிறார்கள்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஒருநாள் கூட ஆகாதநிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.

    அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்கு சென்று டிரம்ப் சந்தித்துள்ளார்.

    இந்தநிலையில் அரசியல் எதிரிகளாக கருதப்படும் இவர்கள் நண்பர்களாக இருந்து விடுமுறையை இணைந்து கொண்டாடுவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் உணவு சாப்பிட்டப்படியே நடந்து முடிந்த தேர்தல் குறித்து நீண்டநாள் நண்பர்கள்போல சகஜமாக பேசுகிறார்கள்.

    பின்னர் நாம் ஒருவேளை இந்த இடத்தில் இல்லாமல் இருந்தால் என யோசிக்கிறார்கள். அப்போது அவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாடி ஐஸ்கிரீம் சுவைப்பது, குதிரை சவாரி செய்வது, கோல்ப் விளையாடுவது, இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஆற்றில் மீன்பிடிப்பது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என ஈடுபடுகிறார்கள்.

    ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஒருநாள் கூட ஆகாதநிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.



    • அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.
    • 4 ஆண்டுகள் பயணிக்கும் இந்த திட்டத்துக்கு "Skip Forward" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடையும் நிலையில் பதவியேற்பு அமைச்சகதுக்கானவர்களை தேர்வு செய்யும் வேளைகளில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

    ஜோ பைடன் ஆட்சி போலல்லாது டிரம்ப் ஆட்சியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற பயம் இப்போதே பலரை தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

    அடுத்த நான்கு ஆண்டுகள் கடலிலேயே உலகத்தைச் சுற்றி வரும் பயண திட்டத்தை Villa Vie Residences சொகுசு கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் Villa Vie Odyssey க்ரூஸ் கப்பல் மூலம் 4 ஆண்டுகள் பயணிக்கும் இந்த திட்டத்துக்கு "Skip Forward" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த நான்கு வருட பேக்கேஜில், டபுள் ரூமில், ஒரு நபருக்கு $159,999 மற்றும் ஒரு நபர் தங்கும் சிங்கிள் அறைகளுக்கு $255,999 கட்டணம் ஆகும். அடுத்த நான்கு ஆடுகளில் 140 நாடுகளில் உள்ள 425 துறைமுகங்களுக்குச் சென்று

    7 கண்டங்களையும் அவற்றில் உள்ள 13 "உலக அதிசயங்கள்" மற்றும் 100 க்கும் மேற்பட்ட தீவுகளையும் சுற்றி வர முடியும்.

    சுமார் 600 பேர் இதில் பயணிக்கலாம் இப்போது கப்பல் ஏறினால் அடுத்து 2029 ஆம் ஆண்டுதான் இவர்கள் மீண்டும் அமெரிக்கா வந்து சேர்வார்கள்

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
    • சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 6-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.

    ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. விண்வெளியில் சிக்கி உள்ள இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.

    இதில் சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனக்கு உடல்நல பாதிப்பு இல்லை என்று சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

    விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நலம் குறித்து வீடியோ நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:-

    நான் இங்கு வந்தபோது இருந்த அதே எடையுடன் தான் இருக்கிறேன். தசை மற்றும் எலும்பு அடர்த்தியில் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக விண்வெளி வீரர்கள் பின்பற்றும் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவதன் காரணமாகவே எனது உடலின் தோற்றம் மாறி விட்டது.

    சைக்கிளிங்க், டிரெட் மில்லில் ஓடுதல் மற்றும் பளு தூக்குதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை வழக்கம்போல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் என உடலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். எனது உடல் மாறி இருந்தாலும் அதே எடையில்தான் இருக்கிறேன் என்றார்.

    • அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.
    • துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இதில் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.

    அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையை வரையறுத்து உள்ள அச்சமற்ற உணர்வை நமது உளவுத்துறை சமூகத்திற்கு கொண்டு வருவார். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்றார்.

    தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கிய மானவர். பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராக வும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

    டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார். ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. ஆவார்.


    ஆனால் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவரது தாய் கரோல் கப்பார்ட் இந்துவாக மதம் மாறினார். இதனால் அவர் தனது 5 குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார்.

    துளசி கபார்ட் ராணு வத்தில் பணியாற்றி லெப்டி னன்ட் கர்னல் அந்தஸ்து வரை உயர்ந்தார். ஈராக்கில் ராணுவ பணியை மேற்கொண்டார். முதலில் ஜனநாயக கட்சியில் இருந்த துளசி கடந்த 2022-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் டிரம்பின் குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவரது கொள்கைகள் மற்றும் பேச்சுக்கள் டிரம்பை கவர்ந்தது. இதன்மூலம் துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.

    • டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.
    • அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு தற்போதைய அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. அதிபர் ஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார்.

    அப்போது அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும். அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சீராக முடியுமோ அவ்வளவு சீராக இருக்கும் என்றார்.

    4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    நியூயார்க்:

    டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ரியாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கோகோ காப் கோப்பை வென்று அசத்தினார்.

    இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

    இதன் ஒற்றையர் தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,416 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது.

    போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (8,370 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

    அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (6,530 புள்ளி), இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-வது இடத்திலும் (5,344), சீன வீராங்கனை ஹுயின்வென் ஜெங் 5வது இடத்திலும் (5,340) உள்ளனர்.

    • புளோரிடாவில் 3-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
    • இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கான பாராளுமன்ற காகசின் இணைத் தலைவராக உள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள மந்திரிகள், அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் வால்ட்சை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

    முன்னாள் ராணுவ அதிகாரியான மைக்கேல் வால்ட்ஸ், புளோரிடா மாகாணத்தில் 3-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கான பாராளுமன்ற காகசின் இணைத் தலைவராக உள்ளார். காகஸ் என்பது இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த பிரதிநிதிகள் சபையில் உள்ள எம்.பி.க்களின் இருகட்சி கூட்டணியாகும்.

    இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய மந்திரியாக செனட்டராக உள்ள மார்கோ ரூபியோவை டிரம்ப் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்பதவி இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு கிடைக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அவரை டிரம்ப் நிராகரித்துள்ளார்.

    ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியூயாா்க் 21-வது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எலீஸ் ஸ்டெபானிக்கை டிரம்ப் நியமித்துள்ளாா். எல்லை விவகாரங்களுக்கான பொறுப்பாளராக, குடியேற்றம் மற்றும் சுங்க விதிகள் அமலாக்கத் துறையில் அதிபரின் இயக்குநராகப் பதவி வகித்துள்ள டாம் ஹோமனை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளாா்.

    • ஜனவரி முதல் வாரம் வரை ஜோ பைடன் அதிபராக இருப்பார்.
    • இந்த இடைக்காலத்தில் கமலா ஹாரிஸை முதல்வராக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால் டிரம்ப், ஜனநாயக கேட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்தார். இதனால் அமெரிக்காவின் முதன் பெண் அதிபர் என்ற சாதனையை படைக்க முடியாமல் கமலா ஹாரிஸ் ஏமாற்றம் அடைந்தார்.

    இந்தநிலையில் ஜோ பைடன் ராஜினாமா செய்து குறுகிய காலத்திற்கு கமலா ஹாரிஸை அதிபர் ஆக்கினால் முதல் பெண் அதிபர் என்ற சாதனையாகிவிடும் என கமலா ஹாரிஸின் முன்னாள் தகவல்தொடர்பு இயக்குனர் ஜமால் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜோ பைடன் அற்புதமான அதிபர். அவர் தெரிவித்த ஏராளமான வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். அங்கு ஒரு வாக்குறுதி மீதமுள்ளது. அதை அவர் ஒரு இடைக்கால உருவமாக நிறைவேறற முடியும். அடுத்த 30 நாட்களுக்கான அதிபர் என்பதை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸை நியமிக்க வேண்டும்.

    இது ஜோ பைடனின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. இதை அவர் செய்து, தனது கடைசி வாக்குறுதியை நிறைவேற்றினால், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47-வது அதிபராகும் வாய்ப்புள்ளது" என்றார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு டிரம்ப் பேசினார்
    • நேர்மறையான சூழலை ஏற்படுத்தும் என்று ரஷியா அதிபர் மாளிகை [கிரம்லின்] செய்தித்தொடர்பாளர் டிமிட்ட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்

    உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் நின்ற முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்தபோது சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார்.

    அமெரிக்க அதிபர் ஒருவர் முதல் முறையாக வட கொரியாவுக்கு சென்று அந்நாட்டு அதிபரை சந்திப்பதெல்லாம் டிரம்ப்பின் ஆட்சி காலத்திலேயே நடந்தது. இந்நிலையில் மீண்டும் அதிபராக உள்ள டிரம்ப் ஜனவரியில் பதவி ஏற்க உள்ளார்.

    ஆனால் அதுவரை காத்திருக்காமல் தற்போதே சர்வதேச சூழலை கையால தொடங்கியுள்ளார் டிரம்ப். இஸ்ரேல்- பாலஸ்தீன போர் மற்றும் உக்ரைன் - ரஷியா போர் ஆகியவை டிரம்ப் முன்னாள் இருக்கும் மிகப்பெரிய சவால்கள் ஆகும்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு டிரம்ப் சமீபித்தில் பேசினார். இந்நிலையில் தற்போது ரஷிய அதிபர் புதின் உடனும் தொலைப்பேசி வாயிலாக டிரம்ப் உரையாடி உள்ளார்.

    புளோரிடாவில் உள்ள தனது மார்- இ- லாகோ எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வரும் டிரம்ப் அங்கு வைத்து புதினுக்கு போன் செய்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உரையாடலில் உக்ரைன் போரை மேற்கொண்டு தீவிரப்படுத்த வேண்டாம் என்று டிரம்ப் புதினை வலியுறுத்தியதாக தெரிகிறது.

     

    போரை நிறுத்துவதற்கான தீர்வு குறித்தும் இந்த போன் காலில் பேசப்பட்டுள்ளதாக வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் எந்நேரமும் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை நிறுவ முடியும் என்று டிரம்ப் புதினிடம் கூறியதாக தெரிகிறது. ஐரோப்பா - அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ நாடுகளில் சேர முயன்றதால் உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 இல் போர் தொடுத்தது.

    அதுமுதல் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் மற்றும் ராணுவ பலத்தை வழங்கி வருகிறது. முன்னதாக டிரம்ப் அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், அமெரிக்கா விரும்பினால் தொடர்பை தொடருவோம் என்று தெரிவித்திருந்தார்.

    மேலும் டிரம்ப் அதிபவராது நேர்மறையான சூழலை ஏற்படுத்தும் என்று ரஷியா அதிபர் மாளிகை கிரம்லின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ட்ரி பெஸ்கோவ் நேற்றைய தினம்[ஞாயிற்றுகிழமை] தெரிவித்தார்.

     

    • 50 மாகாணங்களில் 49 மாகாணங்களின் டிரம்ப் 301 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    • வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஸ்விங் மாகாணங்கள் ஆகும்.

     உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து அபார வெற்றி பெற்றார்.

    அமெரிக்க தேர்தல் நடைப்முறைப்படி 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்கள். அந்த வகையில் 50 மாகாணங்களில் 49 மாகாணங்களின் டிரம்ப் 301 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 226 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    வெற்றியை மாகாணங்களாக வகைப்படுத்தப்பட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ் வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவையும் இந்த முறை டிரம்ப்புக்கு அமோக ஆதரவளித்துள்ளன.

     

    இதில் அரிசோனா மாகாணத்தில் முடிவு மட்டும் வெளியாகவில்லை. அங்கு அதிகளவில் தபால் ஓட்டுகள் பதிவானவதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

    இந்த நிலையில் மற்ற 6 ஸ்விங் மாகாணங்களில் வெற்றி பெற்ற டிரம்ப் தற்போது அரிசோனாவிலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாகாணங்களின் தேர்தல் முடிவுகளில் டிரம்பின் வாக்கு எண்ணிக்கை 312-ஆக உயர்ந்தது. கமலா ஹாரிஸ் 226 வாக்குகள் பெற்றார்.

    இதற்கிடையே வருகிற 13-ந்தேதி டிரம்ப்-ஜோபைடன் அதிகார பரிமாற்றம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார்கள். வரும் ஜனவரி மாதத்துடன் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ, டிரம்புக்கு நெருக்கமாக இருந்தார்.
    • இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, கடந்த டிரம்ப் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக பணியாற்றினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டி யிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் 2-வது முறையாக அதிபராகி உள்ளார்.

    தற்போது தனது அரசாங்கத்தில் இடம் பெற உள்ள மந்திரிகள், ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்குக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் டிரம்ப் தனது கடந்த அரசாங்க மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த நிக்கி ஹாலே, மைக் பாம்பியோ ஆகியோருக்கு பதவி வழங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் தூதர் நிக்கி ஹாலே, முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரை எனது நிர்வாகத்தில் சேர அழைக்க மாட்டேன். முன்பு அவர்களுடன் பணியாற்றியதை நான் பாராட்டினேன்.

    நமது நாட்டிற்கு அவர்கள் செய்த சேவைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக்குங்கள். தற்போது மந்திரிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, கடந்த டிரம்ப் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக பணியாற்றினார். இது அமைச்சரவை அந்தஸ்து பெற்ற பதவியாகும். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் டிரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே போட்டியிட்டார்.

    பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ, டிரம்புக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் அவருக்கு பதவி வழங்கப்பட வில்லை.

    • டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு 4B இயக்கம் ஆன்லைனில் எழுச்சி.
    • பெண்கள் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க பெண்கள் மத்தியில்4B என்ற இயக்கம் பிரபலமாகி உள்ளது. இந்த இயக்கதில் இணைவோர் உடலுறவு, டேட்டிங், திருமணம், குழந்தைகள் வேண்டாம் என்று வாதிடுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

    தென் கொரியாவில் கடந்த சில காலமாக பிரபலமாக இருந்து வரும் 4B இயக்கம், தற்போது அமெரிக்க பெண்களையும் ஈர்த்துள்ளது. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு 4B இயக்கம் ஆன்லைனில் எழுச்சியைக் கண்டது.

    டொனல்டு டிரம்பின் வெற்றி- ஆண் வாக்காளர்களால் சாத்தியமாகி இருப்பதாகவும், சில இளம் அமெரிக்க பெண்கள் ஆண்களைப் புறக்கணிப்பதைப் பற்றி பேச துவங்கியுள்ளனர். இந்த விவகாரம் டிக்டாக் மற்றும் ஆன்லைனில் டிரெண்ட் ஆக மாறியுள்ளது. 4B இயக்கம் ஆண்களை பெண்கள் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது.

    4B எனப்படும் தென் கொரிய இயக்கமானது ஆண்களை புறக்கணிக்கும் ஒருவகை சத்தியம் செய்வதாகும். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, 4பி இயக்கத்தில் இணைவதாக பல அமெரிக்க பெண்கள் சத்தியம் செய்து வருகின்றனர். 4 எண்கள் (bi என்றால் கொரிய மொழியில் "இல்லை"). இது ஆண்களுடன் டேட்டிங் செய்ய மறுப்பது, ஆண்களுடனான பாலியல் உறவுகள், வேற்று பாலின திருமணம் மற்றும் பிரசவம் ஆகியவற்றை மறுப்பது ஆகும்.

    ×