என் மலர்
பிரிட்டன்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் குடராமெட்ரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் வெரோனிகா குடராமெட்ரோவா-பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டென்ஸ் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ-தைவானின் சு-வெய் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய குடராமெட்ரோவா ஜோடி 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- இறுதிப் போட்டியில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் தலா 44 ரன்களில் வெளியேறினர்.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதம் கடந்து 100 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 74 ரன்னிலும், ஜடேஜா அரை சதம் கடந்து 72 ரன்னில் வெளியேறினார். நிதிஷ்குமார் 30 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்திய அணி துல்லியமாக பந்து வீசியது. ஜோ ரூட் 40 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கருண் நாயர் 14 ரன்னும் சுப்மன் கில் 6 ரன்னும், ஆகாஷ் தீப் ஒரு ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
நான்காம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா வெற்றி பெற 135 ரன்னும், இங்கிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டும் தேவைப்படுவதால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
- விவியன் ரிச்சர்ட்ஸ் 34 சிக்சர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது.
ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கே.எல். ராகுல்-ரிஷப் பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அவர் அடித்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் மொத்தம் 34 சிக்சர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு அணிகள் மோதிய ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற்றது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகளில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 75 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் சார்லி டீன் 3 விக்கெட்டும், சோபி எக்கல்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில், சோபியா டங்க்ளே 46 ரன்னில் அவுட்டானார். டேனில் வியாட் ஹாட்ஜ் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். பவுசியர் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். டாமி பியூமாண்ட் 30 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஆனாலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ராகுல் சதமடிக்க, ரிஷப் பண்ட், ஜடேஜா அரை சதம் கடந்தனர்.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் தலா 44 ரன்களில் வெளியேறினர்.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார். கே எல் ராகுல் சதம் கடந்து அசத்தினார்.
4வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப் பண்ட் 74 ரன்னில் அவுட்டானார். சதம் கடந்த நிலையில் கே.எல்.ராகுல் அவுட்டானார்.
ரவீந்திர ஜடேஜாவுடன் நிதிஷ்குமார் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா அரை சதம் கடந்து 72 ரன்னில் வெளியேறினார். நிதிஷ்குமார் 30 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- இறுதிச்சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இது இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- இறுதிப் போட்டியில் சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் செம் வெர்பீக்-செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி, பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி-பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி ஜோடியுடன் மோதிய து.
இதில் வெர்பீக்-சினியாகோவா ஜோடி 7-6 (7-3), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டி 2 மணி நேரம் 2 நிமிடம் நீடித்தது.
கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையரில் சினியாகோவா கைப்பற்றிய முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கபில்தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது.
- தற்போது கபில்தேவின் வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித், கார்ஸ் அரை சதம் கடந்தனர்.
இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா - 13 முறை 5 விக்கெட், கபில் தேவ் - 12 முறை விக்கெட், அனில் கும்ப்ளே - 10 முறை 5 விக்கெட் எடுத்துள்ளனர்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- அரையிறுதி சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 6 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரசை சந்திக்கிறார்.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது.
ஒல்லி போப் 44 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராலே 18 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கிறிஸ் வோக்ஸ் டக் அவுட்டானார். 271 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது.
ஜேமி ஸ்மித்துடன் பிரைடன் கார்ஸ் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேமி ஸ்மித் அரை சதம் கடந்தௌ 51 ரன்களில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கே.எல்.ராகுலுடன் கருண் நாயர் இணைந்தார். 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் பிரிட்ஸ் தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில், உலகின் நம்பர் 5 வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது செட்டை 7-5 என பிரிட்ஸ் கைப்பற்றினார்.
இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (8-6) என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.






