என் மலர்tooltip icon

    துருக்கி

    • ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
    • 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நேரடி பேச்சுவார்த்தை நடக்கிறது.

    ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் படையெடுத்தது. தொடக்கத்தில் இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது.

    இதனால் 3 வருடங்களை தாண்டி இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. சண்டை நிறுத்த பல்வேறு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உக்ரைன், ரஷியா பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரமாக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

    அதன்படி உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா முன் வைத்துள்ளது.

    இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா அதிகாரிகள் இன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 வருடத்திற்குப் பிறகு இரு நாட்டு பிரதிநிதிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பேச்சுவார்தை முடிவில் போர் நிறுத்த ஏற்பட வாய்ப்புள்ளது. ரஷியா 30 நாள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து உக்ரைனில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளை திருப்பி அனுப்புவதுடன், போரின் போது பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தால் அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது என உக்ரைன் கருதுகிறது.

    அதேவேளையில் எல்லையில் படைகளை குவிக்கக் கூடாது, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிப்பதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரஷியா முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் புதின் இதற்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன, மேலும் அவர் அமைதியை விரும்புவதில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறுகின்றன.

    • உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.
    • இந்த பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்று நடைபெறுகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். இந்த பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்று நடைபெறுகிறது. போர் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இருநாடுகளும் நடத்தும் நேரடி முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். இதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது பிரதிநிதிகள் துருக்கி சென்றுள்ளனர்.

    அதன்படி துருக்கியில் இன்று நடைபெறும் ரஷியா-உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தையில் புதின் பங்கேற்கவில்லை. அவர் தனது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ரஷியா சார்பில் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் மிக்கேல் காலுஜின், பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின், ரஷியா ராணுவ உளவுத்துறை தலைவர் இகோர் கோஸ்யுகோவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானமானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சென்றுள்ளது.
    • ராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்பட்டதற்கான விவரங்கள் வெளியாகவில்லை.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது.

    இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சூழலில் துருக்கியும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை வழங்கியதாகத் தகவல் வெளியானது.

    துருக்கி விமானப்படைக்குச் சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானமானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சென்றுள்ளது என்றும் இதில் ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தன. ஆனால் அவற்றில் ராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்பட்டதற்கான விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் துருக்கி விளக்கமளித்துள்ளது. 

    • அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்.
    • இஸ்தான்புல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டதாக தகவல்.

    துருக்கி இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

    அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அறலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

    • ஒருவர் பொம்மை வேடம் அணிந்து விரட்டினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை விரட்டி சென்றனர்.

    இஸ்தான்புல்:

    துருக்கியில் அதிபராக இருந்து வருபவர் ரெசெப் தையிப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த சில நாட்களாக துருக்கியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்துள்ளது.

    துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோத்து மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த 19-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    துருக்கியில் 2028-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து எக்கீம் இமாமோத்து போட்டியிட போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் அவர் கைது செய்யப்பட்டார்.


    அரசின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் அவர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்த போராட்டத்தின் போது ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை விரட்டி சென்றனர். அதில் ஒருவர் பொம்மை வேடம் அணிந்து விரட்டினார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    துருக்கியில் நடந்து வரும் போராட்டம் தொடர்பாக போலீசார் 2 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். ஏராளமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • 12 தளங்களைக் கொண்ட அந்த ஓட்டல் முழுவதும் தீ பரவியது.
    • மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. 12 தளங்களைக் கொண்ட அந்த ஓட்டல் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்தில் சிக்கி 66 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்தது. அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • துருக்கியில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
    • இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. தற்போது துருக்கியில் 2 வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஓட்டலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

    தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதில் சிலர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 170 கி.மீ. தொலைவில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்து அறிந்து பல்வேறு மந்திரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியது.

    இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
    • இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

    அங்காரா:

    வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடிய பிறகே தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த ஓட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்தனர் என்றும், முன்னெச்சரிக்கையாக ரிசார்ட்டில் உள்ள மற்ற ஓட்டல்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு வழங்கப்படவில்லை.
    • இண்டிகோ சார்பில் யாரும் விமான நிலையம் வரவில்லை.

    துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வரவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டுஇன் தளங்களில் பதிவிட்டுள்ளனர். விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில், "முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை. இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன.
    • ஒரு விமானம் கீழே விழுந்து இரண்டு துண்டாக நொறுங்கியது.

    துருக்கியில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானம் தப்பித்த நிலையில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தெற்மேற்கு மாகாணமான இஸ்பர்ட்டாவில் வழக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத வகையில் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஒரு ஹெலிப்படர் விபத்துக்குள்ளானது.

    இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்துக்குள்ளான விமானம் வயல்வெளியில் விழுந்த இரண்டாக உடைந்தது என தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    • சோச்சியில் இருந்து 89 பயணிகளுடன் தரையிறங்கியபோது தீ விபத்து
    • விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.

    95 பேருடன் சென்ற ரஷிய விமானம் துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என துருக்கி போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அஜிமுத் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சோச்சியில் இருந்து 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    விமானம் தரையிறங்கியதும் விமானி அவசர அழைப்பு கொடுக்க விமான நிலைய மீட்புக்குழு, தீயணைப்புப்படை வீரர்கள் விரைவாக வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

    தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கப்டவில்லை. இந்த விபத்து தொடர்ந்து ஓடுபாதையில் இருந்து விமானத்தை அப்புறுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதுவரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    • துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
    • 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.

    அங்காரா:

    துருக்கி தலைநகர் அங்காராவில் அரசுக்கு சொந்தமான ராணுவ மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த ஒரு ஆண், ஒரு பெண் தாக்குதல் நடத்தினர்.

    துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் குர்திஷ் படைகள் நடத்தியதாக துருக்கி தெரிவித்தது.

    இந்த நிலையில் ஈராக், சிரியாவில் குர்திஷ் போராளிகள் படைகள் மீது துருக்கி பதிலடி தாக்குதலை நடத்தியது. வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

    துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இதில் குர்திஷ் படையினரின் 32 முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், குர்திஷ் படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தாக்குதல் குறித்த விவரங்களை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் குர்திஷ் இலக்குகள் எதிர் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

    ×