என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • சிறுவன் உலகை காக்க டிராகன் பால்களை சேகரிக்கும் கதையாக இந்த தொடர் அமைந்தது.
    • டிராகன் பால் கதையை உருவாக்கிய அகிரா டோரியாமா கடந்த மார்ச்சில் உயிரிழந்தார்.

    நீ போட்டு வச்ச தங்கக் குடம்.. 90ஸ் கிட்ஸ் புகழ் டிராகன் பால் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவுடிராகன் பால் Z என்பது உலகம் முழுவதிலும் உள்ள 90ஸ் கிட்ஸ்களிடையே பிரசித்தி பெற்ற ஜப்பானிய அனிமே தொடர் ஆகும். இந்த தொடர் ஆரம்பித்து இன்றுடன் 40 வருடம் நிறைவடைந்துள்ளது. டோய் அனிமேஷன் நிறுவனத்தால் கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி டிராகன் பால் தொடர் முதலில் தொடங்கப்பட்டது.

    சன் கோகு [Son Goku] என்ற சிறுவன் உலகை காக்க டிராகன் பால்களை சேகரிக்கும் கதையாக இந்த தொடர் அமைந்தது. இது பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்த இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து முந்தைய கதையின் தொடர்ச்சியாக டிராகன் பால் 1986 ஆம் ஆண்டு தொடங்கியது. இது முந்தையதை விட உலகம் முழுவதிலும் பெரு வெற்றி பெற்றது.

     

    இதுவே பின்னாட்களில் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் நிலைத்தது. Shueisha நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சீரிஸ்சின் மங்கா காமிக் புத்தகங்களும் 260 மில்ல்லியன் பதிப்புகளை கடந்து விற்பனையானது. வீடியோ கேம்களும் இதைனை மையமிட்டு உருவாக்கப்பட்டது.

    இந்த டிராகன் பால் கதையை உருவாக்கிய அகிரா டோரியாமா [Akira Toriyama] கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது 68 ஆம் வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சீரிஸ் தனது 40 வது வயதை எட்டியுள்ள இந்நாளில் ரசிகர்கள் டிராகன் பால் -ஐ நினைவுகூர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர். 

     

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லீயுடன் மோதினார்.

    இதில் பி.வி.சிந்து 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி 15 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் இந்தத் தொடரில் இருந்து இந்திய அணி முற்றிலும் வெளியேறியது.

    • ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

    உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.

    சமீபத்தில் தென் இந்தியாவில் குழைந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் குழந்தை பிறப்பை அதிகரிக்க கூறியுள்ள உபாயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

    2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு பிறப்பு விகிதம் 5.1 சதவீதம் குறைந்து 758,631ஆகப் பதிவானது. இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 3,50,074 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே கால் இடைவெளியுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் குறைவாகும்.

    இந்நிலையில் ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹைகுடா கடந்த நவம்பர் 8 ஆம் தேதி யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் , 25 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்வதைத் தடைசெய்யவும், 30 வயதாகிவிட்டால் கருப்பை நீக்கத்தை கட்டாயப்படுத்தவும் ஹைகுடா பரித்துரைத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து தனது கருத்துக்காக நவோகி ஹைகுடா மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசிய கருத்துகள் கடுமையானவைதான் என்றும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்குத் தான் வாதிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் கூறிய கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார்.

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜுன் ஹா உடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானை 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி சுமார் 38 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

    • திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது.
    • பள்ளிப் பருவத்தில் இருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்ததாக கோண்டோ கூறுகிறார்.

    பொருத்தமான ஜோடி பலருக்கு அமைவதில்லை. அதனால் சிலர் ஒரே பாலினத்தவரையோ, பொம்மையையோ, விலங்கையோ திருமணம் செய்த அரிய நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதுபோல ஒரு ஜப்பானியர் ரோபோவை திருமணம் செய்து 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது.

    அவர் திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது. 41 வயதான அகிஹிகோ கோண்டோ என்பவர் கடந்த 2018-ம் ஆண்டில் மிகு என்ற ரோபோ பொம்மையை திருமணம் செய்து கொண்டார்.

    பள்ளிப் பருவத்தில் இருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்ததாக கோண்டோ கூறுகிறார். இதற்கிடையே வேலையிலும் மனச்சோர்வு அடைந்த அவர், மிகு ரோபோவின் கவனிப்புகளால் மகிழ்ச்சி அடைந்தார். அது இன்னிசையில் பாடும், பேசும் திறன் பெற்ற ரோபோ. அதனால் ரோபோவையே அவர் திருமணம் செய்து கொண்டார்.

    சில தினங்களுக்கு முன்பு 6-வது ஆண்டு திருமண விழாவை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.



    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் தோல்வி அடைந்தார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் குயின்வென் ஜெங் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    ஏற்கனவே இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், பிரிட்டிஷ் வீராங்கனை கேடி போல்டர் உடன் மோதினார்.

    இதில் சோபியா கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் சீனாவின் குயின்வென் ஜெங், ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சோபியா கெனின், சீன வீராங்கனையை எதிர்கொள்கிறார்

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.

    இதில் சோபியா கெனின் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் பிரிட்டிஷ் வீராங்கனை கேடி போல்டர் உடன் மோதுகிறார்.

    மற்றொரு காலிறுதியில் சீனாவின் குயின்வென் ஜெங், கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை 6-0, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்த இரண்டு அணுகுண்டுத் தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர்.
    • நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவர் தோஷியுக்கி மிகாமிக்கி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

    இரண்டாம் உலகப் போர் 

    இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் ஜப்பான் நடத்திய தாக்குதலில் 2,390 காப்பாற்றப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கொந்தளித்த அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டை வீசியது. இதில் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர்.

    இது நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி நகரின் மீது இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா வீசியது. இந்த இரண்டு தாக்குதலிலும் மொத்தமாக 200,000 மக்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜப்பான் சரணடைந்ததும் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய மரபணு பாதிப்புகள் இன்றுவரை அந்நகரின் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    அமைதிக்கான நோபல்  

    இந்த தாக்குதல்களின் உயிர்பிழைத்தவர்களின் சிலர் இணைந்து நிஹான் ஹிடான்கியோ என்ற அமைப்பை சுமார் 10 வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டில் உருவாக்குகின்றனர். உலகம் முழுவதிலும் அணுகுண்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் இந்த அமைப்பு இன்று வரை ஈடுபட்டு வருகிறது.

    அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைத்தவர்களை உலகெங்கும் அனுப்பி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான சேதங்கள் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய கதைகளை இந்த அமைப்பு பகிர்ந்து கொள்கிறது. இந்த அமைப்புக்கு தற்போது 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

     80 வருடங்கள் முன்

    நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவர் தோஷியுக்கி மிகாமிக்கி [Toshiyuki Mimaki] அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வைக்கும் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, பாலஸ்தீனத்தின் காசாவில் தற்போது உள்ள நிலை 80 வருடங்கள் முன்னாள் ஜப்பான் இருந்த நிலையை தனக்கு ஞாபகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

     

    இந்த கருத்துக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தோஷியுக்கியின் கருத்தை பலர் ஆமோதித்தனர். இந்த கருத்துக்கு இஸ்ரேலை ஊக்குவிக்கும் மேற்குலகம் செவி சாய்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

    காசா  

    இஸ்ரேல் மீது கடந்த வருடம் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 2400 பேர் வரை உயிரிழந்தனர். இதனால் கொதித்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா உள்ளிட்ட நகரங்களின் கடந்த 1 வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.

     

    மனிதாபிமான உதவிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் உணவும் அத்தியாவசிய பொருட்களும், காயங்களை ஆற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 80 வருடங்களுக்கு முன்னர் அணுகுண்டு தாக்குதலில் சிதைந்த ஹிரோஷிமா நாகசாகி நகர மக்கள் சந்தித்த பாதிப்புகளுக்குச் சற்றும் குறைந்தது கிடையாது என்பதே அமைதியை வலியுறுத்தும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அணுகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை தங்களின் பெருமையாகப் பறைசாற்றிக்கொள்ளும் அதிகார வர்க்கத்துக்கு இந்த குரல் ஒருபோதும் எட்டப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.

    இதில் சோபியா கெனின் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதுகிறார்.

    • 2021-ல் பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடா 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.
    • ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா வெற்றி பெற்று பதவியேற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக பதவி வகித்து வந்த புமியோ கிஷிடா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனால் அவர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். புமியோ கிஷிடா 2021-ல் பிரதமராக பொறுப்பேற்று, 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.

    இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கு, அதாவது கட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி நடந்தது. இதில் ஷிகெரு இஷிபா (67) வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.

    அப்போது, விரைவில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவுசெய்தார். வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த உள்ளதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஜப்பான் பாராளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டார். திட்டமிட்டபடி வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார்.

    தற்போதைய ஆட்சிக்கு மக்களின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்தை பெற நாங்கள் நேர்மையாக செயல்படுவோம் என இஷிபா, தெரிவித்தார்.

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை பதவியில் இஷிபாவும், அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிப்பார்கள்.

    அதேசமயம், அவசர அவசரமாக தேர்தலை நடத்தும் பிரதமரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    ×