என் மலர்
ஜப்பான்
- 2024ஆம் ஆண்டில் 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன.
- 2023ஆம் ஆண்டை காட்டிலும் 5.7 சதவீதம் குறைவாகும்.
ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2024-ல் 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2023ஆம் ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவாகும். 1899ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக குழந்தைகள் பிறப்பு 7 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 27 லட்சம் குழந்தைகள் பிறந்தன. அதில் நான்கில் ஒரு பகுதிதான் தற்போது பிறந்துள்ளது.
அதிகரித்து வரும் வயது மூப்பு மற்றும் சுருங்கி வரும் மக்கள் தொகை ஆகியவை ஜப்பானின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைத்தன்மை குறித்து கவலை அடையச் செய்துள்ளது.
இந்த சூழ்நிலை அமைதியான எமர்ஜென்சி எனத் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, திருமண தம்பதிகள் வேலை மற்றும் குடும்பத்தை பேலன்ஸ் செய்து கொள்ளும் வகையில் வேலை செய்யும் இடத்தில் மேலும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஆகிய நாடுகளில் வயது மூத்த மக்கள் தொகையை அதிகமாகவும், குழந்தை பிறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலும் கொண்ட நாடாக ஜப்பான் மாறியுள்ளது. தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்குவிக்க கடுமையாக போராடி வருகின்றன. வியட்நாம் நேற்று, இரண்டு குழந்தைகள் என்ற சட்டத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
- குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இன்று (மே 31) பிற்பகல் ஜப்பானின் வடக்கே அமைத்துள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் பல பகுதிகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
- நாங்கள் பயத்திற்கு அடிபணிய மாட்டோம்.
- அவர்களுக்குப் புரியும் மொழியில் பதிலளிக்க கற்றுக்கொண்டோம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கடந்த 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து துல்லியமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்தடன் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்தியா அதனை முறியடித்து தக்க பதிலடி கொடுத்தது. பின்னர் இருநாட்டு ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த 10ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதனால் போர் பதற்றம் தணிந்தது.
இந்தியா பயங்கரவாத செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்தது ஏன்?. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி 33 நாடுகளின் தலைநகருக்கு 7 குழுக்கள் சுற்றுப் பயணம் செய்துள்ளது. ஜப்பானுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு சென்றுள்ளது. இந்த குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜி இடம் பிடித்துள்ளார.
அபிஷேக் சர்மா பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து கூறியதாவது:-
நாங்கள் பயத்திற்கு அடிபணிய மாட்டோம். அவர்களுக்குப் புரியும் மொழியில் பதிலளிக்கக் கற்றுக்கொண்டோம். பயங்கரவாதம் வெறிபிடித்த நாய் என்றால், அதை காட்டுத்தனமாக கையாள்கிறது பாகிஸ்தான். இந்த காட்டுத்தனமான கையாளுபவரை சமாளிக்க நாம் முதலில் உலகை ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில் அது தொடர்ந்து பயங்கரவாதம் என்ற வெறித்தனமான நாய்களை இனப்பெருக்கம் செய்யும்.
இந்தியா பொறுப்புடன் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் அனைத்து பதில்களும் செயல்களும் துல்லியமாகவும், கணக்கிடப்பட்டதாகவும், தீவிரமடையாததாகவும் (இருநாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம்) இருந்தன.
இவ்வாறு அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
- அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார்.
ஜப்பானில் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தந்தையின் சடலத்தை 2 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் ஒளித்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்ற நபர், உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக உணவகம் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நோபுஹிகோ சுசுகி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது.
இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்க்க தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக சுசுகி தெரிவித்தார்.
எனினும் தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.7.60 லட்சம்) ஆகும் என மதிப்பிடப்படுகிறது.
- ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.
- முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது.
டோக்கியோ:
ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.
இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரெயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனமான செரெண்டிக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த முப்பரிமாண ரெயில் நிலையம் வருகிற ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஜப்பான் மேற்கு ரெயில்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- நாகசாகி மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
- விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர்
ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில், ஒரு நோயாளி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு வயதான நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதைத்தொடர்ந்து இரண்டு கடலோர காவல்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மருத்துவர், நோயாளி மற்றும் பராமரிப்பாளர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
- கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மியான்மருக்குப் பிறகு, இப்போது ஜப்பானிலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூஷு பகுதியில் இந்திய நேரப்படி இரவு 7:34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) படி, கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கத்தின் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலஅதிர்வு உணரப்பட்டது.
இதுவரை பெரிய அளவிலான சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மூன்றாவது பெரிய தீவு கியூஷு அடிக்கடி நில அதிர்வுவுக்கு உள்ளாகும் இடமாகும்.
தற்போதைய நிலநடுக்கத்திற்கு பின்னர், உள்ளூர் நிர்வாகம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை தாண்டியுள்ளது.
- பியூஜி மலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
- இணையம் மூலம் முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச வரம்பையும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பியூஜி எரிமலை அமைந்துள்ளது. நாட்டின் மிக உயரமான இந்த எரிமலை மலையேற்றத்துக்கு சிறந்த இடமாகவும் உள்ளது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த சாகச வீரர்களும் இங்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டனர். எனவே பியூஜி மலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக அங்கு சுற்றுச்சூழலும் வெகுவாக மாசடைந்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த பியூஜி மலையில் ஏறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மலையேற்றத்தில் ஈடுபடும் சாகச வீரர்களுக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இணையம் மூலம் முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச வரம்பையும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
- 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின.
- தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சிடித்து வருகின்றனர்.
டோக்கியோ:
ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சிடித்து வருகின்றனர்.
- நியூயார்க்கில் அணுஆயுத தடை ஒப்பந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
- பார்வையாளராக கலந்து கொண்டு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறுகையில் "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
"கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
ஐ.நா.வின் 2017-ம் ஆண்டு அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021-ம் ஆண்டு நடைமுறைக்கு கொணடு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.
அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.
- கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
- குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை.
ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதையடுத்து குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அந்த நாட்டில் தொடர்ந்து 9-வது ஆண்டாக மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்று ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிமசா ஹயாஷி தெரிவித்தார். அங்கு திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
- ஹொண்டா மோட்டார் நிறுவனம், நிசான் மோட்டார் நிறுவனமும் வணிக ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிப்பு.
- இரு நிறுவனங்களும் தாங்களும் இணைவது குறித்து பரிசீலனை செய்வதாக மிட்சுபிஷி தெரிவித்திருந்தது.
ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா, நிசான், மிட்சுபிஷி ஆகியவை வணிகத்தில் ஒருங்கிணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்த நிலையில், இந்த பேச்சுவார்த்தையை கைவிட்டுள்ளன.
ஹொண்டா மோட்டார் நிறுவனம், நிசான் மோட்டார் நிறுவனமும் கடந்த டிசம்பர் மாதம் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தது.
ஹோண்டா, நிசான் நிறுவனத்துடன் நாங்களும் தாங்களும் இணைவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை.






