என் மலர்tooltip icon

    உலகம்

    • நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
    • அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும்.

    தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ம் தேதி 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    தைவானில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு, 9 பேர் உயிரிழந்தனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

    அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகி உள்ளது.

    • நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது.
    • இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின்போது, புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கின. அலமாரி கதவுகள் மற்றும் சாதனங்கள் குலுங்கின.

    நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

    பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    நிலநடுக்கம் குறித்து, ஐகானிக் எம்பயர் ஸ்டேட் பில்டிங் அதன் எக்ஸ் பக்கத்தில், "நான் நன்றாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், " நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய- அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த எவரும் தயவுசெய்து madad.newyork@mea.gov.in என்கிற முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மியான்மர் நாட்டில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது.

    யாங்கூன்:

    மியான்மர் நாட்டில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது என ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • உயிரியல் பூங்காவில் விலங்குகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
    • தொடர்ந்து பூங்கா நிர்வாகம் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் காளி என்று பெயரிடப்பட்ட துருவ கரடி ஒன்று சமதளபரப்பில் பனிக்கட்டி மீது படுத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    உயிரியல் பூங்காவில் விலங்குகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து பூங்கா நிர்வாகம் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் துருவ கரடி பனியால் ஆன படுக்கையில் வசதியாக ஓய்வு எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.


    • டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • மதிய உணவு மற்றும் பபே முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

    உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் பயணம் செய்த 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக தற்போதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாசினேட்டிங் என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட 112 ஆண்டுகள் பழமையான அந்த மெனு கார்டில் கப்பலின் முதல் மற்றும் 3-ம் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட மெனு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மதிய உணவு மற்றும் பபே முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன. முதல் வகுப்பிற்கான மெனுவில், பில்லட்ஸ் ஆப் பிரில், கார்ண்ட் பீப், காய்கறி வகைகள் மற்றும் பாலாடைகள், வறுக்கப்பட்ட மட்டன் சாப்ஸ், பிசைந்த, வறுத்த மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கஸ்டர்டு புட்டிங், ஆப்பிள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

    பபே வகையில் பானை இரால், நார்வேஜியன் நெத்திலிகள், ஜூஸ்ட், மத்தி, வறுத்த மாட்டிறைச்சி, பல்வேறு கோழி உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. 3-ம் வகுப்பிற்கான மெனுவில் ஓட்ஸ் கஞ்சி மற்றும் பால், ஜாக்கெட் உருளைக்கிழங்கு, ஹாம் மற்றும் முட்டை, ரொட்டி மற்றும் வெண்ணெய், தேநீர், காலை உணவாக காபி ஆகியவை அடங்கும்.

    இரவு உணவில், அரிசி சூப், ரொட்டி, பழுப்பு குழம்பு, இனிப்பு சோளம், பிளம்ப் புட்டிங், இனிப்பு சாஸ், குளிர் இறைச்சி, பாலாடை கட்டி, சுண்ட வைத்த அத்தி பழங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


    • பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ்ச் என்ற பெயரில் வினாடி வினா போட்டி நடத்திவருகிறது.
    • வினாடி வினா போட்டியில் கொல்கத்தா பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம் பெற்றிருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ்ச் என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்திவருகிறது. மிகவும் கடினமான வினாடி வினா போட்டியாகக் கருதப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், இந்த வினாடி வினா போட்டியின் அரையிறுதிச் சுற்று கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு பங்கேற்றது. அந்தக் குழுவில் கொல்கத்தாவை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம்பிடித்தார்.

    போட்டியில் முன்வைக்கப்பட்ட பல கடினமான கேள்விகளுக்கு சவுரஜித் தேப்நாத் திறம்பட பதிலளித்தார். இதன்மூலம் அவரது குழு இறுதிச்சுற்றுக்கு தேர்வானது. லண்டனில் வரும் 8-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    • பணம் கட்டாத சிலருக்கு புளூடிக் குறியீடு வந்ததை பார்த்து அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
    • சுமார் 2,500 பிரபலமான பயனாளர்களுக்கு எலான் மஸ்க் இந்த சலுகையை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    எக்ஸ் வலை தள பக்கத்தில் பிரபல அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரை உலகினர் என பலரும் கணக்குகள் தொடங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் வகையில் பிரபலங்களுக்கு புளூடிக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தனியாக சந்தா செலுத்த வேண்டும்.

    இந்த நிலையில் எக்ஸ் வலைதளத்தில் பிரபலமாக திகழும் புளூடிக் பயனாளர்கள் சிலருக்கு எலான் மஸ்க் இலவச சலுகை அறிவித்து உள்ளார்.

    பணம் கட்டாத சிலருக்கு புளூடிக் குறியீடு வந்ததை பார்த்து அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 2,500 பிரபலமான பயனாளர்களுக்கு எலான் மஸ்க் இந்த சலுகையை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
    • திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பிரசாரம்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த 20 பயங்கரவாதிகள் படுகொலைகளுக்கு இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தான் காரணம் என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியானது.

    காலிஸ்தான் இயக்கத்தில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளை குறி வைத்து வெளிநாட்டு மண்ணில் இந்த படுகொலைகளை இந்திய உளவுத்துறையின் சிலீப்பர் செல்கள் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் தெரிவித்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

    பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது அடிப்படை ஆதாரமற்றது. இது திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பிரசாரம் என தெரிவித்துள்ளது.

    • நிலநடுக்கம் நின்று நிலைமை சீராகும் வரை அந்த கட்டில்கள் மோதாமல் நர்ஸ்கள் தடுக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.
    • வீடியோ வைரலாகிய நிலையில், பயனர்கள் பலரும் நர்ஸ்களின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

    தைவானில் கடந்த 3-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் சிலர் குழந்தைகளை பாதுகாப்பதை காட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இந்த காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலான இந்த வீடியோவில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக நர்ஸ்கள் கட்டிலை ஒன்றாக சேர்த்து பாதுகாக்கும் காட்சிகள் உள்ளது. நிலநடுக்கம் நின்று நிலைமை சீராகும் வரை அந்த கட்டில்கள் மோதாமல் நர்ஸ்கள் தடுக்கும் காட்சிகளும் அதில் உள்ளது.

    இந்த வீடியோ வைரலாகிய நிலையில், பயனர்கள் பலரும் நர்ஸ்களின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

    • ஒரு பிரபல ஓட்டல் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
    • கட்டிட இடிபாடுகளுக்குள் 2 இந்தியர்களும் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

    தைபே நகரம்:

    தைவான் தலைநகர் தைபே நகரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு உருவானது.

    இது 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 1999-ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுமார் 2 ஆயிரத்து 400 பேர் பலியாகினர்.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 100 முறை அங்கு அதிர்வுகள் ஏற்பட்டன. எனவே மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

    இதில் அங்குள்ள பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 1,000-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அங்குள்ள ஒரு பிரபல ஓட்டல் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

    அந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 2 இந்தியர்களும் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் இருந்த தொட்டில்கள் உருண்டு சென்றன. அதனை அங்கிருந்த செவிலியர் இழுத்து பிடித்து அவர்களது உயிரை காப்பாற்றினர். இதுகுறித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அந்த நர்சுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • காசாவுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிப் பொருட்கள் கிடைக்க அமெரிக்கா வலியுறுத்தல்.
    • இஸ்ரேல்- காசா முனை இடையிலான எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு கேபினட் ஒப்புதல்.

    ஹமாஸ்க்கு எதிராக போர் நடத்தி வரும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்மட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் காசா மக்கள் கடுமையான வகையில் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். ஆனால், காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் பெரும்பாலான எல்லைகளை அடைத்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் உதவிபுரியம் நபர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மக்களை பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை இஸ்ரேலை விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உடன் டெலிபோனில் பேசினார். அப்போது காசா மக்களுக்கு கூடுதல் மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதன்அடிப்படையில் எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு கேபினட் அனுமதி அளித்துள்ளது. இந்த எல்லை இஸ்ரேல்- காசா முனை இடையே உள்ளது. இந்த எல்லை வழியாக மக்கள் காசா முனையில் இருந்து இஸ்ரேலுக்கு செல்ல முடியும்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த எல்லையை இஸ்ரேல் மூடியது. மக்கள் இந்த எல்லையை கடக்கவும், இந்த எல்லையின் வான்வழியை பயன்படுத்தவும் தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் கூடுதல் மனிதாபிமான உதவிகள் காசாவிற்கு கிடைக்கும் வகையில் இந்த எல்லை திறந்து விடப்படுகிறது.

    அதேபோல் அஷ்தோத் துறைமுகத்தையும் பயன்படுத்த பாதுகாப்பு கேபினட் ஒப்பதல் அளித்துள்து.

    எரேஸ் எல்லை பெய்ட் ஹனோன் எனவும் அழைக்கப்படுகிறது. எரேஸ் எல்லை மக்கள் செல்வதற்காகவும், கெரேம் ஷலோம் பொருட்கள் கொண்டு செல்வதற்காவும் பயன்படுத்தப்பட்டது வந்தது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்றார் இலங்கை மந்திரி.

    கொழும்பு:

    இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய மீனவர்கள் இழுவை மீன்பிடி படகுகளை வைத்து இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது.

    இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

    இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது.

    கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என தெரிவித்தார்.

    ×