என் மலர்
உலகம்
- பனமா பேப்பர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கட்சி தலைவர் பதவியை இழந்தார்.
- நான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில், பொதுத்தேர்தலுக்காக கடந்த ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
பின்னர் இங்கிலாந்து சென்றார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பினார்.
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் நவாஸ் ஷெரீப் கட்சி பொனாசீர் பூட்டோவின் மகன் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நவாஸ் ஷெரீப் சகோதரர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் நவாஸ் ஷெரீப்பை தவிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கி உள்ளனர்.
- பர்கரில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாஸ்ட்புட் நிறுவனமான மெக்டொனால்டின் பர்கரை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டு போகாது. அதன் சுவையும் மிகவும் ருசியாக இருக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு போகாமல் இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கி உள்ளனர். அப்போது பில்கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்துள்ளார். அதன்பிறகு ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் தலா 2 முறை, டிரம்ப், இப்போது ஜோ பைடன் ஒரு முறை என பல அதிபர்கள் வந்து விட்ட நிலையிலும், இந்த பர்கர் மட்டும் எதுவுமே ஆகவில்லை.
இதுகுறித்து பர்கரை வாங்கிய இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்து விட்டோம். அது அளவுக்கு அதிகமாக போய் விட்டது. இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஆலோசித்தோம். அப்படி பேசும் போது அந்த பர்கரை அப்படியே வைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம். அதைத்தான் செய்தோம் என்றனர். சுமார் 30 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் அந்த பர்கரில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை. கெட்டுப்போன வாசம் கூட அதில் இருந்து வரவில்லை என கூறினர்.
இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ரஃபாவில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதில் 35 பேர் உயிரிழப்பு.
- தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக நேதன்யாகு அறிவிப்பு.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தடைவிதித்துள்ளது.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது. அப்போது ரஃபா நகரில் உள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இந்த தாக்குதல் துரதிருஷ்டவசமான தவறு. இஸ்ரேல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஃபா மீது தாக்குல் நடத்திய நிலையில் இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கிடையாது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா, எகிப்து, கத்தார் முயற்சியால் கடுமையான சண்டை நடைபெற்றபோது ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.
- தனது மகளை பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாடி உள்ளார்.
- தேடிய போது அவர் டிக்கெட் வாங்கிய கடைகளிலேயே அதனை வைத்து விட்டு வந்தது தெரியவந்தது.
லாட்டரியில் ஜாக்பாட் பரிசு கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள். அந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் சரியான நேரத்தில் கிடைப்பது இல்லை. ஆனாலும் சிலருக்கு அதிர்ஷ்டம் எதிர்பாராத வகையிலும் கிடைத்து விடும்.
அந்த வகையில் அமெரிக்காவில் விர்ஜீனியா பகுதியை சேர்ந்த டியாரா என்ற இளம்பெண் ஒருவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது மகளை பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாடி உள்ளார்.
இந்நிலையில் திடீரென அவர் தான் வாங்கிய லாட்டரி சீட்டை தேடிய போது அதனை காணவில்லை. தொடர்ந்து அந்த சீட்டை தேடிய போது அவர் டிக்கெட் வாங்கிய கடைகளிலேயே அதனை வைத்து விட்டு வந்தது தெரியவந்தது. ஒரு வழியாக தொலைந்து போன டிக்கெட் மீண்டும் கிடைத்த சந்தோசம் ஒருபுறம் என்றால் அந்த டிக்கெட்டிற்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.41.5 லட்சம்) பரிசு விழுந்தது அவருக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
- தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.
- பதிவு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தனது கணவருக்கு ஆதரவாக ஒரு அன்பான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், உங்களுக்குள் உள்ள பொதுவான விஷயம் என்ன என்று மக்கள் எப்போதும் எங்களிடம் கேட்கிறார்கள். நண்பர்களை மீண்டும் சந்திப்பது, ஸ்பானிஷ் உணவுகளை சாப்பிடுவது, இருவருக்கும் இடையிலான பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள், கடின உழைப்பு, வாழ்க்கையில் வெற்றி பெற வழி என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பது, நம் குழந்தைகளுக்கு இன்று உள்ளதை விட சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைப்பது, ஹாரோவில் மக்களின் முக்கியமான மதிப்புகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு விரும்பும் எதிர்காலம் பற்றி பேசுவது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.
- விமானம் ஓடுபாதையில் சென்றபோது அதன் என்ஜினில் திடீரென்று கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது.
- விமானம் நிறுத்தப்பட்டு அதிலிருந்த 148 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்கா சிகாகோவின் ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சியாட்டில் நகருக்கு புறப்பட்டது.
அந்த விமானம் ஓடுபாதையில் சென்றபோது அதன் என்ஜினில் திடீரென்று கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது.
விமானத்தின் இறக்கைகளில் ஒன்றில் இருந்து புகை வெளியேறியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு அதிலிருந்த 148 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் என்ஜினில் தீப்பிடித்ததை வீடியோ எடுத்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
- வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
- என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்துச் சிதறியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
பியாங்யாங்:
தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையே, கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. விரைவில் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது.
இந்நிலையில், வடகொரியாவின் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. உளவு செயற்கைக் கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.
வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரவ ஆக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை இயக்குனர் தெரிவித்தார். இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
- வெயில் காரணமாக பஞ்சாப் மத்திய மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- சிந்து மாகாணத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பாகிஸ்தானில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தப்படி இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சில பகுதிகளில் 122 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் வெப்பம் தொடர்ந்து உயர்ந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் 126 டிகிரி வெயில் பதிவானது. சிந்துவில் உள்ள மொஹென்ஜோ டாரோவில், கடந்த 24 மணி நேரத்தில் 126 டிகிரி வெப்பநிலை வரை உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கோடை காலத்தில் அதிகபட்ச டிகிரி இதுவாகும்.
வெயில் கொளுத்துவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பகல் நேரத்தில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பலர் உடல்நல பாதிப்புகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் காரணமாக பஞ்சாப் மத்திய மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் சர்தார் சர்பராஸ் கூறும்போது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்தப்படி இருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள டர்பட் நகரில் 129.2 டிகிரி வெயில் பதிவானதே அதிகபட்சமாகும். இது ஆசியாவிலேயே இரண்டாவது மற்றும் உலகின் நான்காவது அதிக வெப்ப பதிவாகும் என்றார்.
- பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- புயல் காரணமாக அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் பந்தாடியது.
அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த பல கார்களை புயல் கவிழ்த்து போட்டது. மேலும் அங்குள்ள ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்கும் பணியில் இறங்கினர். அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே புயல் காரணமாக அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே சுமார் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவித்தனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
- இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
- இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
நியூயார்க்:
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குல் நடத்தி வருகிறது. ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை தடம்தெரியாத அளவிற்கு அழித்து விட்டது.
ஹமாசுக்கு எதிராக போர் தொடங்கியதற்கான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்த இஸ்ரேல், ரஃபா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.
இதற்கிடையே, நேற்று திடீரென ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு எனக்கூறிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, குட்டரெஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், இந்தக் கொடிய மோதலில் இருந்து தஞ்சம் தேடிவந்த ஏராளமான அப்பாவி பொதுமக்களை கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை. இந்தக் கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- இஸ்ரேல் வான்தாக்குதலில் ரஃபா நகரில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
- இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குல் நடத்தி வருகிறது. ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை தடம் தெரியாத அளவிற்கு அழித்து விட்டது. ஹமாஸ்க்கு எதிராக போர் தொடங்கியதற்கான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
ரஃபா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்தது. இதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஐ.நா. நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எனத் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- விலையுயர்ந்த சிவப்பு கல்லால் இந்த தங்க மோதிரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது
- ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் செழிப்புடன் வாழ்ந்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.
விலையுயர்ந்த சிவப்பு கல்லால் இந்த தங்க மோதிரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது
இதன்மூலம் ஜெருசலேமில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






