என் மலர்tooltip icon

    உலகம்

    • இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை.
    • அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது.

    லெபனான் மீது பயங்கரமான வகையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 500 லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை பாதுகாக்கும் வகையில் கேடயமாக மாறாதீர்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு லெபனான் மக்களை வீடியோ மூலம் மெசேஜ் தெரிவித்துள்ளார்.

    லெபனான் மக்களுக்கான நேதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் "இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை. அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. உங்கள் வீடுகளில் ராக்கெட்டுகளை பதுக்கி வைக்கிறது. அவைகள் எங்கள் நாட்டின் மக்களை குறிவைக்கிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு எதிராக எங்கள் மக்களை பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் வெளியே எடுக்க வேண்டும்" என்றார்.

    இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இருந்து (லெபனான் எல்லை) வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக அமர்த்துவது எங்களுடைய நோக்கம் என போர் நோக்கத்தை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. மேலும், போரின் மையப்பகுதிய வடக்கு நோக்கி நகர்கிறது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    சில தினங்களுக்கு முன் போர் கட்டம் மாற்றப்படுகிறது என லெபனான் எச்சரித்திருந்தது. லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என இஸ்ரேல் பதில் அளித்திருந்தது.

    இநத் நிலையில்தான் லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தியதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • பிரதமர் மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.

    நியூயார்க்:

    பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். 3-வது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார்.

    அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி சென்றடைந்தார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார்.

    அதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், தனது பயணத்தின் போது பிரதமர் மோடி சில முக்கிய இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டார்.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்தது என பதிவிட்டுள்ளார்.

    • 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 2 மீட்டர் அளவிற்கு கடல் அலை ஆர்ப்பரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

    ஜப்பான் நாட்டில் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப் பகுதியில் மிக நெடுந்தூரத்தில் உள்ள தீவுகளில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் மீட்டர் உயர்ம் வரை ஆர்ப்பரித்து தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் ஐஜு தீவுகளில் கடற்கரை வீடுகளில் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    • ஐ.நா.சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
    • அப்போது, மனித குலத்தில் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது என்றார்.

    நியூயார்க்:

    நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியஉரையாதாவது:

    மனித குலத்தின் ஆறில் ஒரு பங்கினரின் குரலை இங்கு பதிவுசெய்ய நான் வந்துள்ளேன்.

    இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம்.

    நிலையான வளர்ச்சியை வெற்றிகரமாக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்டியுள்ளது.

    எங்களின் அனுபவத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

    மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது. போர்க்களத்தில் அல்ல.

    உலகின் அமைதி, வளர்ச்சிக்கு உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம்.

    ஒருபுறம், பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

    மறுபுறம், சைபர், கடல் மற்றும் விண்வெளி ஆகியவை மோதலின் புதிய வடிவமாக உருவாகி வருகின்றன.

    இந்த எல்லாப் பிரச்சனைகளிலும் உலகளாவிய நடவடிக்கை உலகளாவிய லட்சியத்துடன் பொருந்த வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

    தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கு, சமநிலை ஒழுங்குமுறை தேவை.

    இறையாண்மையும் ஒருமைப்பாடும் அப்படியே இருக்கும் உலகளாவிய டிஜிட்டல் ஆளுகையை நாங்கள் விரும்புகிறோம்.

    டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு பாலமாக இருக்க வேண்டும், தடையாக இருக்கக்கூடாது.

    இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரே பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்பது உறுதி என தெரிவித்தார்.

    • Dear World" என்று தலைப்பிடப்பட்ட அந்த குறிப்பைப் பெயர் தெரியாத ஒருவரின் வீட்டு வாசலில் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார் ரயான்.
    • பெட்டியைத் திறக்காமல் வீட்டின் உரிமையாளர் தற்போது அதைப் போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது முறை நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி பென்சில்வேனியா மாநாட்டில் மேத்யூவ் என்று இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்த டிரம்ப் மீது கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கொலை முயற்சி நடந்தது.

    டிரம்ப் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாகக் குறிபார்த்துக்கொண்டு இருந்தார். இதை கண்ட டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். எனினும் சற்று நேரத்துக்குள்ளாக போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்நிலையில் அவர் மீதான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரயானின் காரில் டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த கையால் எழுதிட அட்டவணை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது தாக்குதல் குறித்த குறிப்பையும் எழுதி வைத்துள்ளார் ரயான். "Dear World" என்று தலைப்பிடப்பட்ட அந்த குறிப்பைப் பெயர் தெரியாத ஒருவரின் வீட்டு வாசலில் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார் ரயான்.

    அந்த பெட்டியைத் திறக்காமல் வீட்டின் உரிமையாளர் தற்போது அதைப் போலீசிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பெட்டியில் துப்பாக்கி குண்டுகளும், இருப்பு பைப் உள்ளிட்ட பிற பொருட்களும் இருந்துள்ளது. மேலும் அதில் இருந்த குறிப்பில், டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி இது.

    ஆனால் நான் தோற்றுவிட்டேன். என்னால் முடித்தவரை எனது முழு சக்தியைப் பயன்படுத்தி இதை செய்து முடிக்க நான் முயற்சி செய்தேன். இப்போது இந்த வேலையே செய்து முடிக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. இந்த வேலையைச் செய்து முடிபவருக்கு நான் 150,000 டாலர்கள் [ சுமார்1.25 கோடி ருபாய்] தருகிறேன் என்று ரயான் எழுதி வைத்துள்ளார். இந்த பெட்டி இருந்த வீட்டில் வசித்து வந்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது.  

    • பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
    • தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தெற்கு லெபனானில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியுள்ளது.

    தெற்கு லெபானானில், ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    அதன்படி, 300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

    பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதையடுத்து, தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், 2 நாட்களுக்கு லெபனானில் பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் பள்ளிகள் மூடப்படுகிறது.

    • பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானில் சோயுஸ் எம்எஸ்-25 விண்கலம் தரையிறங்கியது.
    • சர்வதேச விண்கெவளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

    நாசா மற்றும் ரஷிய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சென்ற சோயுஸ் எம்எஸ்- 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.

    கொனோனென்கோ மற்றும் ட்ரேஸி டைசன், நிகோலய் சப் ஆகிய 3 பேருடன் சென்ற சோயுஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது.

    அதன்படி, பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானில் சோயுஸ் எம்எஸ்-25 விண்கலம் தரையிறங்கியது. எக்ஸ்பெடிஷன் 71 குழு பூமி திரும்பியதன் மூலம் சர்வதேச விண்கெவளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

    விண்வெளி வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கியதன் மூலம், ரஷ்யாவின் கொனோனென்கோ, நிகோலய் சப் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (374) தங்கியவர்கள் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.

    • வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார்.
    • அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு, வில்சனிடம் மன்னிப்பு கேட்டது.

    அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் (Vacaville) என்ற நகரத்தில் வசிக்கும் ஒருவர், 18 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி (Pacific Gas & Electric Company) (PG&E) வாடிக்கையாளர் கென் வில்சன் தனது மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதை கவனித்தார். அதனால் அவர் தனது மின் நுகர்வை குறைக்க நடவடிக்கை எடுத்தார். அந்த முயற்சிகளால் மாற்றம் ஏற்படுத்தாததால், அவர் மேலும் விசாரிக்க முடிவு செய்தார்.

    வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார். மேலும் அதன் பிரேக்கர் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அவரது மீட்டர் தொடர்ந்து இயங்குவதை கண்டுபிடித்தார். வில்சன் பின்னர் இந்த பிரச்சனை பற்றி பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனியை தொடர்பு கொண்டு, ஆய்வுக்கு ஒருவரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

    அவர்களது விசாரணையில், வாடிக்கையாளரின் அபார்ட்மெண்ட் மீட்டர் எண்ணிற்கு மற்றொரு அபார்ட்மெண்டிற்கான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டது, ஒருவேளை 2009-ம் ஆண்டு முதல் இருக்கலாம் என்று பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி தெரிவித்தது.

    அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது மற்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு வில்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

    • இந்தியா-பாலஸ்தீன இரு தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.
    • பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதி அளித்தார்.

    குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    அப்போது இந்தியா-பாலஸ்தீன இரு தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.

     

    மேலும் இந்த சந்திப்பின்போது காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதி அளித்தார். காசா-இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் அவர் வலியுறுத்தினார்.

    முன்னதாக, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
    • முடிவில் அனுர குமார திசநாயக மொத்தமாக 57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளை பெற்றார்.

    இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் இதுவாகும்.

    இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

    சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

    இலங்கை தேர்தலை பொறுத்தவரை 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றிப் பெற்று அதிபராவார். ஆனால் அனுர குமார திசநாயக 56 லட்சத்து 34 ஆயிரத்து 915 (42.31 சதவீதம்) வாக்குகளை பெற்றிருந்தார். சஜித் பிரேமதாசா 43 லட்சத்து 63 ஆயிரத்து 35 (32.8 சதவீதம்) வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்கே 2 லட்சத்து 29 ஆயிரம் (17.27 சதவீதம்) வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

    ஆனால் வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெறாததால் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை (விருப்ப வாக்குகளை எண்ணுவது) நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேர்தல் கமிஷன் தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து விருப்ப வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. இதில் அனுர குமார திசநாயக மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இருப்பினும் முதன்மை வாக்கு எண்ணிக்கையை போலவே விருப்ப வாக்குகள் எண்ணிக்கையிலும் அனுர குமார திசநாயக தொடர்ந்து முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அனுர குமார திசநாயக மொத்தமாக 57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் அனுரா குமார திசநாயகே வெற்றி வாகை சூடினார்.

    வெற்றியை தொடர்ந்து இலங்கையின் 9-வது அதிபராக அனுர குமார திசநாயக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

    • கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பணிகளை செய்து முடிக்கும் வரை அவர் வெளிநாட்டிலேயே தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யத்தின் 2-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த கூட்டத்தில் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அன்று இரவே கமல் அமெரிக்க புறப்பட்டு சென்றார். கடந்த 2021-ம் ஆண்டு 'ஹவுஸ் ஆப் கதர்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளுக்காகவே கமல் அமெரிக்க சென்றுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள். இந்த பணிகளை செய்து முடிக்கும் வரை அவர் வெளிநாட்டிலேயே தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

    • இந்தியா மீதான அபரிமிதமான நம்பிக்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    • அதிநவீன துறைகளில் இந்த வட்டமேசை கவனம் செலுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்க வந்துள்ளார். அவர் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார்.

    இந்நிலையில், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். லோட்டே நியூயார்க் அரண்மனை ஹோட்டலில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.

    மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் நடத்திய இந்த கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    மேலும் இந்த கூட்டத்தில் கூகுளின் சுந்தர் பிச்சை, என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் மற்றும் அடோப்பின் சாந்தனு நாராயண் போன்ற முக்கிய சிஇஓக்கள் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நியூயார்க்கில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. விண்வெளி தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் மற்றும் பல அம்சங்களைப் பற்றி விவாதித்தேன். மேலும் இந்தத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்தேன். இந்தியா மீதான அபரிமிதமான நம்பிக்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனிடையே, செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக்னாலஜி உள்ளிட்ட அதிநவீன துறைகளில் இந்த வட்டமேசை கவனம் செலுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "உலக அளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிலப்பரப்பு மற்றும் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்வுக்கு இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பது குறித்து பிரதமருடன் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆழமாக மூழ்கினர். தொழில்நுட்பம் எவ்வாறு உள்ளது என்பதை அவர்கள் தொட்டனர். உலகப் பொருளாதாரம் மற்றும் மனித வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்ட புதுமைகளுக்குப் பயன்படுகிறது" என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ×