என் மலர்tooltip icon

    உலகம்

    • பிரதமர் மோடியுடன் இருப்பதையே ஜோ பைடன் மறந்து விட்டார்.
    • வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 81 வயது ஆகிறது. அவர் வயது மூப்பு காரணமாக மறதியால் அவதிப்படுகிறார். அந்த குறைபாட்டால், ஜனாதிபதி தேர்தலில் இருந்தும் அவர் விலக வேண்டியதாகி விட்டது. பிற நாட்டு தலைவர்களின் பெயரை அவர் மாற்றிக் கூறுவதும், அச்சிட்ட உரையில் அதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் திருத்துவதும் வழக்கம்.

    இந்நிலையில், அமெரிக்காவில் டெலவர் மாகாணத்தில் 'குவாட்' மாநாடு நடந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய, ஜப்பான் பிரதமர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்த ஜோ பைடன், பிரதமர் மோடியை அறிமுகப்படுத்த வேண்டிய நேரத்தில், அவரது பெயரை மறந்து விட்டார்.

    ''அடுத்து யாரை நான் அறிமுகப்படுத்த வேண்டும்?'' என்று மைக்கில் கேட்டார். சிறிது இடைவெளி விட்ட பிறகும் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. ''அடுத்து யார்?'' என்று ஒரு ஊழியரை கேட்டார்.

    ஜோ பைடன் சார்பில் அந்த ஊழியர், பிரதமர் மோடியை பேச அழைத்தார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.

    ''பிரதமர் மோடியுடன் இருப்பதையே ஜோ பைடன் மறந்து விட்டார். ஒட்டுமொத்த உலகமும் நம்மைப்பார்த்து சிரிக்கிறது'' என்று அமெரிக்கர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

    • நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவே இல்லை.
    • மக்கள் எனக்கு பதவி உயர்வு அளித்து என்னை பிரதமராக்கினர்.

    பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேசினார். இதையடுத்து நியூயார்க் சென்ற பிரதமர் மோடி அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த இந்தியாவின் முதல் பிரதமரான தன்னால் நாட்டிற்காக உயிரைக் கொடுக்க முடியாது, ஆனால் நிச்சயமாக நாட்டிற்காக வாழ முடியும்.

    சுயராஜ்ஜியத்திற்காக (சுய ஆட்சி) என் உயிரைக் கொடுக்க முடியவில்லை. ஆனால், சு-ராஜ் (நல்லாட்சி) மற்றும் வளமான நாட்டிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக நான் முடிவு செய்துள்ளேன்.

    நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவே இல்லை, ஆனால் நான் அதைச் செய்தபோது குஜராத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தேன்.

    அப்போது மக்கள் எனக்கு பதவி உயர்வு அளித்து என்னை பிரதமராக்கினர். ஆனால், நாடு முழுவதும் பயணம் செய்து நான் கற்றுக்கொண்டதுதான் எனது ஆட்சி மாதிரியை வலுவாக மாற்றியது. இந்த மூன்றாவது தவணையில் நான் மூன்று மடங்கு பொறுப்புடன் முன்னேறி வருகிறேன் என்றார்.

    • கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
    • இங்கிலாந்து அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சீன ஆதரவு பெற்ற 30 கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை சீனாவின் கலாசாரத்தை சர்வதேச அளவில் பரப்புவதற்கான பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையே இந்த கல்வி நிறுவனங்கள் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செயல்பாடுகளிலும் செல்வாக்கு செலுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அங்குள்ள கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவதாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார்.

    இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செயல்பாடுகளில் தலையிடுவது நிரூபணமானது. எனவே அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் நிறுத்துவதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அதே சமயம் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
    • அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், 2024-ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028-ல் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவேன் என நினைக்கவில்லை என தெரிவித்தார்.

    • இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை.
    • இந்தியா புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது என்றார்.

    வாஷிங்டன்:

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது.

    இந்தியா யாரையும் பின்பற்றிச் செல்வது இல்லை. புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது.

    உலகில் நான் எங்கு சென்றாலும் ஒவ்வொரு தலைவரும் புலம்பெயர்ந்த இந்தியர்களைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.

    இந்த 2024-ம் ஆண்டு முழு உலகிற்கும் முக்கியமானது. ஒரு பக்கம் சில நாடுகளுக்கிடையே மோதலும் போராட்டமும் நடக்க, மறுபக்கம் பல நாடுகளில் ஜனநாயகம் கொண்டாடப்படுகிறது. இந்த ஜனநாயகக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக உள்ளன.

    இந்தியாவில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் மனித வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய தேர்தல். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வாக்காளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்திய ஜனநாயகத்தின் இந்த அளவைப் பார்க்கும்போது நாம் இன்னும் பெருமையாக உணர்கிறோம்.

    நான் எனக்கென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் விதி என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தது.

    நான் முதலமைச்சராக வருவேன் என நினைக்கவில்லை. நான் குஜராத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தேன். அதன்பின், மக்கள் என்னை பதவி உயர்த்தி பிரதமராக்கினர். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் நான்தான்.

    கோடிக்கணக்கான இந்தியர்கள் சுதந்திரப் போராட்டத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.

    இந்தியாவுக்காக சாக முடியாது, ஆனால், நாட்டிற்காக வாழலாம். சுயராஜ்ஜியத்துக்காக என்னால் என் உயிரைக் கொடுக்க முடியவில்லை, ஆனால் நல்லாட்சி மற்றும் வளமான இந்தியா ஆகியவற்றிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.

    ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் பார்க்கிறோம். இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன என தெரிவித்தார்.

    • பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது.
    • எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

    வாஷிங்டன்:

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ. என்பது செயற்கை நுண்ணறிவைக் குறிக்கிறது.

    ஆனால் என்னைப் பொறுத்தவரை ஏஐ என்பது அமெரிக்கா-இந்தியாவை குறிக்கிறது.

    இது உலகின் புதிய ஏஐ சக்தி. இங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு எனது வணக்கம்.

    நீங்கள் இந்தியாவை அமெரிக்காவையும், அமெரிக்காவை இந்தியாவையும் இணைத்துள்ளீர்கள்.

    உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு போட்டி இல்லை. நீங்கள் ஏழு கடல்களுக்கு அப்பால் வந்திருக்கலாம்.

    ஆனால் எந்தக் கடலும் உங்களை இந்தியாவிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு ஆழம் கொண்டிருக்கவில்லை.

    பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது. எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம்.

    பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது, பன்முகத்தன்மையை வாழ்வது என்பது நம் நரம்புகளில் உள்ளது என தெரிவித்தார்.

    • படிக்கும் காலத்தில் ஆயுதமேந்திய இடதுசாரி கிளர்ச்சி இயக்கமான ஜேவிபி[JVP] அமைப்பில் சேர்ந்துள்ளார்.
    • 2014 ஜனவரியில் ஜேவிபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

    இலங்கை அதிபர் தேர்தல்

    இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் ஜனதா விம்முக்தி பெரமுனா (JVP) - (NPP) கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன்படி ஜெவிபி தலைவர் அனுர குமார திசாநாயக [55 வயது] இலங்கை அதிபராகிறார். இலங்கையில் நடந்த பொருளாதார நிலையின்மை பிரச்சனைக்குப் பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இது. இந்த தேர்தலில் 23 சதவீத வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் ப்ரேமதாசாவை 42 சதவீத வாக்குகளைப் பெற்று திசாநாயக வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெறும் 16 சதவீத வாக்குகளுடன் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.

     ஜேவிபி

    இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புட்டேகம [Thambuttegama] கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பிறந்தார் அனுர குமார திசாநாயக. இவரது தந்தை தினக் கூலியாக வேலை பார்த்தவர் ஆவார். களனி பல்கலைக்கழகத்தில் [university of Kelaniya] அறிவியலில் பட்டம் பெற்ற திசாநாயக படித்துவந்த சமயத்திலேயே ஏகாதிபத்திய முதலாளித்துவ போக்கை கடைப்பிடித்த அப்போதைய அரசுக்கு எதிராக 1987 -89 காலகட்டத்தில் எழுச்சி பெற்ற ஆயுதமேந்திய கிளர்ச்சி இயக்கமான மார்க்சிய லெனினிய  இடதுசாரி ஜேவிபி[JVP] அமைப்பில் சேர்ந்துள்ளார்.

     

    அரசியல் 

    1995 ஆம் ஆண்டில் சோஷலிஸ்ட் மாணவர்கள் அசோசியசனுக்கு தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திசநாயக அதன்பின்னர் ஜேவிபி அமைப்பின் மத்திய செயற்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1998 இல் ஜேவிபி அமைப்பின் அரசியல் முடிவுகளை எடுக்கும் பொலிட்டிகள் பீரோ குழுவில் சேர்க்கப்பட்டார்.

    2000 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட திசநாயக பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய அதிபர் குமாரதுங்கா ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த ஜேவிபி அமைப்பினர் 2002 ஆம் ஆண்டு அவருடைய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் அமைதி பேச்சுவரத்தை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஆதரவை விளக்கிக்கொண்டனர்.

    CHEASEFIRE - LTTE

    தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சேவின் UPFA கட்சியுடன் கூட்டு வைத்த ஜேவிபி விடுதலைப் புலிகளுடன் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான சீஸ் ஃபயர்[ceasefire] ஒப்பந்தத்தை எதிரித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அந்த தேர்தலில் இவர்களின் கூட்டணி வெற்றி சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்க அதிபரானார். கூட்டணியில் இருந்த ஜேவிபி யை சேர்ந்த அனுர திசநாயகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழிந்து திசநாயாக அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

    தலைவர் 

    தொடர்ந்து அரசியலில் தீவிரத்துடன் இயங்கி வந்த அவர் கடந்த 2014 ஜனவரியில் ஜேவிபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வென்ற அனுர குமார திசநாயக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நிலைத்தன்மை சிதைந்ததால் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து அதன்பின் நடக்கும் தற்போதைய தேர்தலில் அனுர குமார வென்றுள்ளார்.

    பொருளாதார நிலையின்மை 

    இலங்கை அரசில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாக அமைப்பை முற்றிலுமாக மாற்றுவதாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த திசநாயக முந்தைய அரசுகள் பொருளாதாரத்தைக் காப்பாற்றத் தவறியதை சுட்டிக்காட்டி தங்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி மக்களிடம் ஆதரவு கேட்டார். ஜேவிபியின் தேர்தல் அறிக்கையில் இலங்கையின் கல்வி, பொது சேவைகள் மற்றும் மக்கள் வாசிப்பதற்கான குடியிருப்பு தட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை பிரதானமாக முன்னிறுத்தி வாக்குறுதிகள் அமைந்திருந்தது.

     

    வரும் -காலம் 

    இந்தியாவுக்கு கச்சத்தீவை வழங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் நிலையாக உள்ள ஜேவிபி இடதுசாரி அமைப்பாக இருந்தாலும் தமிழர்கள் பிரச்சனையில் சிங்கள ஆதிக்கத்தின் பக்கம் சார்ந்து ஒரு தலை பட்சமாகவே செயல்பட்டு வருவது ஆகும். எனவே வரும் காலங்களிலும் அனுர திசநாயகவின் முடிவுகளில் அது பிரதிபலிக்கும் என்றே எதிரிபார்க்கப்படுகிறது. ஆனால் தங்களுக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்க்கது.

    • அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
    • ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்.

    இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார்.

    இதன்மூலம், இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார். அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

    கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உள்ளிட்ட 158 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக முதலிடம் பிடித்துள்ளார்.

    அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, " நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்" என்று அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும்.

    நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்" என்றார்.

    • விடிய, விடிய வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.
    • ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார்.

    இலங்கையில் அதிபராக உள்ள ரணில் விக்ரம சிங்கேவின் பதவி காலம் முடிவடைவதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெ டுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

    இதற்காக 13,421 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இலங்கையில் 1.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தேர்தலில் 75 சத வீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான வாக்கு சீட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    அதன்பின் சில மணி நேரங்களுக்குள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் வாக்குப் பெட்டிகளின் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன. விடிய, விடிய வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.

    தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இலங்கையில் முன்னுரிமை வாக்கு என்ற முறை பின்பற்றப்படுகிறது.

    ஒரே வாக்குச்சீட்டில் 1, 2, 3 என மூன்று வேட்பாளர்களுக்கு, தங்கள் வாக்கை, வாக்காளர்கள் அளிக்க வேண்டும். வாக்குச் சீட்டில் 'ஒன்று' என்று குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர், அந்த வாக்காளரின் முதல் முன்னுரிமையைப் பெற்றவர் ஆகிறார்.

    இரண்டு, மூன்று என அடுத்தடுத்த இடங்களில் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்கள், அந்தந்த வாக்காளர்களின் அடுத்தடுத்த முன்னுரிமைகளை பெறுவார். 1-ம் எண் கொண்ட முன்னுரிமை கொண்ட வாக்குகளை, 50 சதவீதத்துக்கும் அதிகமாக பெறும் வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

    ஒரு வேளை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஏற்கனவே நடந்த வாக்கு எண்ணிக்கையில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு செல்வார்கள்.

    இந்த இரண்டாம் சுற்றில், வாக்குச்சீட்டுகளில் 2 மற்றும் 3-ம் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். இதில் இரண்டு வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள், மொத்த வாக்குகளுடன் சேர்த்து கணக்கிடப்படும்.

    அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே, நமல் ராஜபக்சே உள்பட38 பேர் களத்தில் இருந்தனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார். மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் அனுர குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

    தமிழர் பகுதிகளில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆனால் ஓட்டு மொத்தமாக அனுர குமார திசாநாயகே முன்னிலையில் இருந்தார்.

    இந்நிலையில், இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயகே வெற்றிப்பெற்றுள்ளார்.

    • ஆயுதமேந்திய மர்ம நபர்கள் இன்று காலை 11 மணியளவில் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்
    • ஒரே வருடத்தில் 403 துப்பாக்கிசூடு சம்பவங்களில் சுமார் 12,416 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைப் பறித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலபாமா மாகாணத்தில் இன்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் டசன் கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நேற்று இரவு 11 மணியளவில்  பிரம்பிங்கம் [Birmingham] மாவட்டத்தில் உள்ள பைவ் பாயிண்ட்ஸ் [Five Points] பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடைபாதையில் குண்டடிபட்டு மயக்கமாகக் கிடந்த இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணை பார்த்துள்ளனர். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் குண்டடிபட்ட மற்றொரு நபர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணியில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

     

    அமெரிக்காவில் இந்த வருடம் மட்டும் இதுபோன்ற 403 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் [mass shootings] பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளில் இந்த ஒரே வருடத்தில் சுமார் 12,416 பேர் உயிரிழந்துள்ளதாக கன் வயலன்ஸ் ஆர்கைவ் [GVA] என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    • தென் கொரியாவுக்கு தப்பி செல்ல வைக்க உதவி வந்துள்ளனர்.
    • ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    வட கொரிய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அந்நாட்டின் சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என இரு பெண்கள் பொது வெளியில் வைத்து தூக்கிலடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் சீனாவில் உள்ள வட கொரிய மக்களை தென் கொரியாவுக்கு தப்பி செல்ல வைக்க உதவி வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம் சீனாவால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட சுமார் 500 வட கொரியர்களில் 39 வயதான ரி மற்றும் 43 வயதான காங் என இருவரும் அடங்குவர். இதே போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ரேடியோ ஃபிரீ ஆசியா வெளியிட்டுள்ள தகவல்களில் பொது வெளியில் உள்ள சந்தையில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், ரி மற்றும் காங் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இருவர் செய்த குற்றம் தொடர்பாக ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நீடித்தது. அன்றைய நாள் காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை, அதே நாளில் ஹம்கியோங் மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இரண்டு பெண்களுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    • இரண்டாவது விவாதத்தை வரும் ஆக்டொபர் 23 ஆம் தேதியன்று ஏற்பாடு செய்ய சிஎன்என் தொலைக்காட்சி முன்வந்துள்ளது.
    • கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவாதிக்க துணிச்சல் இல்லாமல் டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இருவரும் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி ஏபிசி தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கமலா ஹார்ஸ் டிரம்புடன் காரசாரமான விவாதங்களை நடத்தி பாராட்டுகளைப் பெற்றார். இந்த விவாதத்துக்குப் பின்னர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரிட்டுள்ளதாக சர்வே கூறுகிறது.

    இந்த நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் இருவரும் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஆனால் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் இரண்டாவது விவாதத்தை வரும் ஆக்டொபர் 23 ஆம் தேதியன்று ஏற்பாடு செய்ய சிஎன்என் தொலைக்காட்சி முன்வந்துள்ளது.

     

    இந்த விவாதத்தில் பங்கேற்க கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.மிச்சிகனில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என கூறினார் எனவே டிரம்ப் விவாதத்தை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஏற்கனவே மிகவும் தாமதம் ஆகிவிட்டது. சில மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, எனவே மீண்டும் விவாதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    ஜோ பைடனுடன் விவாதிக்கும்போது தைரியமாகப் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவாதிக்க துணிச்சல் இல்லாமல் பின்வாங்கியுள்ளார் என்று ஜனநாயகவாதிகள் டிரம்பை சமூக வலைதளங்களில் கிழித்தெடுத்து வருகின்றனர்.

    ×