இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை பதவியேற்கும் அனுர குமார திசநாயக

அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்.
இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை பதவியேற்கும் அனுர குமார திசநாயக
Published on

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம், இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார். அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உள்ளிட்ட 158 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக முதலிடம் பிடித்துள்ளார்.

அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, " நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்" என்று அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், " சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும்.

நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com