என் மலர்tooltip icon

    உலகம்

    • தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.
    • 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

    கொழும்பு:

    இலங்கையில் அதிபராக உள்ள ரணில் விக்ரம சிங்கேவின் பதவி காலம் முடிவடைவதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

    இதற்காக 13,421 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இலங்கையில் 1.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் பதிவான வாக்கு சீட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    அதன்பின் சில மணி நேரங்களுக்குள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் வாக்குப் பெட்டிகளின் வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. விடிய, விடிய வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.

    தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இலங்கையில் முன்னுரிமை வாக்கு என்ற முறை பின்பற்றப்படுகிறது.

    ஒரே வாக்குச்சீட்டில் 1, 2, 3 என மூன்று வேட்பாளர்களுக்கு, தங்கள் வாக்கை, வாக்காளர்கள் அளிக்க வேண்டும். வாக்குச்சீட்டில் 'ஒன்று' என்று குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர், அந்த வாக்காளரின் முதல் முன்னுரிமையைப் பெற்றவர் ஆகிறார்.

    இரண்டு, மூன்று என அடுத்தடுத்த இடங்களில் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்கள், அந்தந்த வாக்காளர்களின் அடுத்தடுத்த முன்னுரிமைகளை பெறுவார். 1-ம் எண் கொண்ட முன்னுரிமை கொண்ட வாக்குகளை, 50 சதவீதத்துக்கும் அதிகமாக பெறும் வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

    ஒருவேளை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஏற்கனவே நடந்த வாக்கு எண்ணிக்கையில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு செல்வார்கள்.

    இந்த இரண்டாம் சுற்றில், வாக்குச்சீட்டுகளில் 2 மற்றும் 3 -ம் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். இதில் இரண்டு வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள், மொத்த வாக்குகளுடன் சேர்த்து கணக்கிடப்படும்.

    அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே, நமல் ராஜபக்சே உள்பட38 பேர் களத்தில் இருந்தனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார். மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் அனுர குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.


    தமிழர் பகுதிகளில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆனால் ஓட்டு மொத்தமாக அனுர குமார திசாநாயகே முன்னிலையில் இருந்தார்.

    அம்பாந்தோட்டை, காலே, கொழும்பு, மாத்தறை, கண்டி, அனுராதபுரம், குருநாகல், பதுளை, கம்ப ஹா, கேகாலை, ரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, திகாமடுல்ல, நுவற-எலியா, புத்தளம், திரிகோணமலை ஆகிய மாவட்டங்களில் முன்னிலை வகித்த அனுர குமார திசநாயகே அங்கு 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்றார்.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அனுர குமார திசாநாயகே 50 சதவீதத்துக்கு மேலாக வாக்குகள் பெற்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் அனுர குமார திசா நாயகே வாக்கு சதவீதம் திடீரென குறைந்தது.

    2-வது இடத்தில் சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் 2 சதவீதமாக இருந்தது. பின்னர் அனுர குமார திசா நாயகேவின் வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்த தால் அவர் சதவீதம் உயர்ந்தது.

    மதியம் 12 மணி நிலவரப்படி அவர் 40.07 சதவீத (23 லட்சத்து 82 ஆயிரத்து 208 வாக்குகள்) பெற்றிருந்தார்.

    2-வது இடத்தில் சஜித் பிரேமதாச (33.38 சதவீதம்), 3-வது இடத்தில் ரணில் விக்ரமசிங்கே (17.41 சதவீதம்) பிடித்தார். தமிழ் பொது வேட்பாளர் அரிய நேத்திரன் பாக்கிய செல்வம் 3.45 சதவீத வாக்குகளும், நமல் ராஜபக்சே 2.29 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

    ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அனுர குமார திசாநாயகே 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருவேளை முதல் சுற்றில் 50 சதவீத வாக்கு களை எந்த வேட்பாளரும் பெறாதபட்சத்தில் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதில் அனுர குமார திசநாயகே, சஜித் பிரேம தாசா ஆகியோருக்கு விழுந்த வாக்குகள் எண்ணப்படும்.

    இதற்கிைடையே அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகே வெற்றி பெற்று இருப்பதாக அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது. அவர் இன்று மாலை அதிபராக பதவி ஏற்பார் என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக களம் இறங்கினார். இலங்கை பொருளாதார நெருக்கடியால் சீர்குலைந்த சமயத்தில் அதிபராக பதவியேற்ற அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். பின்னர் இலங்கை பொரு ளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டது.

    இதனால் நம்பிக்கையுடன் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே படுதோல்வியை சந்தித்துள்ளார். அவரை யும், சஜித் பிரேமதாசாவையும் பின்னுக்கு தள்ளி அனுர குமார திசநாயகே இலங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

    2022-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சி யால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார்.

    அதன்பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அதன் முடிவுகள் உலக அளவில் கவனம் ஈர்த்தன என்பது குறிப் பிடத்தக்கது.

    • விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர்.
    • இச்சம்பவத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

    நார்வே நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர். இதனால் விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டது.

    பின்னர் பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு ஸ்பெயினுக்கு புறப்பட்டனர்.

    இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், 'பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது' எனவும் உறுதியளித்துள்ளது.

    • வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
    • இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி முன்னிலை வகிக்கிறது.

    கொழும்பு:

    இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மனிக்கு நிறைவடைந்தது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், கொழும்பு பாடசாலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார். அவர் 60.83 சதவீத வாக்கு பெற்று முன்னிலை வகிக்கிறார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 21.06 சதவீத வாக்கு பெற்றுள்ளார்.

    புதிய அதிபர் யார் என நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

    தேர்தலுக்கு பிந்தைய வன்முறையைத் தடுக்கும் விதமாக இலங்கையில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.
    • இலங்கையில் நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மனிக்கு நிறைவடைந்தது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், கொழும்பு பாடசாலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. புதிய அதிபர் யார் என நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

    இந்நிலையில், இலங்கையில் நாளை (செப்டம்பர் 23-ம் தேதி) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிபர் தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் விசேஷ பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
    • இந்தியா உடனான அமெரிக்க உறவு வலுவாக உள்ளது என்றார் அதிபர் ஜோ பைடன்.

    வாஷிங்டன்:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

    குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    மேலும், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அப்போது அதிபர் ஜோ பைடன், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்போன்ஸ் ஆகியோரை அதிபர் ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார்.

    அதன்பின், குவாட் அமைப்பின் தலைவர்கள் 4 பேரும் சந்தித்து ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தொடர்ந்து பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

    குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    இதற்கிடையே, அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

    இந்நிலையில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது. இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

    • காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்தப் போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    காசா:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், ஒப்பந்த அடிப்படையில் 105 பிணைக்கைதிகளை மீட்டது. அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பிணைக்கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கிடையே, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், காசாவில் உள்ள செய்டவுன் என்ற பகுதியில் உள்ள பள்ளிக்கூடம்மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பழைய பள்ளிக்கூட வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மட்டும் கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

    • குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார்.
    • பிலடெல்பியா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

    குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    இந்நிலையில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தச் சந்திப்பு மிக பயனுள்ளதாக இருந்தது. பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்தார்.

    • குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
    • பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

    அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க நேரப்படி 21-ம் தேதி (இன்று) பங்கேற்கிறார்.

    இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

    அடுத்த நாள் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 23-ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்தப் பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.

    இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இரவு அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி மகிழ்ந்தார்.

    • தேவை ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தயார் என அறிவிப்பு.
    • தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இலங்கை அதிபர் தேர்தல் வெற்றி நிலவரம் இரவு 10 மணிக்குள் தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தேவை ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தயார் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, அனுர குமார திசாநாயக்க, நமல் ராஜபக்சே, சஜித் பிரேமதாசா உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
    • கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது

    கைது செய்யப்பட்ட நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நிகழ்வு அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலுக்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
    • அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார்.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

    தேர்தலுக்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார்.

    காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வாக்குப்பதிவு 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

    ×