அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார்.பிலடெல்பியா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு
Published on

வாஷிங்டன்:

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தச் சந்திப்பு மிக பயனுள்ளதாக இருந்தது. பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com