குவாட் அமைப்பு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.இந்தியா உடனான அமெரிக்க உறவு வலுவாக உள்ளது என்றார் அதிபர் ஜோ பைடன்.
குவாட் அமைப்பு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
Published on

வாஷிங்டன்:

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

மேலும், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அப்போது அதிபர் ஜோ பைடன், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்போன்ஸ் ஆகியோரை அதிபர் ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார்.

அதன்பின், குவாட் அமைப்பின் தலைவர்கள் 4 பேரும் சந்தித்து ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com