என் மலர்
உலகம்

இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது: அதிபர் ஜோ பைடன்

- அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தொடர்ந்து பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதற்கிடையே, அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
இந்நிலையில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது. இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.