என் மலர்
உலகம்

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்

- குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
- பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.
அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க நேரப்படி 21-ம் தேதி (இன்று) பங்கேற்கிறார்.
இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
அடுத்த நாள் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 23-ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்தப் பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இரவு அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி மகிழ்ந்தார்.
#WATCH | Philadelphia, US | PM Narendra Modi interacted with the members of the Indian diaspora outside Philadelphia airport pic.twitter.com/wahJYVZ5PS
— ANI (@ANI) September 21, 2024