என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
    • இதைத் தொடர்ந்து அந்த விமானம் ரோமுக்கு திருப்பி விடப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து புதுடெல்லி செல்லும் தினசரி விமானத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஏர்லைன்சின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நேற்று முன்தினம் இரவு 8.14 மணிக்கு நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 285 பயணிகள் பயணம் செய்தனர்.

    காஸ்பியன் கடலுக்கு மேலே சென்று ஐரோப்பா நோக்கித் திரும்பியது.. பாதுகாப்பு அச்சுறுத்தலால் விமானிகள் நடுவானில் யு-டர்ன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, இத்தாலியின் ரோம் நகருக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது.

    இதுதொடர்பாக, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏஏ 292 விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக ரோமுக்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். நிலைமை சரியானதும் அடுத்த தகவல் வழங்குவோம். பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளது.

    • ஜெர்மனியில் இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.
    • ஆளும் கட்சியின் ஒலாப் ஸ்கால்ப்ஸ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளது என்றும், அவரது கட்சி முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏ.எப்.டி. இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஜெர்மனி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் எனக்கூறி தோல்வியை ஒப்புக் கொண்டார் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ்.

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
    • போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்றார் அதிபர் டிரம்ப்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையானது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைனில் அமைதி திரும்ப நான் எனது பதவியை விட்டுத் தரவேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன்.

    உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷியாவின் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, டிரம்ப் ரஷியாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

    இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும். இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • கும்பமேளாவிற்கு 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

    இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 62 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.

    இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் புனித நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.

    • இந்திய நேரப்படி இன்று மாலை 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    • ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்பாடலை நடிகர் சிலம்பரசன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் வைபாகவும் குத்து பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை ரோகேஷ் மற்றும் ஜிகேபி எழுதியுள்ளனர்.

    பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று யூடியூபில் இதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
    • நிதானமாக விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார்.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீல் 62 ரன்களும் ரிஸ்வான் 46 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார். ஷ்ரேயாஸ் அரைசதம் அடித்து அவுட்டானார்.

    இதன் மூலம் அரையிறுதி செல்வதை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது.

    • டிக்கெட் கிடைக்காதவர்கள் முதலில் ஹோல்டிங் ஏரியாவுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வடக்கு ரெயில்வே போர் அறையில் இந்த ஆய்வு நடக்கிறது.

    டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    புதுடெல்லி ரெயில் நிலையத்தில் அணுகல் கட்டுப்பாடு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பயணிகள் முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தால், அவர்கள் நேரடியாக நிலையத்திற்குள் செல்வார்கள். டிக்கெட் கிடைக்காதவர்கள் முதலில் ஹோல்டிங் ஏரியாவுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கான கவுன்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே ஸ்டேஷனுக்குள் நுழையும் வகையில் ஹோல்டிங் ஏரியாவில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வடக்கு ரெயில்வே போர் அறையில் இந்த ஆய்வு நடக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
    • நமது சமூகத்தை பிரித்து, ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.

    மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

    பிறகு, விழாவில் பேசிய அவர், "அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதத்தையும், கலாசாரத்தையும் விமர்சிக்கின்றனர்" என்று கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்து மதத்தை வெறுப்பவர்கள் அனைத்து காலகட்டங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். 

    நாட்டில் இன்று சில தலைவர்கள் மதத்தை கேலி செய்வதையும், மக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். இவர்களைப் போன்ற நபர்களுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் ஆதரவளிக்கின்றன.

    அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதம், கலாசாரம், நம்பிக்கை, பண்பாடு மற்றும் பண்டிகைகளை விமர்சிக்கின்றனர். இயற்கையாகவே முற்போக்கு தன்மையை உடைய நமது மதம் மற்றும் கலாசாரத்தை அவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

    நமது சமூகத்தை பிரித்து, ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் ஓவர் வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் 5 வைடு பந்துகளை வீசினார்.
    • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் 124 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ரன்னிலும் கில் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    முன்னதாக இப்போட்டியில் முதல் ஓவர் வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் 5 வைடு பந்துகளை வீசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் (11) வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் உடன் முகமது ஷமி சமன் செய்துள்ளார்.

    2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜாகீர் கான் ஒரு ஓவரில் 11 பந்துகளும் 2006 ஆம் ஆண்டு இர்பான் பதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 11 பந்துகளும் வீசி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

    • ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும்.

    ஹேமந்த் நாராயணன் மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் Found footage ஹாரர் திரைப்படமாகும். Found footage ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா ஃபூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர்.

    இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    இப்படத்தை ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் `கபா கபா கபிஸ்து' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம் மேற்கொள்கிறார்.ரோகித் படத்தொகுப்பை செய்கிறார். திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மர்மர் படத்தின் டிரெய்லரை படக்குழு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
    • சச்சின், சங்ககாராவிற்கு பிறகு இந்த சாதனையை கோலி படைத்துள்ளார்.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் 102 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ரன்னிலும் கில் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இப்போட்டியில் நிதானமாக விளையாடி வரும் கோலி 15 ரன்கள் அடித்தபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை அதிவேகமாக கடந்து கோலி சாதனை படைத்துள்ளார்.

    சச்சின், சங்ககாராவிற்கு பிறகு இந்த சாதனையை படைத்த 3 ஆவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். 36 வயதான கோலி, 287 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை படைக்க சச்சின் 350 இன்னிங்ஸ்களிலும் சங்ககாரா 378 இன்னிங்ஸ்களிலும் 14,000 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×