என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இப்போட்டியில் பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்கியது

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்தார்.

    61 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 80 போட்டிகளில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 68 ரன்கள் விளாசினார்.

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பில் சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் அட்டமிழந்தார்.

    அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். 3-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டக்கெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். இவரை வருண் சக்ரவர்த்தி வீழ்த்தினார்.

    ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டன் ரன்ஏதும் எடுக்காமலும் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது. கடைசி பந்தில் மார்க் வுட் ரன்அவுட் ஆக இங்கிலாந்து 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

    • பஞ்சாப் அரசு லாகூர் மற்றும் ராவல்பிண்டி போட்டிகளுக்காக 12,500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருக்கிறது.
    • கராச்சியில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருக்கிறது.

    பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. லாகூர் மற்றும் ராவல் பிண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் இடங்கள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான பணிகளை பஞ்சாப் மாகாண அரசு தொடங்கியுள்ளது.

    போட்டிகள் மற்றும் பங்கேற்கும் அணிகளுக்காக பஞ்சாப் அரசு 12,500 காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருக்கிறது. சிறப்பு கமாண்டர்கள் உள்பட 7,600 போலீஸ்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் லாகூரில் நடைபெறும் போட்டிகளுக்காக பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    411 சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்பட 4,500 போலீசார் ராவல்பிண்டியில் பாதுகாப்பை மேற்பார்வையிட இருக்கிறார்கள். தேவைப்பட்டால் ராணுவ உதவியுடன் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மற்றும் வான் பாதுகாப்பு மூலம் போட்டிகள் கண்காணிக்கப்படும். போலீஸ் உடன் துணை ராணுவ ரேங்கில் உள்ள அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கராச்சியில் நடைபெறும் போட்டிகளுக்காக குறைந்தபட்சம் 5 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்கள் என சிந்து காவல்துறைக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் முன்னதாக 2023-ல் ஆசிய கோப்பை தொடரை நடத்தியது. ஆனால் நான்கு போடடிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெற்றது. மற்ற போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் 11 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும். இந்தியா தகுதி பெறுவது பொறுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவது முடிவு செய்யப்படும்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுடன் லாகூர் மற்றும் கராச்சியில் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது.

    கராச்சியில் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க போட்டி நடைபெறுகிறது. முத்தரப்பு தொடரில் பிப்ரவரி 12 மற்றும் 14-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் போட்டி நடைபெற இருக்கிறது.

    லாகூர் மற்றும் ராவல்பிண்டி பஞ்சாப் மாகாண எல்லையிலும், கராச்சி சிந்து மாகாண எல்லையிலும் உள்ளன. இந்த பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசுகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன.

    • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் ஆவல்

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்கவுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்

    இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (ஹெச்.டி./எஸ்.டி.) தொலைகாட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைத்தளத்திலும் நேரலை செய்யப்படுகிறது.

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க நிகழ்ச்சி அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடக்கவுள்ளது.
    • கேப்டன்கள் சந்திப்பிற்காக ரோகித் பாகிஸ்தான் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கேப்டன்கள் சந்திப்பு மற்றும் போட்டோசூட்டுக்காக இந்திய கேப்டன் ரோகித் பாகிஸ்தான் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே இந்திய அணியின் ஜெர்சியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயரை அச்சிட பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியானது.

    இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை ஜெர்சியில் பொறிக்க வேண்டும் என ஐசிசி தெளிவுபடுத்தியது.

    கடந்த ஒருநாள் உலக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றபோது இந்தியாவின் பெயரை பாகிஸ்தான் அணியின் ஜெர்சியில் அச்சடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
    • நீங்கள் காயமடைந்தால், மீண்டு வந்து அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாட வேண்டும்.

    இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இந்த டி20 போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது சமி களம் இறங்கவுள்ளார். இதற்காக சமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்தது குறித்து முகமது சமி பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் பேசும் சமி, " நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது பெற்றோர் நமக்கு எப்படி நடக்க வேண்டும் என கற்றுத் தருவர். நாம் கீழே விழுவோம், மீண்டும் எழுவோம். ஆனால், நடக்க கற்றுக் கொள்வதை நிறுத்தவே மாட்டோம். அதேபோல தான் விளையாட்டிலும், நீங்கள் காயமடைந்தால், மீண்டு வந்து அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாட வேண்டும்.

    எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம். நீங்கள் ரன்கள் அடிக்கும்போதும் விக்கெட்டுகள் எடுக்கும்போதும் அனைவரும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் கடினமான காலங்களில் யார் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை உணர்வதே உண்மையான சோதனையாகும். கடந்த ஓராண்டாக காத்திருந்து கடினமாக உழைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • எனக்கு அதுபற்றிய உணர்வுகள் வருகின்றன.
    • இதுப்பற்றி எந்த உத்தரவாதமும் இல்லை.

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி. டி. வில்லியர்ஸ். கிரிக்கெட் உலகில் இவர் "மிஸ்டர் 360" என்று அழைக்கப்படுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஏபி. டி. வில்லியர்ஸ் சமீபத்திய நேர்காணலின் போது மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

    கிரிக்கெட் போட்டிகளின் போது எந்தவிதமான சூழ்நிலையிலும் பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்துவதில் புகழ்பெற்றவர் ஏபி. டி. வில்லியர்ஸ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    இந்த நிலையில், அவரது சமீபத்திய கருத்துக்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கலந்த நம்பிக்கையை தூண்டியுள்ளது. கிரிக்கெட் பற்றி சமீபத்திய நேர்காணலில் பேசிய ஏபி. டி. வில்லியர்ஸ், "இன்றும் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். இதுப்பற்றி எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் எனக்கு அதுபற்றிய உணர்வுகள் வருகின்றன."

    "என் குழந்தைகள் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். நான் அவர்களுடன் வலைபயிற்சி செல்ல விரும்புகிறேன். எனக்கு அது பிடித்துவிட்டால், சற்று வெளியே சென்று மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால் அது தொழில்முறை ஐ.பி.எல். அல்லது தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணமாக இருக்காது."

    "யாருக்கு தெரியும்? பார்ப்போம். இந்த கண் இன்னமும் வேலை செய்கிறதா என்பதை பார்ப்போம், நான் மீண்டும் முயற்சிக்கிறேன். தற்போது கொஞ்சம் தெளிவற்ற நிலையில் தான் உள்ளது, ஆனால் இது நன்றாக வேலை செய்கிறது. தற்போது என் குழந்தைகளுக்காக இதை செய்கிறேன். அதன்பிறகு மீண்டும் கிரிக்கெட் மூலம் மகிழ்ச்சி அடைய முடியுமா என்பதை பார்க்கிறேன்," என்று தெரிவித்தார். 

    • இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
    • முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (ஹெச்.டி./எஸ்.டி.) தொலைகாட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைதளத்திலும் நேரலை செய்யப்படுகிறது.

    கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியை இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி விவரம்

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
    • 2 ஆவது டி20 போட்டி ஜனவரி 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இதனையடுத்து 2 ஆவது டி20 போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    அன்றைய நாளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முகமது சமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • இந்திய அணியினருடன் இணைந்து முகமது சமி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இந்த டி20 போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது சமி களம் இறங்கவுள்ளார். இதற்காக சமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் முகமது சமியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அந்த ஸ்டோரியில், "சமி ஹீரோ டா.. ஹீரோ" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் தீப்தி சர்மா 4-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    மகளிருக்கான ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 41, 73, 135 ரன்கள் எடுத்ததால் ஒருநாள் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.

    கேப்டன் கவுர் ஒரு இடம் பின்தங்கி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டி20 தரவரிசையில் 12வது இடத்தில் நீடிக்கிறார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடம் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 14வது இடத்தில் நீடிக்கிறார்.

    பந்துவீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    • முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 161 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பென் மெக்டர்மார்ட் 42 ரன்னும், காலெப் ஜுவல் 40 ரன்னும், மிட்செல் ஒவன் 36 ரன்னும், டிம் டேவிட் 25 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோர்டான் சில்க் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்தீஸ் பாட்டர்சன் 48 ரன் எடுத்து அவுட்டானார். லச்சின் ஷா 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணி 24-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் சிட்னி தண்டர் அல்லது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் மோதுகிறது.

    ×