என் மலர்
விளையாட்டு
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது.
- அதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் தேர்வானார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்கமுடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்நிலையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- என் மனைவியுடன் இங்கே அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
- என்னுடைய மகளுக்கு நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது புரிய வாய்ப்பில்லை.
இந்தியாவில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்கவிருக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் துபாயில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரானது எப்போதும் பல வீரர்களின் எதிர்காலத்தை தலைகீழாக மாற்றியுள்ளது. பல இந்திய வீரர்கள் உட்பட, பல வெளிநாட்டு வீரர்களும் அவர்களுடைய கடினமான குடும்ப சூழலில் இருந்து மேலே வருவதற்கான சூழலை ஐபிஎல் தொடர் இதுவரை ஏற்படுத்தி தந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செலை சுமார் 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இத்தனை கோடிக்கு ஏலம் எடுத்தது குறித்து நியூசிலாந்து வீரர் மிட்செல் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இது ஒரு குடும்பமாக எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இரவு என்று தான் சொல்லவேண்டும். என் மனைவியுடன் இங்கே அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட அன்று எனது பெரிய மகளுக்கு பிறந்தநாள்.
என்னுடைய மகளுக்கு நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது புரிய வாய்ப்பில்லை. ஆனால் இந்த பெரிய தொகையின் மூலம் எனது இரு மகள்களும் அவர்களுக்கு பிடித்தவாறு வாழ்க்கையை வாழ்வார்கள். நாம் செய்வது அனைத்தும் நமது மகள்களுக்குத்தானே.
இவ்வாறு மிட்செல் கூறினார்.
- ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனார்.
- பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதரபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசியில் தொடங்குகிறது. இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன.
இதனையடுத்து கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனார். இவரை கொல்கத்தா நைட் டைரஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவது முதல் முறையாகும். முன்னதாக பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதரபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
மற்ற நாட்டு வீரர்களான நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசஃப் ரூ.11.50 கோடிக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.75 கோடிக்கும் ஏலம் எடுத்தது.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்கள் 42 பேர் ஏலம் போன மொத்த தொகை ரூ. 79.45 கோடி. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் 6 பேர் மட்டும் ஏலம் போனது 68.05 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.

ஆஸ்திரேலிய விரர்கள் எடுக்கப்பட்ட தொகை விவரம்:-
மிட்செல் ஸ்டார்க் - 24.75 கோடி
பேட் கம்மின்ஸ் - 20.5 கோடி
திராவிஸ் ஹெட் - 6.80 கோடி
ஸ்பென்சர் ஜான்சன்- 10 கோடி
ஜே ரிச்சர்ட்சன் -1.5 கோடி
அஸ்டர் டர்னர் - 1 கோடி
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
- ரோகித் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து வருகிற 26-ந் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றிருந்த விராட் கோலி குடும்ப சூழ்நிலை காரணங்களுக்காக சொந்த நாடு திரும்புகிறார். அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு கலந்து கொள்ளும் வகையில் திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மற்றொரு வீரரான ருதுராஜ் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகி உள்ளார்.
டெஸ்ட் அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத்.
- பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.
- பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.
துபாய்:
பெர்த் நகரில், ஆஸ்தி ரேலியா-பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.

இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது. இதையடுத்து அவர் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார். இது ஐ.சி.சி.யின் ஆடை மற்றும் உபகரண விதி மீறல்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கவாஜாவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கூறும்போது, "உஸ்மான் கவாஜா, தனிப்பட்ட செய்தியை காட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. முன் அனுமதி பெறாமல் கருப்பு பட்டை அணிந்துள்ளார். இது ஒரு விதி மீறல் ஆகும். முதல் கட்ட விதி மீறலையடுத்து கண்டனம் தெரிவிக்கப்படுகிறது" என்றார்.
இது தொடர்பாக கவாஜா கூறும்போது, "தனிப்பட்ட துக்கத்திற்காக கருப்பு பட்டையை அணிந்ததாக ஐ.சி.சி.யிடம் கூறினேன். ஐ.சி.சி.யால் நான் கண்டிக்கப்பட்டதாக நினைக்கவில்லை" என்றார்.
பார்ல்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
இதில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த 'இம்பேக்ட் பீல்டர்' விருதை இளம் வீரரான சாய் சுதர்சன் வென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசினார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை சஞ்சு சாம்சன் பதிவு செய்துள்ளார்.
பார்ல்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் நேற்று பகல்-இரவாக நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 108 ரன்களில் (114 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். இதனையடுத்து 297 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த மற்றொரு வீரரான கருண் நாயர் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி அரைசதம் அடித்தது இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் ஒரு போட்டியில் 300 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
- பிக்பாஷ் தொடரில் சிட்னி சிக்சர் அணிக்காக டாம் கரண் விளையாடி வருகிறார்.
- பிக்பாஷ் தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடப்பு ஆண்டுக்கான பிக்பாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிட்னி சிக்சர் அணியில் இடம் பிடித்த டாம் கரண் அடுத்த வரும் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லான்செஸ்டனில் டிசம்பர் 11 அன்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி சிக்ஸர்ஸ் மோதியது இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட டாம் கரண் நடுவருடன் மோதலில் ஈடுபட்டார்.
போட்டிக்கு முன் பவுலிங் ரன் அப்பிற்காக டாம் கரண் அளவு மேற்கொண்டார். அப்போது ரன் அப் செய்ய முயன்றார். இதனை பார்த்த நடுவர் ஆடுகளத்தின் அந்தப் பகுதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட போதிலும், மற்றொரு பயிற்சி ரன்-அப்பிற்காக கரண் எதிர் முனைக்குச் சென்றார்.
ஆடுகளத்தை நோக்கி ரன் அப் செய்த தயாராக இருந்த டாம் கரணை தடுப்பதற்காக ஸ்டம்புகளுக்கு அருகில் நடுவர் நின்றார். இதை பார்த்த கரண் நடுவரை விலகிச் செல்லும்படி சைகை செய்தார். அதற்கு நடுவர் இதில் பயிற்சி செய்ய கூடாது. அதற்கு பக்கத்தில் செய்யுமாறு கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத கரன், அவரை நோக்கி ரன் அப் செய்து அவர் மீது மோதுவது போல ஓடி வந்து தள்ளி சென்றார்.
இதனால் ஆஸ்திரேலியா நடத்தை விதிகளின் கீழ் "நிலை 3" குற்றத்திற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த நிலையில் நேற்று 4 போட்டிகளில் விளையாட அவருக்கு தடை அறிவிப்பு வெளியானது.
இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- புரோ கபடி லீக்கில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.
- மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.
சென்னை:
10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும.
இந்த கபடி திருவிழா நீண்ட இடைவெளிக்கு பிறகு எல்லா அணிகளுக்கும் உரித்தான நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய இடங்களில் ஏற்கனவே நடந்த சுற்று முடிவில் புனேரி பால்டன் (5 வெற்றி, ஒரு தோல்வி) 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் (3 வெற்றி, ஒரு தோல்வி, 2 'டை') 21 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (3 வெற்றி, 2 தோல்வி, ஒரு 'டை') 20 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரியானா ஸ்டீலர்ஸ் (4 வெற்றி, ஒரு தோல்வி) 20 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் 4-வது சுற்று போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் (இரவு 8 மணி) மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன. சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 11-வது இடத்தில் உள்ளது. நீரஜ் குமார் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. 4 ஆண்டுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடரை நாங்கள் நன்றாக தான் தொடங்கி இருக்கிறோம். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் நாங்கள் டாப்-6 இடங்களுக்குள் முன்னேற முடியும். எங்கள் அணியில் துடிப்பான இளம் வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எங்களது ஆட்டத்தில் பலவீனம் எதுவுமில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவாக இருக்கின்றனர். ரசிகர்களின் ஆதரவு ஈடுஇணையற்ற சக்தியாகும். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நன்றாக தயாராகி இருக்கிறோம்.' என்றார்.
தமிழ் தலைவாஸ் கேப்டன் சாகர் ரதி கூறுகையில், 'இந்த சீசனை மறக்க முடியாததாக மாற்ற தயாராகி வருகிறோம். சொந்த மைதானத்தில் பிரகாசிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்' என்றார்.
- தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாசானமுத்து இடம் பெற்றுள்ளார்.
- பெற்றோருக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன்.
சென்னை:
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதன் 4-வது சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ் தலைவாஸ் அணியில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாசானமுத்து இடம் பெற்றுள்ளார்.
இதற்கிடையே தூத்துக்குடியில் பெய்த மழை-வெள்ளத்தில் மாசானமுத்துவின் வீடு இடிந்துள்ளது.
இதுகுறித்து மாசான முத்து கூறும்போது, "வெள்ளத்தில் சிக்கி எனது வீடு இடிந்துள்ளது. நான் விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக பெற்றோருக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் வெள்ளத்தில் வீடு இடிந்து விட்டதால் அவர்களால் சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது" என்றார்.
- ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் லயோலா கல்லூரி வீரர் சூர்ய பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்றார்.
- பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம். ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை டி.லதா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 55-வது டாக்டர் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் லயோலா கல்லூரி வீரர் சூர்ய பிரகாஷ் (16.51 மீட்டர்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பிரதீப் குமாரும் (டி.ஜி.வைஷ்ணவா), 100 மீட்டர் ஓட்டத்தில் சந்தோஷ்சும் (டி.பி.ஜெயின்), 400 மீட்டர் ஓட்டத்தில் நாகார்ஜூனனும் (லயோலா) முதலிடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம். ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை டி.லதா (37 நிமிடம் 42.27 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். வட்டு எறிதலில் பிரிய தர்ஷினி, ஈட்டி எறிதலில் சவுமியாவதி (இருவரும் எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா), 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஸ்ரீ ரேஷ்மா (லயோலா), 400 மீட்டர் ஓட்டத்தில் ருசிகா (எத்திராஜ்), 100 மீட்டர் தடை ஓட்டத்தில் மரிய நிவேதா, டிரிபிள ஜம்ப்பில் பபிஷா, குண்டு எறிதலில் ஷர்மிளா (மூவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா) ஆகியோர் முதலிடத்தை சொந்தமாக்கினர்.
- சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார்.
- சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பார்ல்:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் (108 ரன்) சதம் அடித்தார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவ ரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக டோனிபூ ஜோர்ஜி 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 4 விக்கெட்டும், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது:-
இளம் வீரர்களை கொண்ட அணியாக தொட ரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின்னர் மீண்டும் தற்போது வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வீரர்களுடன் நான் ஐபிஎல்லில் நிறைய விளையாடியிருக்கிறேன்.தற்போது அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்கவும் நன்றாக இருக்கிறது.
இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் கூறினேன். மகிழ்ச்சியுடன் உங்களது திறமையை களத்தில் வெளிப்படுத்துங்கள். முடிவுகளை பற்றி யோசிக்காமல் உங்களது திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று கூறினேன். அந்த வகையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இளம்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனால் சர்வதேச போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களுக்காக டாப் ஆர்டரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை வீரர்களுடன் கொண்டாடிவிட்டு ஓரிரு நாட்களில் மீண்டும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 10 விக்கெட் கைப்பற்றி அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றி மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிகாவும் வெற்றி பெற்றன.






