என் மலர்
விளையாட்டு
- ஆர்சிபி அணிக்கெதிராக 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 27 ரன்கள் விட்டுக்கொடுதது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் குஜராத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணியால் 172 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதற்கு ஆவேஷ் கானின் பந்து வீச்சும் முக்கிய காரணம். அவர் 4 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ரஜத் படிதார் (34), லோம்ரோர் (32), தினேஷ் கார்த்திக் (11) ஆகியோரை வீழ்த்தினார்.
அதேபோல் இன்று சென்னையில் நடைபெற்று வரும் குவாலிபையர்-2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் பந்து வீச்சில் அசத்தினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
நிதிஷ் ரெட்டி (5), அப்துல் சமாத் (0), ஷபாஸ் அகமது (18) ஆகியோரை வெளியேற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை 175 ரன்னில் கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.
முக்கியமான இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
- கிளாசன் அரைசதம் அடித்து அவுட் ஆனார்.
- ராஜஸ்தான் அணியின் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன் காரணமாக முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 34 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
சுவிட்சர்லாந்து:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் நாட்டின் தாமஸ் மசாக்குடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், 2வது செட்டை கைப்பற்றினார். 3வது செட்டை தாமஸ் வென்றார்.
இறுதியில், தாமஸ் மசாக் 6-4, 0-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.
- ஐ.பி.எல். 2024 தொடரின் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.
- இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். அந்த வகையில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
ஜமைக்கா:
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 6 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிரண்டன் கிங் அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ட்ரிக்ஸ் தனி ஆளாகப் போராடி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
துபாய்:
ஐ.சி.சி.யின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.
இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தூதராக இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
- வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயரை நீக்கியுள்ளார்.
- பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருவரின் புகைப்படங்களை நடாஷா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட, அவை பலரின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையான ஒன்றுதான்.
இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த தம்பதியிடையே ஏதும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதோ என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர்சூட்டினர்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயர் நீக்கியது, ஐ.பி.எல். 2024 தொடரின் போட்டிகளின் போது வராமல் இருந்தது, மற்றும் இருவர் தொடர்பான புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருப்பது இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.
- ஷர்துலின் பதிவை பயனர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
- காரில் எங்கோ சென்று கொண்டிருக்கும் ஷர்துல் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூர், 9 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஷர்துல் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்போட்டிகளில் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறப்பான ஆட்டமாக உள்ளது.
இந்நிலையில், ஷர்துல் எக்ஸ் தள பக்கத்தில் "ஃபாஸ்ட் டேக் அல்லது ஸ்லோ டேக்" என்ற தலைப்பில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தை பார்க்கும் போது, காரில் எங்கோ சென்று கொண்டிருக்கும் ஷர்துல் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார். நெரிசலுக்கு சுங்கச்சாவடியே காரணம் என்று கருதப்படுகிறது.
ஷர்துலின் இந்த பதிவை பயனர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு ஒரு பயனர் கூறுகையில், உங்கள் பந்துவீச்சு போல் மெதுவாக என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் "இது தோனியின் 2019 அரையிறுதி இன்னிங்ஸை விட மெதுவாக இருக்கும்" என கருத்து தெரிவித்துள்ளார்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
சுவிட்சர்லாந்து:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுயில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூருடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 6-3, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 10 முதல் 11 மாதம் அணியுடன் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு ஒத்து வராது- ரிக்கி பாண்டிங்.
- பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன்- ஜஸ்டின் லாங்கர்.
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை கோரியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற 28-ந்தேதி கடைசி நாளாகும்.
வெளிநாட்டு பயிற்சியாளரை பிசிசிஐ விரும்புவதாகவும் ஸ்டீபன் பிளமிங் அல்லது ரிக்கி பாண்டிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேவேளையில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் "தலைமை பயிற்சியாளர் பதவிக்கான பிசிசிஐ தன்னை அணுகியது. தன்னுடைய வாழ்க்கை முறைக்கு தற்போது அந்த பதவி பொருந்தாது" எனத் தெரிவித்திருந்தார்.
மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜஸ்டின் லாங்கர் தலைமை பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் தலைசிறந்த முன்னாள் வீரர்கள் உள்ளபோது, ஏன் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் எனவும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் யாரிடமும் பிசிசிஐ கோரிக்கை வைக்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
- தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.
- மைதானத்திற்கு வெளியே, நான் அவருடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்தார்.
தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஆர்சிபி அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அணி வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் சங்கர் பாசு, தினேக் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்களது எமோஷனலை பகிர்ந்துள்ளனர்.

வீடியோவில் விராட் கோலி கூறியதாவது:- டி.கே.வை முதன் முதலில் சந்தித்தது 2009 சாம்பியன்ஸ் டிராபி. தென்னாப்பிரிக்காவில் விளையாடினோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, நான் தினேஷுன் உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொண்டது அதுவே முதல் முறை. அப்போது தான், அவர் மிகவும் வேடிக்கையாக இருப்பதைக் கண்டேன். மிகவும் சுறுசுறுப்பானவர்.
மைதானத்திற்கு வெளியே, நான் அவருடன் சில நல்ல மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியிருக்கிறேன். அவர் ஒரு புத்திசாலி, கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்களைப் பற்றி அபார அறிவு கொண்டவர். அவருடனான எனது உரையாடல்களை நான் மிகவும் ரசித்துள்ளேன். அவர் விரும்பும் விஷயங்களை பற்றி யாரிடமும் சென்று பேசும் அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
தினேஷ் கார்த்திக் குறித்து அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் கூறியிருப்பதாவது:- தினேஷ் கார்த்திக்கின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டேன். கார்த்திக் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை நீங்கள் அடிக்கடி காண முடியாது. கார்த்திக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதால், தன்னுடனும் அவர்களது குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவிடுவார். என்னுடைய வற்புறுத்தலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.
DK, We love you! ❤
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 24, 2024
Not often do you find a cricketer who's loved by everyone around him. DK is one, because he was smart, humble, honest, and gentle! Celebrating @DineshKarthik's career with stories from his best friends and family! ?#PlayBold #ನಮ್ಮRCB #WeLoveYouDK pic.twitter.com/fW3bLGMQER
- இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 55 நிமிடங்கள் தேவைப்பட்டது.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார்.
இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக
ஹான் ஹூ 21-14 என 2-வது செட்டை வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பி.வி.சிந்து 21-12 என கைப்பற்றியதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சலியா காலிறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.






