என் மலர்
விளையாட்டு
- டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது.
- பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்.
பிரெஞ்சு ஓபன் மற்றும் இதர டென்னிஸ் போட்டி தொடர்கள் நடத்தப்படும் விதம் சரியாக இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை கோகோ கௌஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் போட்டிகள் பொதுவாக நடத்தப்படும் விதம், பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் அட்டவணை என ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளின் திட்டமிடல்களை கோகோ கௌஃப் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக நடைபெற்ற டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது, உடல்நலத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.
"அதிகாலை 3 மணிக்கு போட்டிகளை முடிப்பது, பல சமயங்களில் நீங்கள் போட்டி முடிந்ததாக நினைக்கலாம். ஆனால் அதன் பிறகு, உங்களுக்கென சில கடமைகள் இருக்கும்- அவற்றை செய்து முடிக்க வேண்டும். இந்த பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்."
"இது உடல்நலனுக்கு நல்லது இல்லை என்றே நினைக்கிறேன். போட்டியில் தாமதமாக விளையாட வேண்டும் என்போருக்கு இது சரியாக இருக்காது, ஆனால் இது உங்களது அட்டவணையை அடியோடு மாற்றிவிடும். அதிக நேரம் கால தாமதத்துடன் போட்டியை நான் இதுவரை முடித்ததில்லை என்ற வகையில், நான் அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன்," என்று கோகோ கௌஃப் தெரிவித்தார்.
- ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு 46. 54 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது.
ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பைக்கான மொத்த பரிசுத்தொகையாக 93.5 கோடியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 20.36 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்னர் அப் அணிக்கு 10.36 கோடி பரிசுத்தொகையாகும்.
செமி பைனலில் தோற்கும் அணிகளுக்கு 6.54 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இதுவரை நடைபெற்ற டி20 உலககோப்பைகளில் அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகைகளில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு மொத்தமாக 46.54 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூயார்க்:
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் மெண்டீஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 3 ஓவரில் வெறும் 13 ரன்களே எடுத்தது.
தொடர்ந்து தடுமாறி வந்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த வகையில் நிசங்கா 8 பந்தில் 3 ரன்களிலும், கமிண்டு மெண்டீஸ் 15 பந்தில் 11 ரன்களிலும், ஹசரங்கா 0, சதீரா 0, அசலங்கா 6, குசல் மெண்டீஸ் 19 (30) தசுன் சனங்கா 9, பதிரனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
- முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார். இதனால் 4-6, 6-2, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரிடம் மெட்வதேவ் தோல்வியைத் தழுவினார்.
- இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்காவும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்படுகின்றனர்.
- டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
நியூயார்க்:
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோதுகிறது.
இந்த தொடருக்கான இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்காவும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்படுகின்றனர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
- உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை.
- நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா தங்களுடைய பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கும் இந்தியா 2-வது போட்டியில் பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை தமக்கு இடம் கிடைக்காததால் தாம் பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அரையிறுதியில் விளையாடப் போகும் டாப் 4 அணிகளை பற்றி கணித்தால் நான் ஒருதலைபட்சமாக இருப்பேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை. கடைசியில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.
ஏதோ ஒரு தருணத்தில் என்னை நீங்கள் இந்திய அணியில் எடுப்பீர்கள் அல்லவா? எனவே நான் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்பதை பற்றி கவலைப்படவில்லை என்று கூறினார்.
அவருடைய இந்த கருத்து இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுவரை இந்தியாவுக்காக அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரிலும் 2024 சீசன் தவிர்த்து பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டுள்ள ரியான் பராக் சுயநலமாக நாட்டுப்பற்று இல்லாமல் பேசியுள்ளார். அதனால் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
- ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2018-ல் தேர்வானார்.
- மும்பைக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்க முடியாது.
மகாராஷ்டிராவை சேர்ந்த கேதர் ஜாதவ் கடந்த 2007 முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அந்த வாய்ப்பில் 2013-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் 1233 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். அதன் காரணமாக 2014-ம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்தார். அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக புனே நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதை மறக்க முடியாது.
அந்தப் போட்டியில் 351 ரன்களை சேசிங் செய்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது விராட் கோலியுடன் சேர்ந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சதமடித்து 120 (76) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அதுவே அவருடைய கேரியர் சிறந்த செயல்பாடாகவும் அமைந்தது.
அதே காரணத்தால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2018-ல் தேர்வான அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்க முடியாது.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறிய அவரை இந்தியா மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் கழற்றி விட்டது. அதனால் 39 வயதாகும் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் 2020-ல் டோனி ஓய்வு அறிவித்த போது சொன்ன வார்த்தைகளை அப்படியே நகலெடுத்து தன்னுடைய ஓய்வையும் அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-
என்னுடைய கேரியர் முழுவதிலும் அன்பையும் ஆதரவையும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 1500 மணியிலிருந்து (3 மணி) அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் என்னை ஓய்வு பெற்றுவதாக கருத்தில் கொள்ளுங்கள். என்று பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் அவர் டோனி ரசிகன் என்பதை நிரூபித்துள்ளார். விடைபெறும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
- கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
- அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல மற்றொரு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி சபலெங்கா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய போட்டியில் கென்ட் - ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் மோதின.
- இந்த போட்டியில் ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் கிறிஸ் வூட் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய போட்டியில் கென்ட் - ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற கென்ட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கென்ட் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பில்லிங்ஸ் 43 ரன்கள் எடுத்தார். ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் தரப்பில் வுட், ஜேம்ஸ், ஹோவெல், லியாம் டாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து ஆடிய ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணி 19.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் கிறிஸ் வூட் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் இன்னிங்சின் கடைசி ஓவரை கிறிஸ் வூட் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எவிசன் எதிர் கொண்டார். அந்த பந்தை வேகமாக விளாசினார். ஆனால் அந்த பந்து எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேன் பார்கின்சன் மீது தாக்கியது. இதனால் அவர் மைதானத்தின் பாதியில் சுருண்டு விழுந்தார். அவர் மீது பட்ட பந்து பவுலர் வூட் பக்கம் சென்றது. அதனை எடுத்துக் கொண்ட அவர் ஸ்டெம்பை அடித்து அவுட் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஸ்டெம்பை அடிக்காமல் கடைசி பந்தை வீசுவதற்காக சென்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கைதட்டி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது.
- 2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
பிரிட்ஜ்டவுன்:
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா-ஓமன் அணிகள் மோதின.
டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய நமீபியா அணியும் 20 ஓவரில் 6 விக்கெட் 109 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுக்கப்பட்டது.
டேவிட் வைஸ் 13 ரன்னும், எராஸ்மாஸ் 8 ரன்னும் எடுத்தார். அடுத்து 22 ரன் இலக்குடன் ஓமன விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை நமீபியா படைத்துள்ளது. இதற்கு முன்பு 19 ரன்கள் எடுத்ததே சூப்பர் ஓவரில் அதிக ரன் ஆகும். இதனை நமீபியா முறியடித்துள்ளது.
2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 2 சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஒரு போட்டியில் இலங்கை -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 13 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2-வது சூப்பர் ஓவர் போட்டியில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. ஆனால் அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் ஓவர்களின் பட்டியல்:-
1. நியூசிலாந்து 174/7 (20 ஓவர்கள்) - இலங்கை 174/6 (20 ஓவர்கள்) - இலங்கை வெற்றி சூப்பர் ஓவர், 13/1 - 7/1 - கண்டி, 2012
2. மேற்கிந்திய தீவுகள் 139 (19.3 ஓவர்கள்) - நியூசிலாந்து 139/7 (20 ஓவர்கள்) - மேற்கிந்திய தீவுகள் சூப்பர் ஓவர் வெற்றி, 19/0 - 17/0 - கண்டி, 2012
3. ஓமன் 109 (20 ஓவர்கள்) - நமீபியா 109/7 (20 ஓவர்கள்) - நமீபியா சூப்பர் ஓவர் வென்றது, 21/0 - 10/1 - பார்படாஸ், 2024
- ஹர்திக் - நடாஷா ஜோடி பிரிந்துவிட்டதாக கடந்த சில வாரங்களாக தகவல் வெளியானது.
- திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட படங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடாஷா ஸ்டான்கோவிக் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதிக்கு குழந்தை உள்ளது.
ஹர்திக் - நடாஷா ஜோடி பிரிந்துவிட்டதாக கடந்த சில வாரங்களாக தகவல் வெளியானது. முன்னதாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியிலும் நடாஷா பங்கேற்காதது, இன்ஸ்டாவில் இருந்து தனது திருமண புகைப்படங்களை நீக்கியது உள்ளிட்டவை இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய படங்களை தற்போது ரிஸ்டோர் செய்துள்ளார். நடாஷா இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட படங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில், நடாஷா தனது கணவரை பிரியவில்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- டிமிட்ரோவ் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
- அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் சினெர்-பிரான்சின் மவுடெட் மோதினர். இதில் சினெர் 2-6, 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் டிமிட்ரோவ் (பல்கேரியா-7-6 (7-5), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
அதே போல அல்காரஸ் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு ஸ்வியாடெக் (போலந்து)-வோன்ட்கோவா (செக்குடியரசு), கோகோ காப் (அமெரிக்கா)-ஜபீர் (துனிசியா) ஆகியோர் தகுதி பெற்றனர்.






