என் மலர்
விளையாட்டு
- தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினார்.
- செல்லும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பதக்கங்களை எடுத்துச் சென்று காட்டி வருவதாக விமர்சனம் எழுந்தது
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இந்தியாவை சேர்ந்த இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினார்.
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த பின் நாடு திரும்பிய மனு பாக்கர் தற்போது ஓய்வில் உள்ளார். அவரை கவுரவிக்கும் விதாமாக தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் மனு பாக்கர் தான் ஒலிம்பிக்சில் வென்ற பதக்கங்களை, செல்லும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று காட்டி வருவதை சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த விமர்சனத்துக்கு மனு பாக்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பாரிஸ் ஒல்லிபிக்சில் நான் வென்ற பதக்கங்கள் இந்தியாவுக்கு சொந்தமானது. எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கங்களை காட்டச் சொன்னாலும் அதை நான் பெருமையுடன் செய்கிறேன். எனது அழகு வாய்ந்த இந்த பயணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வழியாக இதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று அசத்தியது.
- தங்கம் வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது.
- அடுத்து ஆடிய டிரின்பாகோ அணி 197 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் தற்போது கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது. கேப்டன் பிளட்சர் 93 ரன்னும், கைல் மேயர்ஸ் 60 ரன்னும் எடுத்தனர்.
டிரின்பாகோ அணியின் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட் எடுத்தார்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டிரின்பாகோ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஜேசன் ராய், நிகோலஸ் பூரன் அதிரடி காட்டினர்.
நிகோலஸ் பூரன் 43 பந்தில் 94 ரன்னும், ஜேசன் ராய் 34 பந்தில் 64 ரன்னும் எடுத்தனர். இறுதியில், டிரின்பாகோ அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் நிகோலஸ் பூரன் 7 சிக்சர் அடித்தார். இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 150 சிக்சர் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர் 63 இன்னிங்சில் 151 சிக்சர்கள் அடித்துள்ளார்.
ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டில் 36 இன்னிங்சில் 135 சிக்சர் அடித்து இருந்தார்.
இதேபோல், டி20 அரங்கில் ஒரு ஆண்டில் 2,000 ரன் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிகோலஸ் பூரன் படைத்துள்ளார்.
இவர் 63 இன்னிங்சில் 2,022 ரன் எடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021ல் 48 இன்னிங்சில் 2,036 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரானி கோப்பை டெஸ்ட் போட்டி அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இதில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதுகின்றன.
மும்பை:
இந்தியாவின் முக்கிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற ஒரு டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. 2023-24 ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணி விவரம்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள், ரிக்கி புய், ஷஷ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்.
இதில் துருவ் ஜூரல் மற்றும் யாஷ் தயாள் வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகினர். அந்தப் போட்டியில் களமிறங்காத பட்சத்தில் அவர்கள் அணியில் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி விவரம்:
அஜிங்ய ரகானே (கேப்டன்), பிரித்வி ஷா, ஆயுஷ் மத்ரே, முஷீர் கான், ஷ்ரேயஸ் அய்யர், சித்தேஷ் லாட், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), வித்தந்த் அத்தாத்ராவ் (விக்கெட் கீப்பர்), ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், ஹிமான்சு சிங், ஷர்துல் தாக்கூர், மொஹித் அவஸ்தி, முகமது ஜீனத் கான், ராய்ஸ்டன் டயஸ், சர்பராஸ் கான்.
- ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது.
- நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.
லண்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நேற்று டிஎல்எஸ் முறையில் தோல்வி அடைந்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து டி.எல்.எஸ். முறைப்படி வெற்ரி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 14 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இங்கிலாந்து நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
- ஒரு விக்கெட் வீழ்த்தினால் 4-வது இன்னிங்சில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் ஆவார்.
- 3 விக்கெட் வீழ்த்தினால் வங்கதேச அணிக்கெதிராக அதிக விக்கெட் சாதனை படைப்பார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் முதல் இன்னிங்சில் 113 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் படைத்தார் அஸ்வின்.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் அஸ்வினால் ஆறு சாதனைகள் படைக்க முடியும். அந்த சாதனைகளை பார்ப்போம்....
1. டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 4-வது இன்னிங்சில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். ஒட்டுமொத்தமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 6-வது வீரர் ஆவார்.
2. இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். ஜாகீர்கான் 31 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அஸ்வினுக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் தேவை.
3. 2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. ஹேசில்வுட் தற்போது முன்னணியில் உள்ளார். அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்தினால் ஹேசில்வுட்டைந் முந்த முடியும்.
4. டெஸ்ட் கிரிக்கெட் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் 2-வது இடத்தில் ஷேன் வார்னே உடன் உள்ளார். தற்போது அஸ்வின் 37 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கான்பூர் டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்தினால் 2-வது இடத்தை உறுதி செய்வார்.
5. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலி6ல் 7-வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. தற்போது 522 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அஸ்வின், கான்பூர் டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினால் 7-வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
6. ஒட்டுமொத்தமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் சாதனை படைக்க வாய்ப்புள்ளது. அஸ்வின் 180 விக்கெட் வீழ்த்தியுள்ளார். நாதன் லயன் 187 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 8 விக்கெட் வீழ்த்தினால் நாதன் லயன் சாதனையை முறியடிக்க முடியும்.
- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் கடும் சவாலாக இருக்கும்.
- எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இது ஆஸ்திரேலிய அணிக்கும் நன்கு தெரியும்.
மும்பை:
9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்.4-ந்தேதி மோதுகிறது. தொடர்ந்து 6-ந்தேதி பாகிஸ்தானையும், 9-ந்தேதி இலங்கையையும், 13-ந்தேதி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது.
இந்த போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய பெண்கள் அணியின் கேப்டன் 35 வயதான ஹர்மன்பிரீத் கவுர் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோப்பையை தட்டித்தூக்குவதே எங்களது பிரதான இலக்கு. ஒரு அணியாக அதற்காகத் தான் முயற்சிக்கிறோம். உலகில் எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்போதும் அணிக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்கள் மற்றும் நாட்டுக்காக கோப்பையை வென்று கொண்டுவர வேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு. அதை இந்த தடவை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினோம். கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் இறுதி சுற்றை நெருங்கி வந்து தோல்வி கண்டோம். இந்திய அணிக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அது முக்கியமான தருணங்களில் ஜொலித்து கோப்பையை வெல்வது வரை எடுத்து செல்லும்.
அணி குறித்து பேச வேண்டும் என்றால், சில வீராங்கனைகள் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். அணியில் தங்களுக்குரிய பங்களிப்பு என்ன என்பது அவர்களுக்கு தெரியும். நமது அணி மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. உலகக் கோப்பைக்கு செல்லும் மிகச்சிறந்த இந்திய அணி இது தான் என்று சொல்ல முடியும். எல்லா வகையிலும் போட்டிக்கு தயாராகி உள்ளோம்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் கடும் சவாலாக இருக்கும். எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இது ஆஸ்திரேலிய அணிக்கும் நன்கு தெரியும். தங்களை ஒரு அணியால் வீழ்த்த முடியும் என்றால் அது இந்தியா தான் என்பதை ஆஸ்திரேலியர்கள் அறிவார்கள்.
என்னை பொறுத்தவரை பல உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் உள்ளது. 19 வயதில் எப்படி ஆடினேனோ அதே உத்வேகத்துடன் இப்போதும் விளையாட விரும்புகிறேன். துபாய், சார்ஜாவில் ஆடும் போது அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வருகை தந்து உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது.
லண்டன்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 77 ரன்னும், ஸ்டீவ் சுமித் 60 ரன்னும், ஆரோன் ஹார்டி 44 ரன்னும், கேமரூன் கிரீன் 42 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் டக் அவுட்டானார். பென் டக்கெட் 8 ரன்னில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் ஜோடி பொறுப்புடன் ஆடி 156 ரன்களை சேர்த்தது. வில் ஜாக்ஸ் அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹாரி புருக் சிறப்பாக ஆடி சதம் கடந்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 37.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூல ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-2 என பின்தங்கி உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
- ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
- இதில் இந்திய இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பீஜிங்:
ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.
இதில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஜெர்மனியின் கான்ஸ்டன்டைன்-ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்தது. ஆனாலும் சுதாரித்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.
பீஜிங்:
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டி நடந்தது.
இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 4-6, 6-4, 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
- பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
- ஜூலானா தொகுதியில் வேட்பாளராக வினேஷ் போகத் களமிறங்கியுள்ளார்.
மல்யுத்த வீராங்கனையாக இருந்த வினேஷ் போகத் 2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் இறுதி சுற்று வரை சென்று 100 கிராம் எடை அதிகரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தோடு நாடு திரும்பினார்.
இறுதிப் போட்டியில் விளையாட முடியாததை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய வினேஷ் போகத், நாடு திரும்பியதும் மலியுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதோடு, சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
எதிர்வரும் அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் வேட்பாளராக வினேஷ் போகத் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்காக வினேஷ் போகத் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரரான யோகஷ்வர் தெரிவித்துள்ளார்.
"அவர் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவர் தவறு செய்ததாகக் கூறி ஒட்டுமொத்த தேசத்தின் முன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, இது ஒரு சதி என்று அவர் குறிப்பிட்டார், நாட்டின் பிரதமரைக் கூட குற்றம் சாட்டினார்."
"தகுதி நீக்கம் சரியான நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரியும். எடை ஒரு கிராம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் விளையாட்டு வீரர்களை தகுதி நீக்கம் செய்கிறார்கள்," என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் யோகேஷ்வர் தத் தெரிவித்தார்.
- ஷேக் ஹசீனா கட்சியின் எம்பியாக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
- மாணவர்கள் போராட்டத்தின் போது ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.
மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
கலவரத்தின்போது கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக்கில் ஷகிப் அல் ஹசன் விளையாடி கொண்டிருநதார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. .
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், நாடு திரும்பினால் எந்த துன்புறுத்தலும் இருக்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.
இதனையடுத்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்திற்கு ஷகிப் அல் ஹசன் திரும்ப உள்ளார் என்று சொல்லப்படுகிறது.






