என் மலர்
விளையாட்டு
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது.
- டெஸ்டில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.
துபாய்:
இலங்கை, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 63 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை ஒரு இடம் உயர்ந்து 3-வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வி அடைந்த நியூசிலாந்து ஒரு இடம் சரிந்து 4வது இடத்திற்கு சென்றது.
இங்கிலாந்து 5-வது இடத்திலும், வங்கதேசம் 6-வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
- தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க செய்தது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று அசத்தியது. இதே வேகத்தில் மூன்றாவது போட்டியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், அதில் மட்டும் தோல்வியை தழுவியது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் வீரர் ரகமத் ஷா அவுட் ஆன விதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் ஒன்பதாவது ஓவரை வீசிய நிகிடியின் பந்தை ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரகமனுள்ளா குர்பாஸ் ஓங்கி அடித்தார்.
எனினும், அந்த பந்து நிகிடி கையை நோக்கி சென்றது. அதனை பிடிக்க நிகிடி முயற்சிக்க, அது அவரது கையில் இருந்து நழுவி அருகே ரன் ஓட முயற்சித்த ரகமத் ஷாவின் தலையில் பட்டு, நேரடியாக ஸ்டம்ப்களை தாக்கியது. பந்து ஸ்டம்ப்களை அடிக்கும் போது அவர் கிரீஸை விட்டு வெளியே நின்றிருக்க அவர் அவுட் என தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார்.இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
35 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. கருணரத்னே 83 ரன்களும் சண்டிமால் 61 ரன்களும் அடித்தனர்.நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 7 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இலங்கை அணியின் அபார பந்து வீச்சில் திணறிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். வில்லியம்சன், பிளெண்டல் தலா 30 ரன்னும், டாம் லாதம் 28 ரன்னும் எடுத்தனர்.இறுதியில், 4-ம் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது.
ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து வெற்றி பெற 68 ரன்களை அடிக்க வேண்டிய சூழலிலும், இலங்கை அணி வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.
கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா 1 ரன் மட்டும் அடித்து 92 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக நியூசிலாந்து அணி 211 ரன்களில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 63 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
- இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
அங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டில் பொது மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
செஸ் உலகின் தலைசிறந்த போட்டியில், மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி, நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
- கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் மகிழ்ச்சி.
புடாபெஸ்ட்:
அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஷாத்பி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.
11 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் ஓபன் பிரிவில் 21 புள்ளிகள் எடுத்தது. 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு சுற்று 'டிரா' ஆனது. தோல்வி எதையும் சந்திக்கவில்லை.
பெண்கள் பிரிவில் 19 புள்ளிகள் கிடைத்தது. 9 வெள்ளி பெற்றது. ஒரு சுற்றில் 'டிரா' செய்தது. ஒரு சுற்றில் தோல்வியை தழுவியது.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2021) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.
ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வெல்ல சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 2 சுற்றில் 'டிரா' செய்தார். தங்கம் வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-
எனது ஆட்டத்தில் மிகுந்த முன்னேற்றத்தை காணமுடிந்தது. மேலும் அணியாக நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியான உணர்வை தருகிறது.
கடந்த காலங்களில் பல மோசமான தோல்விகளை தழுவி இருந்த போதிலும் இந்த முறை ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்ல முடிந்தது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கடைசி சுற்றில் தோற்றாலும் டை பிரேக்கில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். நிச்சயமாக போட்டியில் வெல்வதே விரும்பினேன். அதன்படி கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் நிம்மதி அடைந்தோம். கடந்த முறை தங்கம் வெல்லும் அணியாக நெருங்கி வந்து வாய்ப்பை இழந்தோம். இந்த முறை வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளித்தது.
உலக செஸ் சாம்பியன் போட்டி பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. செஸ் ஒலிம்பியாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மிட்விக்கெட் திசையில் பீல்டரை நிறுத்தாததை ரிஷப் பண்ட் கண்டார்.
- ஒரே இடத்தில் இருந்து இரண்டு பேரில் ஒருவரை அங்கே செல்ல வைக்குமாறு கூறினார்.
இந்தியா- வங்கதேச அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி 109 ரன்கள் விளாசினார்.
2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, வங்கதேச அணியின் பீல்டிங் செட்-அப் பார்த்தபோது மிட்விக்கெட் திசையில் பீல்டர் இல்லையே... அங்கே ஒரு பீல்டரை நிறுத்துங்கள் என தனக்கு எதிராகவே வங்கதேச அணிக்காக பீல்டிங் செட் செய்தார்.
இது போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பீல்டிங் மாற்றியமைத்தது ஏன்? என்பது தொடர்பாக ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ரிஷப் பண்ட் கூறியதாவது:-
நான் முதலில் அஜய் பாய் உடன் மைதானத்தில் வெளியே (விளையாட்டு இல்லாத நேரத்தில்) பேசிக்கொண்டிருந்த போது, கிரிக்கெட் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். எங்கே விளையாடினாலும் சரி, யாருக்கு எதிராக விளையாடினால் சரி என்றார். மிட் விக்கெட் திசையில் எந்த பீல்டரும் இல்லை. மற்றொரு இடத்தில் ஒரே இடத்தில் இரண்டு பீல்டரை பார்த்தேன். ஆகவே, ஒரு பீல்டரை மிட்விக்கெட் திசைக்கு மாற்ற அவர்களிடம் கூறினேன்.
இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட்-ன் இந்த செயல் பெரும்பாலான ரசிகர்கள் இதயங்களை ஈர்த்துள்ளது.
- சென்னை டெஸ்டில் சதம் அடித்து எம்.எஸ். டோனி சாதனையை சமன் செய்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் டோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கிய பிறகு சுமார் 700 நாட்கள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களம் இறங்கினார். இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் 6 சதங்கள் அடித்த எம்.எஸ். டோனியின் சாதனையை சமன் செய்தார். இதற்கிடையே எம்.எஸ். டோனி- ரிஷப் பண்ட் ஆகியோரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற ஒப்பீடு இணைய தளத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் 34 டெஸ்ட் போட்டியில் விளையாடிள்ளார். சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஆனால் உறுதியான இந்தியாவில் இதுவரை இல்லாத வகையிலான விக்கெட் கீப்பராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பார்.
விக்கெட் கீப்பராக டோனியின் தகுதியை குறைத்து விடாதீர்கள். இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தபோது அவர் அற்புதமாக பேட் செய்தார் மற்றும் ரன்களை எடுத்தார். அவர் இந்தியாவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தலைமை தாங்கினார். இந்தியா நம்பர் ஒன் அணியாக உள்ளது. எனவே நீங்கள் ஒருவரை பற்றி பேசும்போது எல்லாவற்றையும் பற்றி பார்க்க வேண்டும்.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
- ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 522 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அஷ்வின் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இதையடுத்து, அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் இதுவரை 522 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கர்ட்னி வால்ஷை (519 விக்கெட்) பின்னுக்கு தள்ளி அஷ்வின் 8-வது இடத்திற்கு முன்னேறினார்.
- செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- இந்த சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் என்றார்.
புதுடெல்லி:
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர்
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 45-வது பிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நமது செஸ் அணி வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க அணிகளுக்கு வாழ்த்துக்கள். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- வங்கதேசக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- டெஸ்டில் தோல்வி அடைந்த வங்கதேசம் புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.
துபாய்:
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த வங்கதேசம் 6-வது இடத்திற்கு சரிந்தது.
இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் இடத்திலும் உள்ளது. இலங்கை 4வது இடத்திலும், இங்கிலாந்து 5வது இடத்திலும் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- இலங்கை அணி 2வது இன்னிங்சில் 309 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து அணி வெற்றிபெற 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
காலே:
இலங்கை, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஒரூர்க் 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
35 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. கருணரத்னே 83 ரன்களும் சண்டிமால் 61 ரன்களும் அடித்தனர்.
நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 7 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இலங்கை அணி துல்லியமாகப் பந்து வீசியது. இதனால் நியூசிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். வில்லியம்சன், பிளெண்டல் தலா 30 ரன்னும், டாம் லாதம் 28 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், 4-ம் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 68 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. அதேபோல், இலங்கை வெற்றி பெற 2 விக்கெட்டுகள் தேவை என்பதால் பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் குர்பாஸ் 89 ரன்னில் அவுட்டானார்.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி, பெலுக்வாயோ, நபா பீட்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆரம்பம் முதல் நிதானமாக ஆடினர்.
டோனி சோர்சி 26 ரன்னும், பவுமா 22 ரன்னும், ஹென்ரிக் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய மார்கிரம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. மார்கிரம் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆனாலும், ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குர்பாசுக்கு அளிக்கப்பட்டது.






