என் மலர்
விளையாட்டு
- ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2-வது இடம் பிடித்தது.
- ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.
அனந்தபூர்:
துலீப் கோப்பை தொடரின் 3-வது மற்றும் கடைசி ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்றன. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி, கெய்வாட் தலைமையிலான இந்தியா சி உடன் மோதியது.
இதில் முதலில் ஆடிய ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சி அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட்டானது.
63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஏ அணி 286 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரியான் பராக் 73 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்னும் எடுத்தனர். இந்தியா சி சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சி அணி களமிறங்கியது. அந்த அணியின் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில் இந்தியா சி அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் எடுத்தனர்.
மற்றொரு போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதின முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.
இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.
இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 119 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார்.
இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணி 115 ரன்களில் சுருண்டது. இதனால் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி அணி வெற்றி பெற்றது.
மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2வது இடமும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி மூன்றாம் இடமும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.
- செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதல் முறை தங்கம் வென்று அசத்தல்.
- விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது!"
"சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது முதல் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2024 இல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு பயணம்! நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துகள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
- இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "ஹங்கேரியில் இருந்து நம்பமுடியாத செய்தி! 45வது ஃபைடு செஸ் ஒலிம்பியாட் 2024-இல் தங்கம் வென்று இந்திய அணி தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு."
"ஆர் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பெண்டலா ஹரிகிருஷ்ணா, மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகிய ஒட்டுமொத்த அணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான சாதனைக்காக இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது.
- இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றது.
45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் 10 ஆவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவைச் சந்தித்தது. இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இறுதியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 19 புள்ளிகள் பெற்ற இந்திய ஆண்கள் அணி தங்கத்தை நெருங்கி இருந்தது. இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு போட்டிகளில் இந்தியா அணி முன்னணி வகித்த நிலையில், ஆண்கள் அணி பத்து போட்டிகள் முடிவில் 19 புள்ளிகளை பெற்றது.
இதை தொடர்ந்து அதிக புள்ளிகளை பெற்ற இந்தியா செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
- முதலாவது டெஸ்ட் போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இது இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் நான்காம் நாளான இன்று இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் இரு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதோடு, 92 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு கட்டியுள்ளது. இந்திய அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை 1932 ஆம் ஆண்டு விளையாடியது. சிகே நாயுடு தலைமையிலான இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அன்று துவங்கி இன்று வரை இந்திய அணி பெற்ற வெற்றிகளை விட தோல்விகள் அதிகளவில் இருந்து வந்தன. எனினும், இன்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த நிலையை மாற்றியுள்ளது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 179 போட்டிகளில் வெற்றிலும், 178 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியல்:
ஆஸ்திரேலியா: வெற்றிகள் 414, தோல்விகள் 232
இங்கிலாந்து: வெற்றிகள் 397, தோல்விகள் 325
தென் ஆப்பிரிக்கா: வெற்றிகள் 179, தோல்விகள் 161
இந்தியா: வெற்றிகள் 179, தோல்விகள் 178
பாகிஸ்தான்: வெற்றிகள் 148, தோல்விகள் 144
- அஸ்வின் 2 ஆவது இன்னிங்சில் 96 விக்கெட்டுகள் வீழ்த்தி கும்ப்ளே சாதனையை முறியடித்தார்.
- அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியர்கள் பட்டியலில் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அஷ்வின் 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார்.
இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் 94 விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை 96 விக்கெட்டுகள் வீழ்த்தி அஷ்வின் முறியடித்துள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்குள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஷ்வின் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியல்:
67 - முத்தையா முரளிதரன்
37 - ரவிச்சந்திரன் அஸ்வின்
37 - ஷேன் வார்னே
36 - ரிச்சர்ட் ஹாட்லீ
35 - அனில் கும்ப்ளே
- முதல் இன்னிங்சில் அஸ்வின் சதமடித்து அசத்தினார்.
- 2-வது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.
பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.
இந்திய வீரர் அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 82 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 6 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
- மகள்கள் தினத்தை முன்னிட்டு சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய குடும்பங்களில் மகன்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் நிலையில், மகள்களை கொண்டாடும் விதமாக செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மகள்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தங்கள் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், நம் வாழ்க்கையை மகிழ்ச்சி மற்றும் அன்பினால் நிரப்பும் மகள்களை கொண்டாடும் மகள்கள் தினத்திற்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
- இலங்கை அணி தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- இலங்கையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இத்தொடரில் முன்னிலை வகித்துள்ளது.
இந்நிலையில், தொடர்ச்சியாக 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை படைத்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற 2 ஆவது அணி என்ற சாதனையை இதன்மூலம் ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக ஜூன் 2023 முதல் அக்டோபர் 2023 வரை இலங்கை அணி தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.
2003 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
- வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கில் சதமடித்தார்.
சென்னை:
இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் அஷ்வின் 113 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ரிஷப் பண்ட், சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடினர். இருவரும் சதமடித்து அசத்தினர். ரிஷப் பண்ட் 109 ரன் அடித்து அவுட்டானார்.
இந்தியா 64 ஓவரில் 4 விக்கெட்டுக்கு து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் 119 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது..
இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கில், 2-வது இன்னிங்சில் சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன பிறகு, 2-வது இன்னிங்சில் சதமடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
- இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் எடுத்தது.
- இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்கள் எடுத்துள்ளது.
அனந்தபூர்:
ஆந்திராவின் அனந்தபூரில் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.
தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.
இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. ரிக்கி புல் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார். இதுவரை இந்தியா டி அணி 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷஷ்வாத் ராவத் 124 ரன்னில் அவுட்டானார். ஆவேஷ் கான் அரை சதம் கடந்தார். ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சி சார்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்தியா சி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிஷேக் பரோல் அரை சதம் கடந்து 82 ரன் எடுத்தார். புல்கிட் நாரங் 35 ரன்னும், பாபா இந்திரஜித் 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில் இந்தியா சி அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், அக்யூப் கான் தலா 3 விக்கெட்டும், முலானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 6 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்தது. ரியான் பராக், ஷஷ்வாத் ராவத் அரை சதம் கடந்தனர். இதுவரை இந்தியா ஏ அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றது.
- 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த 10-வது சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 10-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவைச் சந்தித்தது.
இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இறுதியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 19 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தங்கத்தை நெருங்கியது.
இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 - 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றுள்ளது.
11 சுற்றுகள் கொண்ட 10 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.






