என் மலர்
விளையாட்டு
- 2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 2 ஆவது இன்னிங்சில இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.
பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.
3-வது நாள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் அடிக்க வேண்டும். அதே சமயம் இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
- டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- டோனி விக்கெட் கீப்பராக 6 சதம் அடித்துள்ளார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.
பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய 3-வது நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன் அரைசதம் அடித்தனர். உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் ரஷிப் பண்ட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவரின் 6-வது சதம் ஆகும். இதன்மூலம் டோனி சாதனையை சமன் செய்தார்.
டோனி விக்கெட் கீப்பராக 6 சதம் அடித்துள்ளார். அதை ரிஷப் பண்ட் தற்போது சதம் செய்துள்ளார். ரிஷப் பண்ட்-ஐ தொடர்ந்து சுபமன் கில் சதம் அடித்தார்.
இந்தியா 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் 119 ரன்னுடனும், கே.எல். ராகுல் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- 88 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 124 பந்தில் சதம் விளாசினார்.
- சர்வதேச போட்டியில் இது ரிஷப் பண்டின் 6-வது சதம் ஆகும்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்களும், வங்கதேசம் 149 ரன்களும் எடுத்து ஆல்அவுட் ஆகின.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இன்றைய 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 86 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். அவர் 55-வது ஓவரின் 4-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை தொட்டார். அவர் 124 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். 88 பந்தில் அரைசதம் அடித்த அவர், அடுத்த 50 ரன்னை 46 பந்தில் எட்டினார்.

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் சுமார் 700 நாட்களில் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்தார். தற்போது காயத்திற்குப் பிறகு களம் இறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரின் 6-வது சதம் ஆகும்.
- சுப்மன் கில் 79 பந்தில் அரைசதம் அடித்தார்.
- ரிஷப் பண்ட் 88 பந்தில் அரைசதம் விளாசினார்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது. 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றை 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 33 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் 79 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 88 பந்தில் அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த பின்னர் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். இந்த ரன்கள் வேகமாக வந்தன.
இருவரும் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். சுப்மன் கில் 137 பந்தில் 86 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 108 பந்தில் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இந்தியா 432 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
- முதல் 8 சுற்றுகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 9-வது சுற்றை டிரா செய்தது.
- 17 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றன.
ஓபன் பிரிவில் நேற்று நடந்த 9-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை எதிர் கொண்டது. இந்த போட்டி 2-2 என்ற புள்ளி கணக்கில் டிரா ஆனது. இதுவரை நடந்த 8 சுற்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. தற்போதுதான் முதல் முறையாக வெற்றி பெற முடியாமல் டிரா செய்துள்ளது.
இந்திய வீரர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் டிரா செய்தனர். 9-வது சுற்று முடிவில் இந்தியா 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
10-வது சுற்றில் அமெரிக்காவுடன் மோதுகிறது. அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், சீனா ஆகியவை தலா 15 புள்ளிகளுடன் உள்ளன.
பெண்கள் பிரிவில் இந்திய அணி 9-வது சுற்றில் அமெரிக்காவை சந்தித்தது. இந்த போட்டி 2-2 என்ற கணக்கில் என்ற கணக்கில் டிரா ஆனது. 9-வது சுற்று முடிவில் 15 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 10-வது சுற்றில் சீனாவுடன் மோதுகிறது. கஜகஸ்தான் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
- ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 33-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
- ஸ்டெபனோ பியோலி அர்-நஸர் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரரான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியில் உள்ள அல்-நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.
சுவுதி ப்ரோ லீக்கில் அல்-நஸர் நேற்று எத்திஃபாக் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை பதிவு செய்தார்.
அதன்பின் சலீம் அல்-நஜ்தி 56-வது நிமிடத்திலும், தலிஸ்கா 70-வது நிமிடத்திலும் கோல் அடிக்க அல்-நஸர் அணி 3-0 என வெற்றி பெற்றது.
அல்-நஸர் அணியின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டெபனோ பியோலி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் அல்-நஸர் அணியின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில அல்-நஸர் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அணியின் முயற்சிக்கு கிடைத்தது. இன்றிரவு (நேற்று) மிகப்பெரிய வெற்றி. ரசிகர்களுக்காக இது... என ரொனால்டா தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அல்-ஷார்ட்டா அணிக்கெதிரான போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ரொனால்டோ விளையாடவில்லை. அதில் அல்-நஸர் 1-1 என போட்டியை டிரா செய்தது.
- சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குமா? என்ற சந்தேகம்.
- மைதானம் முழுமையாக மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டதால் ஆட்டம் 9.30 மணிக்கு தொடங்கியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் மழை பெய்து வந்தது. இதனால் போட்டியில் சரியான (காலை 9.30 மணி) நேரத்திற்கு தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது.
அதேவேளையில் ஆடுகளம் மற்றும் மொத்த மைதானமும் மூடப்பட்டிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மழைச்சாரல் முற்றிலுமாக நின்றது. இதனால் போட்டி சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது.
லேசான மழை பெய்து கொண்டிருக்கும்போது ரசிகர்கள் அதிக திரண்டு வந்து டிக்கெட் வாங்கினர்.
நேற்று முன்தினம் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.
- விராட் கோலி 17 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
- ரீபிளேயில் பேட்டில் பந்து பட்டது தெளிவாக தெரிந்ததால் இந்திய அணி ஏமாற்றம்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் ஸ்கோர் 28 ரன்னாக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். ஸ்கோர் 67 ரன்னாக இருக்கும்போது மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய 20 ஓவரின் 2-வது பந்தை விராட் கோலி காலில் வாங்கினார். மெஹிதி ஹசன் அப்பீல் கேட்க நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.
விராட் கோலி எதிர்முனையில் நின்ற சுப்மன் கில்லிடம் இது தொடர்பாக கேட்டார். அப்போது சுப்மன் கில் சரியான எல்.பி.டபிள்யூ-வாகத்தான் இருக்கும் என்பதுபோல் தெரிவிக்க விராட் கோலி டி.ஆர்.எஸ். கேட்காமலம் வெளியேறினார்.
ஆனால் ரீபிளே-யில் பந்து பேட்டில் பட்டபிறகுதான் பேடை தாக்கியது தெரியவந்தது. இதனால் டி.ஆர்.எஸ். கேட்காமல் விராட் கோலி பரிதாபமாக ஆட்டமிழந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த ரோகித் சர்மா, என்னப்பா இது? டி.ஆர்.எஸ். கேட்டிருக்கலமே... என்ற வகையில் ரியாக்ஷன் கொடுத்தார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் லேசான சந்தேகம் இருந்தால் கூட கவலைப்படாமல் டி.ஆர்.எஸ். கேட்பார்கள். ஆனால் இந்தியாவிடம் 3 டி.ஆர்.எஸ். இருக்கும் வேலையில் ஏன் கேட்காமல் விட்டாரோ தெரியவில்லை.
- இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 306 ரன்கள் எடுத்தது.
- இந்தியா பி அணி 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.
அனந்தபூர்:
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன் எடுத்திருந்தது. சாம்சன் 89 ரன்னும், சரண்ஷ் ஜெயின் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய டி அணி மேற்கொண்டு 43 ரன்களுக்குள் எஞ்சிய விக்கெட்டை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 101 பந்தில் 106 ரன் குவித்தார்.
இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பி அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் அடித்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் சதம் அடித்தார்.
இந்தியா டி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ஷஷ்வத் ராவத்122 ரன்னும், ஆவேஷ் கான் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷஷ்வாத் 124 ரன்னில் அவுட்டானார். ஆவேஷ் கான் அரை சதம் கடந்தார்.
இந்தியா சி சார்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்தியா சி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிஷேக் பரோல் அரை சதம் கடந்து 82 ரன் எடுத்தார். புல்கிட் நாரங் 35 ரன்னும், பாபா இந்திரஜித் 34 ரன்னும் எடுத்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் இந்தியா சி அணி 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.
- வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா 4 விக்கெட், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை:
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவரில் 376 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அஷ்வின் 113 ரன்னும், ஜடேஜா 86 ரன்னும் குவித்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 32 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 81 ரன்கள் அடித்துள்ளது. கில் 33 ரன்னும், பண்ட் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா 308 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
2-வது இன்னிங்சில் களமிறங்கிய விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12,000 ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் 243 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி 243 இன்னிங்ஸ், சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ், குமார் சங்ககரா 269 இன்னிங்ஸ், காலிஸ் 271 இன்னிங்ஸ், ரிக்கி பாண்டிங் 275 இன்னிங்ஸ்.
- 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த 9-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி டிரா செய்தது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 9-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, உஸ்பெகிஸ்தானைச் சந்தித்தது.
இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் உஸ்பெகிஸ்தான் வீரர்களிடம் டிரா செய்தனர்.
இறுதியில் இந்தியா 2-2 என்ற புள்ளிக்கணக்கில் டிரா செய்தது. இதன்மூலம் 17 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி நிச்சயம் தங்கம் வெல்லும்.
இந்திய மகளிர் அணி அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் டிரா செய்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது.
11 சுற்றுகள் கொண்ட 9 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயம் தங்கம் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் குர்பாஸ் சதமடித்து அசத்தினார்.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 105 ரன்னும், ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தனர்.
பவுமா 38 ரன்னும், டோனி சோர்சி 31 ரன்னும், மார்கிரம் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.






