என் மலர்
விளையாட்டு
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் சுப்பிரமணியம் பத்ரிநாத் கலந்து கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மண்ணைக் கவ்வி உள்ளது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது
இந்த தொடரில் சுப்மன் கில் 2, 3, 5 ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடினார். மொத்தமே 93 ரன்கள் தான் எடுத்தார். எனவே தோற்றுப்போன கோபத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கில் பக்கம் திருப்பியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் பத்ரிநாத், ஒரு பேட்டராக சுப்மன் கில் ரன்களை அடிக்கவில்லை.
அது முடியாவிட்டாலும், களத்தில் அதிக நேரம் விளையாடி பந்தை பழையதாக்குவதோ, பவுலர்களை சோர்வடையவோ செய்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.
ஒருவேளை கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரராக இருந்திருந்தால், எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார்.
- எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக்கொண்டார் என்று கருத இடமிருக்கிறது
- ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிமையாக இருக்காது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. மோசமான பார்ம் காரணமாக இதன் கடைசி போட்டியில் ரோகித் தானாக விலகிய நிலையில், பும்ரா கேப்டன் ஆனார்.
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய அதற்கடுத்த 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் ஆனது. ரோகித் சர்மா சுமாராக விளையாடியதுதான் அதற்கு முக்கிய காரணமாக என்று கூறப்படுகிறது. எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக்கொண்டார் என்று கருத இடமிருக்கிறது
மேலும் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்ற யூகங்களும் எழுந்தன. ஆனால், கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்றும் இப்போதைக்கு ஓய்வை பெறப்போவதில்லை என்றும் ரோகித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சைமன் கேட்டிச் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது, ரோகித் சர்மா இன்னும் ரன்கள் எடுக்கும் பசியுடன்தான் விளையாடப் போகிறாரா? என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிமையாக இருக்காது.

இங்கிலாந்து அணியிலும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துள்ளனர். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ்ஆகியோர் சிறப்பாக பந்து வீசுபவர்கள்.
எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் அது நிச்சயம் அவரது கெரியரிலேயே கடினமான தொடராக அது அமையலாம்.
என்னைக் கேட்டால், ரோகித் சர்மா பேசுவதை வைத்து பார்க்கும்போது அவர் ஓய்வுபெற்ற பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் என்று அட்வைஸ் செய்துள்ளார்
- நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஏ.எஸ்.பி. கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் ஜப்பானிய வீராங்கனை ஒசாகா காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகினார்.
ஆக்லாந்து:
நியூலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, டென்மார்க்கின் கிளாரா டவ்சன் உடன் மோதினார். இதில் ஒசாகா 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டின் ஆரம்பத்தில் ஒசாகா காயம் காரணமாக திடீரென விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கிளாரா டவ்சன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஜிம்பாப்வே அணி வெற்றி பெற 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தினார்.
புலவாயோ:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இக்கட்டான சூழலில் சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா சதமடித்து அணியை மீட்டார். சதத்தை எட்டிய ரஹ்மத் ஷா 139 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்து 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட்டும், ஜிய உர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதி நாளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 2 விக்கெட்டை வீழ்த்த வேண்டும், ஜிம்பாப்வே வெற்றி பெற 73 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
- முதலில் பேட் செய்த தமிழகம் 50 ஓவரில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தமிழகம் சார்பில் இந்திரஜித் 75 ரன்னும், விஜய் சங்கர் 71 ரன்னும் எடுத்தனர்.
விஜயநகரம்:
விஜய் ஹசாரே டிராபி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சத்தீஸ்கர் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 50 ஓவரில் 301 ரன்கள் குவித்தது. இந்திரஜித் 75 ரன்னும், விஜய் சங்கர் 71 ரன்னும் எடுத்தனர்.
சத்தீஸ்கர் சார்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஸ்கர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பொறுமையுடன் ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது அசுதோஷ் சிங் 71 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சன்சஞ்சீத் தேசாய் 2 ரன்னும், அமந்தீப் கரே 4 ரன்னும், பிரதீக் யாதவ் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர். நிதானமாக ஆடிய பூபன் லால்வானி அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில், சத்தீஸ்கர் அணி 46 ஓவரில் 228 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தமிழகம் 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழகம் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் தமிழகம் 6 லீக் ஆட்டங்களில் (4 வெற்றி, 1 தோல்வி, 1 முடிவில்லை) 18 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
- இதில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரிஸ்பேன்:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா, அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்லி ஒபெல்கா உடன் மோதினார்.
இதில் ஜிரி லெஹெகா 4-1 என முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரெய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனால் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- சொந்த மண்ணில் கடந்த தொடர்களில் கண்ட தோல்விக்கு கம்மின்ஸ் தலைமை பதிலடி கொடுத்துள்ளது.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் மீண்டு வந்து தொடரை 3-1 என்ற கணக்கில் (ஒரு போட்டி டிரா) கைப்பற்றி அசத்தியது. மேலும், சொந்த மண்ணில் கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் கண்ட தோல்விக்கு தற்போது கம்மின்ஸ் தலைமையில் பதிலடி கொடுத்துள்ளது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.
நான் மைதானத்தில்தான் இருந்தேன். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் கோப்பை வழங்க விரும்பமாட்டேன் என்றெல்லாம் கிடையாது. அவர்கள் நன்றாக விளையாடியதால் வெற்றி பெற்றார்கள். இந்தியராக இருப்பதால் ஆலன் பார்டருடன் இணைந்து கோப்பையை வழங்கியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்றார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஒருவர் கூறுகையில், தொடரை இந்தியா வென்றால் கவாஸ்கரும் ஆஸ்திரேலியா வென்றால் ஆலன் பார்டரும் கோப்பையை வழங்கவேண்டும் என திட்டமிட்டிருந்தோம். இதன்படி கம்மின்சிடம் கோப்பையை வழங்கினார் பார்டர். இந்த விபரம் கவாஸ்கருக்கு தெரியாததால் கோபம் அடைந்திருக்கலாம் என தெரிவித்தார்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்தின் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெல்லிங்டன்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அவிஷ்கா பெர்னண்டோ 56 ரன் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - வில் யங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் ரச்சின் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய சாப்மேன் நிதானமாக விளையாடினார். வில் யங் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 26.2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில் யங் 90 ரன்னும், சாப்மேன் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெட்ரோவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா முதல் செட்டை 4-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் பெறுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- இதுவும் ரோகித் தரப்பு நடிகைக்கு காசு கொடுத்து பதிவிட வைத்த PR போஸ்ட் தான் என நெட்டிசென்கள் கலாய்க்கத் தொடங்கினர்.
- இன்னும் சில வடஇந்திய நடிகர் நடிகைகள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்துள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா தற்காலிகமாக விலகி உள்ளார். அவரது முடிவுக்கு ஆதரவாக இணையத்தில் நிறைய போஸ்ட்கள் வளம் வருகின்றன.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ரோகித் சர்மா தரப்பு காசு கொடுத்து வெளியிடும் PR [PULBIC RELATIONS] போஸ்ட்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ரோகித் சர்மாவின் முடிவை ஆதரிக்கும் விதமான வாட்சப் பார்வேர்ட் போஸ்ட் ஒன்றை பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
எனவே இதுவும் ரோகித் தரப்பு நடிகைக்கு காசு கொடுத்து பதிவிட வைத்த PR போஸ்ட் தான் என நெட்டிசென்கள் கலாய்க்கத் தொடங்கினர்.

மேலும் வித்யா பாலன் எக்ஸ் பக்கத்திலும் அதுபோன்ற போஸ்ட் காணப்பட்டது. ஆனால் வித்யா பாலனின் எக்ஸ் ஐடி ரோகித் சர்மாவை பின்தொடர கூட இல்லை.
இன்னும் சில வடஇந்திய நடிகர் நடிகைகள் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக போஸ்ட் செய்துள்ளனர்.ஆனால் அவர்களும் கூட ரோகித் சர்மாவை பின்தொடரவில்லை. எனவே PR போஸ்களை முன்வைத்து ரோகித் சர்மாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வித்யா பாலனை ரோகித் சர்மா PR குழு தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் மீதான அபிமானத்தால்தான் வித்யா போஸ்ட் போட்டார் என்றும் அவரது தரப்பு தற்போது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.
- தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 190 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என்று தகவல் பரவியது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இப்போதைக்கு ஓய்வு பெறும் மனநிலையில் இல்லை என கூறப்படுகிறது.
2027 ODI உலகக்கோப்பை தொடர் வரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறப் போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடினார்.
தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 190 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
ஆனால் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என்று தகவல் பரவியது.
ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். மேலும் சமீபத்தில் நட்சத்திர வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்தது.
- 26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார்.
நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் [34 வயது] தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார்.
நேற்று [சனிக்கிழமை] நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. Holmenkollen Chapel தேவாலயத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகமான NRK இன் செய்திகள் தெரிவிக்கின்றன.

chess.com இன் படி, திருமணத்தில் நார்வே நாட்டு செஸ் வீரர்கள் ஜோஹன்னஸ் க்விஸ்லா மற்றும் அஸ்கில்ட் பிரைன், ஜிஎம் பீட்டர் ஹெய்ன் நீல்சன் மற்றும் ஜிஎம் ஜான் லுட்விக் ஹேமர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது நெட்பிளிக்ஸ் படக்குழுவினரும் உடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்தது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் சேலஞ்சர் நிகழ்வின் போது இவர்கள் காதலை வெளிப்படுத்தினர். அதன்பின் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் ஜோடியாக காணப்பட்டனர். கார்ல்சனின் செஸ் போட்டிகளின் போது அவருக்கு மலோன் ஆதரவளிப்பதைக் காணலாம்.

26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார். ஊடக அறிக்கைகளின்படி, அவர் ஒஸ்லோவில் வளர்ந்தார், அமெரிக்காவில் படித்தார், மேலும் சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்தார், அங்கு அவர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.
மலோனுடனான திருமணம் கார்ல்சனின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் கார்ல்சன், ஐந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்கள் உட்பட ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.







