என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜிரி லெஹெகா
    X

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜிரி லெஹெகா

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
    • இதில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.

    பிரிஸ்பேன்:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா, அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்லி ஒபெல்கா உடன் மோதினார்.

    இதில் ஜிரி லெஹெகா 4-1 என முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரெய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனால் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×