என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
    • இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.

    சிட்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்து வெளியேற்றப்பட்டது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 8 தோல்விகளை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் டிரா ஆனது. இதன் காரணமாக இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.

    இதற்கு முன்பு நடைபெற்ற 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. 2019-21-ல் நியூசிலாந்து அணியிடமும், 2021-23-ல் ஆஸ்திரேலியா அணியிடமும் தோற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்தது.

    சிட்னி டெஸ்ட் வெற்றி மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    • 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
    • பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.

    கடந்த நவம்பர் மாதம் துவங்கிய நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதன் பிறகு நடத்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கிய நான்காவது நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி துவங்கிய கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் அந்த அணி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது. இதோடு, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே தகுதி பெற்று இருந்தது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    • ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    • முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினர்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்பு காட்டியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவெளிக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களை எதிர்கொண்டு விளையாடியது. இந்தியா சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினர்.

    ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 6 ரன்களுக்கும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

    உணவு இடைவெளிக்கு பிறகு முகமது சிராஜ் வீசிய பந்தில் உஸ்மான் குவாஜா ஆட்டமிழந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் வெஸ்டர் இந்திய அணி பந்துவீச்சாளர்களிடம் சிக்காமல் ரன் குவித்தனர்.

    இதனால் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. 

    • இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
    • பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறைந்த இலக்கு மற்றும் இரண்டு நாட்கள் முழுமையாக இருப்பதால் அந்த அணி எடுத்ததவும் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை.

    மறுப்பக்கம் இந்திய அணி பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்பு காட்டியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவெளிக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களை எதிர்கொண்டு விளையாடியது. இந்தியா சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினர்.

    ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 6 ரன்களுக்கும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்றைய ஆட்ட நேரம் முடிய இன்னும் 65 ஓவர்களுக்கும் மேல் இருப்பதால், உணவு இடைவெளிக்கு பிறகும் இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வெற்றி பெற முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 91 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் போலண்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    சிட்னி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் சுருண்டது. வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3 விக்கெட்டும், பும்ரா, நிதிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ் மற்றும் பும்ரா விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில் இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 6 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.

    சிட்னி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் சுருண்டது. வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3 விக்கெட்டும், பும்ரா, நிதிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் தனது வழியில் அதிரடியாக விளையாடினார். ஸ்டார்க் ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்த அவர் 61 ரன்களில் (33 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், அதிரடியாக விளையாடி அரை சதமடித்த ரிஷப் பண்டுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக் ரேட் 50 அல்லது அதற்கும் குறைவாக பேட் செய்த ஆடுகளத்தில், ரிஷப் பண்ட் 184 ஸ்டிரைக் ரேட் உடன் ஆடியது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று. அவர் முதல் பந்தில் இருந்து ஆஸ்திரேலியாவைத் திணறடித்தார். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது எப்போதும் சிறப்பாக இருக்கிறது. என்ன ஒரு அபாரமான இன்னிங்ஸ் என பதிவிட்டுள்ளார் .

    • நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஏ.எஸ்.பி. கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பானிய வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஆக்லாந்து:

    நியூலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    நேற்று நடந்த அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அலிசியா பர்க்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஒசாகா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் டென்மார்க்கின் கிளாரா டவ்சன், அமெரிக்க வீராங்கனை ராபின் மோன்ட்கோமேரி உடன் மோதினார்.

    இதில் கிளாரா டவ்சன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் ஓபெல்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா, பிரான்சின் பெரிகார்ட் உடன் மோதினார்.

    இதில் ஓபெல்கா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஓபெல்கா, செக் குடியரசின் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

    • சபலென்கா ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-2 என எளிதாக வீழ்த்தினார்.
    • ரஷியாவின் குடெர்மெடோவா உக்ரைனின் கலினினாவை 6-4, 6-3 என வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் குடெர்மெடோவா- உக்ரைனின் கலினினா ஆகியோர் மோதினர். இதில் குடெர்மெடோவா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    2-வது அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா- 8-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-2 என எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா- குடெர்மோடோவா பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் லெகேக்கா, ஓபெல்கா ஆகியோர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    • ரியான் ரிக்கெல்டன் 259 ரன்கள் குவித்தார்.
    • பவுமா மற்றும் கைல் வெர்ரைன் சதம் அடித்தனர்.

    தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. ரியான் ரிக்கெல்டன், பவுமா ஆகியோரின் சதத்தால் தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. ரிக்கெல்டன் 176 ரன்களுடனும், பெடிங்காம் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெடிங்காம் 5 ரன்னில் வெளியேறிய நிலையில் அடுத்து விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் களம் இறங்கினார். இவர் ரிக்கெல்டனுடன் சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிக்கெல்டன் இரட்டை சதம் விளாசி 259 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 100 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சன் 54 பந்தில் 62 ரன்கள் விளாசினார். கேஷப் மகாராஜ் 35 பந்தில் 40 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 141.3 ஓவர்களில் 615 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா தலா 3 விக்கெட்டும் மிர் ஹம்சா, குர்ராம் ஷேசாத தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் கோவா 2-1 என முன்னிலை பெற்றது.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைக்க 4-2 என வெற்றி பெற்றது.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்றைய முதலாவது ஆட்டத்தில் ஒடிசா- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோவா அணியின் பிரிசன் பெரனாண்டஸ் கோல் அடித்தார். அதற்கு பதிலாக ஒடிசா பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 29-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை அஹமது ஜஹோயுஹ் அடித்தார்.

    பின்னர் முதல் பாதி நேரம் முடிவடையும் நேரத்தில் (கூடுதல் நேரம் 45+2) கோவா அணியின் உதான்டா சிங் குமாம் கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் கோவா 2-1 என முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் பிரிசன் பெர்னாண்டோஸ் மீண்டும் கோல் அடித்தார். அதன்பின் கோவா அணிக்கு ஓன் கோல் (அமேய் ரணாவாடே) மூலம் 56 நிமிடத்தில் கோல் கிடைக்க 4-1 என வலுவான முன்னிலைப் பெற்றது.

    ஆட்டம் முடிவடைவதற்கு முன்னதாக 88-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜெர்ரி மாவிஹ்மிங்தங்கா கோல் அடித்தார். அதன்பின் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கோவா 4-2 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் கோவா 13 ஆட்டங்கள் முடிவில் 25 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஒடிசா 14 போட்டிகள் முடிவில் 20 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    • முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 157 ரன்னில் சுருண்டது.
    • ஜிம்பாப்வே 243 ரன்கள் சேர்த்தது.

    ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டில் மழை பெய்ததால் நீண்ட நேரத்திற்குப் பின் போட்டி தொடங்கியது.

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 157 ரன்னில் சுருண்டது. பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்கள் சேர்த்தது.

    இதனால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 86 ரன்கள் பின் தங்கியிருந்தது. அதனுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருந்தது. ரஹ்மத் ஷா 18 ரன்களுடனும், ஷியா-உர்-ரஹ்மான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஷியா-உர்-ரஹ்மான் 6 ரன்னிலும், அடத்து வந்த அஃப்ர் ஜஜாய் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

    என்றாலும் மறுமுனையில் ரஹ்மத் ஷா நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக நின்ற ஷாஹிதுல்லா 22 ரன்கள் அடித்தார்.

    7-வது விக்கெட்டுக்க ரஹ்மத் ஷா உடன் இஸ்மாத் அலாம் ஜோடி சேர்ந்தார். ரஹ்மத் ஷா 99 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 209 பந்தில் சதம் விளாசினார்.

    இதனால் ஆப்கானிஸ்தான் 200 ரன்களை தாண்டியது. 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஹ்மத் ஷா 126 ரன்களுடனும், இஸ்மாத் அலாம் 39 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

    ×