என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மார்கிரம் 136 ரன்கள் விளாசினார்.
    • பவுமா 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8-வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். ஸ்டார்க் தாக்குப்பிடிதது விளையாடியதால் 2ஆவது நாளில் ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆகவில்லை.

    நேற்றைய 3ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார். 3வது விக்கெட்டுக்கு மார்கிரம்- பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.

    மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 102 ரன்னுடனும், பவுமா 65 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது, மேலும் ஒரு ரன் எடுத்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் மார்கிரம் நங்கூரமாக நின்ற விளையாடினார். ஸ்டப்ஸ் 8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த பெடிங்காம் மார்கிராமுக்கு சப்போர்ட்டாக விளையாடினார்.

    அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்றபோது, மார்கிராம் 136 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டுக் பெடிங்காம் உடன் வெர்ரைன் ஜோடி சேர்ந்தார்.

    இறுதியாக 83.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • கோவை அணியின் தொடக்க வீரர் ஜிதேந்திர குமார் 20 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 10ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய லைகா கோவை கிங்ஸ் 19.4 ஓவரில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கோவை அணியின் தொடக்க வீரர் ஜிதேந்திர குமார் 20 பந்தில் 42 ரன்கள் விளாசினார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார். பிரேம் குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது.
    • இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.

    இதன்படி, போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.

    ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா ரூ.34 கோடியை பரிசுத் தொகையாக அள்ளுவார்கள். முந்–தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11.1 சதவீதம் கூடுதலாகும். 2-வது இடத்தைப் பிடிப்போருக்கு ரூ.17¾ கோடி கிடைக்கும்.

    இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும்.

    ஒற்றையர் முதலாவது சுற்றில் தோற்கும் வீரர், வீராங்கனை கூட ரூ.76 லட்சம் பரிசுடன் தான் வெளியேறுவார்கள்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சுருச்சி தங்கப் பதக்கம் வென்றார்.

    முனீச்:

    3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.

    தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இந்நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். தொடர்ந்து 3-வது முறையாக உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றுள்ளார் சுருச்சி.

    இதன்மூலம் ஒட்டுமொத்தமாக நடப்பு தொடரில் இந்திய அணி ஒரு தங்கம், 2 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்றுள்ளது.

    • அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.
    • இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணி வெற்றி பெற்றது.

    ஆக்லாந்து:

    அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.

    இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய வாஷிங்டன் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சான் பிரான்சிஸ்கோ அணி 123 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பேட்டிங்கில் அசத்திய சான் பிரான்சிஸ்கோ அணியின் நியூசிலாந்து வீரர் பின் ஆலன் 51 பந்தில், 19 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 151 ரன் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

    இந்நிலையில், டி 20 அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் பின் ஆலன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் ஆகியோர் தலா 18 சிக்சர் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

    • ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார்.

    3வது விக்கெட்டுக்கு மார்கிரம்-பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.

    மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 102 ரன்னும், பவுமா 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 69 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றி 8 விக்கெட் தேவை என்பதால் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது.

    சேலம்:

    டி என் பி எல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிரடியாக ஆடிய துஷார் ரஹேஜா 16 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 25 ரன்கள் எடுத்தனர்.

    சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. நிதிஷ் ராஜகோபால் அரை சதம் கடந்தார். அவர் 44 பந்தில் 69 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஆர்.கவின் 34 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் பூபதி குமார் 19 ரன்னும், ஹரிஷ் குமார் 23 ரன்னும் எடுத்து பொறுப்புடன் ஆடினர்.

    இறுதியில், சேலம் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. சேலம் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் எலினா ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • துஷார் ராஹேஜா 28 பந்தில் 74 ரன்கள் விளாசினார்.
    • முதல் விக்கெட்டுக்கு திருப்பூர் 6.5 ஓவரில் 73 ரன்கள் குவித்தது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 9ஆவது ஆட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேலம் அணிபந்து வீச்சை தெர்வு செய்தது.

    அதன்படி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் அமித் சாத்விக், துஷார் ராஹேஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    6.5 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருக்கும்போது தொடக்க ஜோடி பிரிந்தது. அமித் சாத்விக் 28 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் துஷார் ராஹேஜா 16 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    ராஹேஜா ஆட்டமிழக்கும்போது திருப்பூர் அணி 11.3 ஓவரில் 117 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் சேலம் அணி சிறப்பாக பந்து வீசி ரன் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்தியது. இதனால் ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டும் என்ற நிலையில் இருந்து 175 ரன்களை தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது.

    டேரில் பெராரியோ (10), பிரதோஷ் ரஞ்சன் பால் (25), முகமது அலி (2), உதிரசாமி சசிதேவ் (18), சாய் கிஷோர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:-

    அமித் சாத்விக், துஷார் ராஹேஜா, உதிரசாமி சசிதேவ், டேரில் பெராரியோ, சாய் கிஷோர், முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால், ஏ. இசக்கி முத்து, எம். மதிவண்ணன், ஆர். சிலம்பரசன், டி. நடராஜன்.

    சேலம் ஸ்பார்டன்ஸ்:

    எஸ். அபிஷேக், ஹரி நிஷாந்த், ஆர். கவின், பூபதி குமார், நிதிஷ் ராஜகோபால், சன்னி சந்து, எஸ். ஹரிஸ் குமார், எம். முகமது, எம். பொய்யாமொழி, ரஹில் ஷா, எம்.இ. யாஷ் அருண் மொழி.

    • சேலம் அணி 3-வது வெற்றியையும், திருப்பூர் அணி 2-வது வெற்றியையும் குறிவைத்து உள்ளன.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    8 ஆட்டங்கள் முடிவில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன.

    திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு சேலத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. வருகிற 19-ந் தேதி வரை அங்கு 9 ஆட்டங்கள் நடக்கிறது. வாடிப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேலம் அணி 3-வது வெற்றியையும், திருப்பூர் அணி 2-வது வெற்றியையும் குறிவைத்து உள்ளன.

    டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. திருப்பூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும். நெல்லையை 41 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஆஷிக், விஜய் சங்கர், ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், ஸ்வப்னில் சிங், பந்துவீச்சாளர் எம். சிலம்பரசன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி தான் மோதியுள்ள 2 ஆட்டங்களிலும் (திண்டுக்கல், மதுரை அணிகளுக்கு எதிராக) தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. கோவை அணியில் பி.சச்சின், லோகேஷ்வர், ஆண்ட்ரே சித்தார்த், ரோ கித், எம். சித்தார்த், ஜதவேத் சுப்பிரமணியன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 2 ஆட்டத்தில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளன. அந்த அணிகள் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    • டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
    • இந்திய வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகிறார்கள்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்திய ஏ அணியும் இங்கிலாந்து சென்றுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையில் வீரர்களை பகிர்ந்து கொண்டு பயிற்சி போட்டி நடக்கிறது. இந்த போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அகமதாபாத் விமான விபத்தில் உயிரழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினார்.

    அதேபோல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 3ஆவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரி உயிரிழந்தனர். விமானம் மோதிய மருத்துவ விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் உயிரிழந்தனர்.

    ×