என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது தென்ஆப்பிரிக்கா..!
    X

    ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது தென்ஆப்பிரிக்கா..!

    • மார்கிரம் 136 ரன்கள் விளாசினார்.
    • பவுமா 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8-வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். ஸ்டார்க் தாக்குப்பிடிதது விளையாடியதால் 2ஆவது நாளில் ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆகவில்லை.

    நேற்றைய 3ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார். 3வது விக்கெட்டுக்கு மார்கிரம்- பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.

    மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 102 ரன்னுடனும், பவுமா 65 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது, மேலும் ஒரு ரன் எடுத்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் மார்கிரம் நங்கூரமாக நின்ற விளையாடினார். ஸ்டப்ஸ் 8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த பெடிங்காம் மார்கிராமுக்கு சப்போர்ட்டாக விளையாடினார்.

    அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்றபோது, மார்கிராம் 136 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டுக் பெடிங்காம் உடன் வெர்ரைன் ஜோடி சேர்ந்தார்.

    இறுதியாக 83.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    Next Story
    ×