என் மலர்
விளையாட்டு
- முதல் டெஸ்டில் பும்ரா 43.4 ஓவர்கள் வீசியுள்ளார்.
- பணிச்சுமை காரணமாக 2ஆவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 24.4 ஓவரில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 19 ஓவர்கள் வீசினார். 57 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
இங்கிலாந்துக்கு தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, 3 போட்டிகளில்தான் பும்ரா விளையாடிவார் என தெரிவிக்கப்பட்டது. முதல் டெஸ்டில் 43.4 ஓவர்கள் வீசிய பும்ரா, 2ஆம் போட்டிக்கான நேற்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்கும் 2ஆவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் பிரசித் கிருஷ்ணாவும் பயிற்சி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இவர் முதல் இன்னிங்சில் 20 ஓவர்கள் வீசி 128 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 15 ஓவர்கள் வீசி 92 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 5 விக்கெட் வீழ்த்தினாலும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் 2ஆவது டெஸ்டில் ஓரங்கட்டப்படலாம் எனத் தெரிகிறது.
பும்ராவுடன் இவரும் 2ஆவது டெஸ்ட்டில் இடம்பெறவில்லை என்றால் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்திய பேட்டர்கள் 5 சதங்கள் அடித்த நிலையிலும், 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும். முதல் டெஸ்டில் சிராஜ் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. பும்ரா இல்லாத நிலையில் பந்து வீச்சை வழிநடத்தும் சீனியர் வீரராக உள்ளார். இவர் நீக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
2ஆவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜாஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
- மதுரை பாந்தர்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மழை பெய்த காரணத்தினால் அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்தது. இதனால் ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக தொடங்கப்பட்டது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மதுரை 6 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது.
- இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்று நீர்ஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார்.
- இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஈட்டி எறிதலில் யார் ஆதிக்கம் செலுத்துவார் எனக் கேட்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
கிரிக்கெட் வீரர்களில் யார் ஈட்டி எறிதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பும்ரா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. முழு உடற்தகுதியின் இருந்தால் பும்ராவால் ஈட்டி எறிதல் போட்டியில் சாதிக்க முடியும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
- முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 180 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்.
- நடுவரின் தவறான முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல்அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஆதங்கம்.
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 72 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் சேஸ் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.
சேஸ் 44 ரன்கள் எடுத்திருக்கும்போது, கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஹோப் வெப்ஸ்டர் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் சுருண்டது.
இந்த இரண்டு விக்கெட்டும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்பிடபிள்யூக்கு சேஸ் ரிவ்யூ கேட்டார். அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தில் பந்து லேசாக உரசியதற்கான விசிபில் ஸ்பைக் ஏற்படும். இருந்தபோதிலும் 3ஆவது நடுவர் விக்கெட்டு கொடுத்துவிடுவார்.
சேஸ் கேட்சை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடிக்கும்போது, பந்து தரையில் படுவது நன்றாக தெரியும். அப்படி இருந்தும் 3ஆவது நடுவர் விக்கெட் கொடுத்து விடுவார்கள்.
இந்த நிலையில்தான் மைதானத்தில் வீரர்கள் தவறு செய்தால், விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் மைதானம் சமமான நிலையில் இருக்க நடுவர்கள் தவறு செய்தாலும், அவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
- டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.
இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் உசைன் ஷாண்டோ விலகினார்.
இது குறித்து பேசிய நஜ்முல் உசைன் ஷாண்டோ, "டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது என்னுடைய தனிப்பட்ட முடிவு. 3 ஃபார்மட்களுக்கு 3 கேப்டன் என்ற நடைமுறை சரியென எனக்குத் தோன்றவில்லை" என்று தெரிவித்தார்.
தற்போது வங்கதேச னையின் ஒருநாள் கேப்டனாக மெஹ்தி ஹசன் மிராஸ் மற்றும் டி20 கேப்டனாக லிட்டன் தாஸ் தற்போது செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசம் அணிமுதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
- முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 458 ரன்கள் குவித்தது.
இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 4 ஆம் நாளில் விளையாடிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.
- கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை ரகானே பதிவிட்டு வருகிறார்.
- குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதில் கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் யூடியூப் சேனல் தொடங்கி கிரிக்கெட் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்தார்.
- ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
அவ்வகையில் நேற்று U19 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 24 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி 19 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 301 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 141 ரன்களுக்கு சுருண்டது.
பார்படாஸ்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி, இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவில் ஹெட் 59 ரன்னும், கவாஜா 47 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 48 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி 65 ரன்னும், வெப்ஸ்டர் 63 ரன்னும், டிராவிஸ் ஹெட் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.
ஆஸ்திரேலியாவின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஷமார் ஜோசப் 44 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 38 ரன்னும் எடுத்தனர். 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி
56 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதுகிறார்.
- ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பார்படாஸ்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவில் ஹெட் 59 ரன்னும், கவாஜா 47 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 48 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
10 ரன் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 92 ரன் எடுத்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் இன்று தொடங்கியது. டிராவிஸ் ஹெட், வெப்ஸ்டர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். அடுத்து இறங்கிய அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
அலெக்ஸ் கேரி 65 ரன்னும், வெப்ஸ்டர் 63 ரன்னும், டிராவிஸ் ஹெட் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரான்சின் தியோ அரிபேஜ்-அர்ஜெண்டினாவின் கிடோ ஆண்ட்ரசி ஜோடியைச் சந்தித்தது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாம்ப்ரி ஜோடி 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.






