என் மலர்
விளையாட்டு
- 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது.
- சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தாஷ்கென்ட்:
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள குகேஷை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். இதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் டாப் 5 இடத்திற்கு இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
- மழையால் பாதிக்கப்படும் சர்வதேச டி20 போட்டிகளுக்கான பவர் பிளே விதிமுறையை ஐசிசி மாற்றி அறிவித்துள்ளது.
- ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்தது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை-வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.
டெஸ்ட் போட்டிகளிலும் 60 நொடிக்குள் அடுத்த ஓவரை வீசத் துவங்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை ஐசிசி அறிவித்தது. ஒரு இன்னிங்சில் 3-வது முறையாக (இரண்டு எச்சரிக்கைகளுக்குப் பிறகு) அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்கள் கடந்த பிறகு, ஒரு புதிய பந்து கிடைக்கும்போது அமலாகும்.
பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பந்தை மாற்றுவற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே ஓடி ரன் எடுக்கும்போது, பேட்ஸ்மேன் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால், அந்த ரன் வழங்கப்படாது. பேட்டர்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், இருவரில் அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் தேர்வு செய்ய முடியும்.

Wide, Out உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பவுலிங் கேப்டன் DRS கோரினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையீடே முதலில் ஏற்றுக்கொள்ளப்படும்.
பவுண்டரி எல்லையில் பறந்து சென்று கேட்ச் செய்யும்போது, மீண்டும் ஒருமுறை மட்டுமே களத்திற்குள் வந்து கேட்ச் செய்ய முடியும். பந்தை பிடித்த பிறகு மீண்டும் பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றால் அது கேட்சாக கருதப்படாது.

சில நேரங்களில் பீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார்.
அதுபோக உள்ளூர் போட்டிகளில் ஒரு வீரர் முழுமையாக காயத்தை சந்திக்கும்போது புதிதாக வரும் மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்யலாம். அதை நடுவர் சோதித்து முடிவெடுப்பார்.
மழையால் பாதிக்கப்படும் சர்வதேச டி20 போட்டிகளுக்கான பவர் பிளே விதிமுறையை ஐசிசி மாற்றி அறிவித்துள்ளது. பொதுவாக 20 ஓவர்கள் கொண்ட ஒரு சர்வதேச போட்டியில் முதல் 6 ஓவர்கள் பவர்பிளேவாக விளையாடப்படும். அதாவது 30 சதவீதம் பவர்பிளேயாக கருதப்படும்.
அதுவே மழையால் ஓவர்கள் குறைக்கப்படும் போது 25% மட்டுமே பவர் பிளேவாக விளையாடப்பட்டது. எடுத்துக்காட்டாக ஒரு டி20 போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 2 ஓவர்கள் மட்டுமே பவர்பிளேவாக விளையாடப்படும். அதைத்தான் தற்போது ஐசிசி முழுமையாக கிட்டத்தட்ட 30% மாற்றி அமைத்துள்ளது.
இந்த புதிய விதிமுறையின் படி இனிமேல் 8 ஓவர்கள் கொண்ட போட்டிக்கு 2.2 ஓவர்கள் பவர்பிளேவாக விளையாடப்படும். வரும் ஜூலை 10-ம் தேதி முதல் இந்த புதிய பவர்பிளே விதிமுறை நடைமுறைக்கு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அந்த விதிமுறையின் படி 5 ஓவர்கள் கொண்ட போட்டிக்கு 1.3 ஓவர்கள் பவர் பிளேவாக விளையாடப்படும். அதே போல 6 ஓவர்களுக்கு 1.5, 7 ஓவர்களுக்கு 2.1, 8 ஓவர்களுக்கு 2.2, 9 ஓவர்களுக்கு 2.4, 10 ஓவர்களுக்கு 3 ஓவர்கள் பவர் பிளேவாக விளையாடப்படும். 11 ஓவர்களுக்கு 3.2, 12 ஓவர்களுக்கு 3.4, 13 ஓவர்களுக்கு 3.5, 14, ஓவர்களுக்கு 4.1, 15 ஓவர்களுக்கு 4.3, 16 ஓவர்களுக்கு 4.5, 17 ஓவர்களுக்கு 5.1, 18 ஓவர்களுக்கு 5.2, 19 ஓவர்களுக்கு 5.4 ஓவர்கள் பவர்பிளே ஓவர்களாக விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 தரப்புக்கும் பவர்பிளே நியாயமான முறையில் இருக்கும் என்று ஐசிசி கூறுவது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதினர்.
- ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பயோலினியை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டி தகுதி பெற்றார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பயோலினியை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டி தகுதி பெற்றார்.
- திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
- பிளே-ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் திண்டுக்கல்லில் நடக்கிறது.
9-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் கடந்த 5-ந்தேதி கோவையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் போட்டி நடந்தது.
நெல்லையில் நேற்று இரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி தோற்கடித்தது.
இத்துடன் நெல்லையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்டன.
கோவை கிங்ஸ் அணி வெளியேற்றப்பட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு 6 புள்ளிகளுடன் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ், தலா 4 புள்ளிகளுடன் உள்ள திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. அந்த அணிகளுக்கு தலா ஒரு ஆட்டம் எஞ்சி உள்ளது.
கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நாளை திண்டுக்கல்லில் தொடங்குகிறது. நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மதியம் 3.15 மணிக்கு நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட அந்த அணி கடைசி லீக் போட்டியிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக் காமல் பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் முனைப்பில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விஜய் சங்கர், ஜெகதீசன், ஹரி கரன், ஆஷிக், அபிஷேக் தன்வர், பிரேம்குமார், எம். சிலம்பரசன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
சதுர்வேத் தலைமையி லான மதுரை அணி வெற்றி பெற்றால்தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் தொட ரில் இருந்து வெளியேற்றப் படும். இதனால் அந்த அணி வெற்றி நெருக்கடியில் உள்ளது.
இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட கோவை அணி வெற்றியுடன் தொடரை முடிக்க விரும்பும். இப்போட்டியில் சேலம் அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சேலம் அணி வெற்றிக்காக போராடும்.
பிளே-ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் திண்டுக்கல்லில் நடக்கிறது.
- வங்கதேசம் முதல் இன்னிங்சில் 247 ரன்களில் சுருண்டது.
- இலங்கை 458 ரன்கள் குவித்தது.
இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.
லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 96 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. லிட்டன் தாஸ் தாக்குப்பிடித்து விளையாடினால் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் இலங்கை இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்யும்.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது.
- பேட் கம்மின்ஸ் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 123 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அடுத்து வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து 9-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பேட் கம்மின்ஸ் விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெய்டன் சீல்ஸ் வேகப்பந்து வீ்ச்சாளர் கைப்பற்றினார். விக்கெட்டை வீழ்த்தியதும், வெளியே போ (Dressing Room) என்ற வகையில் ஆக்ரோசமாக சைகை காட்டினார்.
அந்த நிலையில் ஒரு வீரர் ஆட்டமிழக்கும்போது பந்து வீச்சாளர் ஐசிசி விதிமுறைக்கு மாறாக நடவடிக்கையில் ஈடுபட்டதாக, இந்த போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் தடைவிதிப்பதற்கான ஒரு புள்ளிகளையும் வழங்கியது. கடந்த 24 மாதங்களில் சீல்ஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது 2ஆவது முறையாகும். இதனால் தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்களே சேர்த்தது. 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
- மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
- 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.
FIFA கிளப் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜுவென்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
இது குரூப்பில் மான்செஸ்டர் சிட்டியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.

அமெரிக்காவின் கேம்பிங் வேர்ல்ட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மி டோகு மூலம் மான்செஸ்டர்சிட்டி முன்னிலை பெற்றது.
ஆனால் மூன்று நிமிடங்களுக்குள், மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சனின் தவறைப் பயன்படுத்திக் கொண்ட ஜுவென்டஸ் அணி, மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
26வது நிமிடத்தில், பியர் கலுலு கோல் அடித்ததால் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் முன்னிலை பெற்றது. மாற்று வீரர் எர்லிங் ஹாலண்ட் இரண்டாவது பாதியின் ஏழு நிமிடங்களில் மூன்றாவது கோலை அடித்தார்.
பின்னர் பில் ஃபோடன் மூன்று நிமிடங்களுக்குள் மற்றொரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து சவின்ஹோவின் நீண்ட தூர ஸ்ட்ரைக் மான்சஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தது.

பில் ஃபோடன்
போட்டியின் போது எர்லிங் ஹாலண்ட் தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.
டுசன் விளாஹோவிக் 84வது நிமிடத்தில் ஜுவென்டஸின் ஆறுதல் கோலை அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் மான்சஸ்டர் சிட்டி வெற்றியைப் பதிவு செய்தது.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு சுருண்டது.
பார்படாஸ்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவில் ஹெட் 59 ரன்னும், கவாஜா 47 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 72 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ், ஷாய் ஹோப் ஜோடி இணைந்து 67 ரன்கள் சேர்த்தது.
ஷாய் ஹோப் 48 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
10 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியா 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருக்கிறது.
- இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டையும் 6-3 என எளிதாக வென்றது. இந்தப் போட்டியில் பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 9 நிமிடம் மட்டும் நடந்தது.
- ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் எம்மா நவாரோ காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான எம்மா நவாரோவை எதிர்கொண்டார்.
இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4 என முதல் செட்டை வென்றார். பதிலடி கொடுக்கும் விதமாக நவாரோ 6-1 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பெகுலா 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
திருநெல்வேலி:
டி.என்.பி.எல். தொடரின் 24-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.
என்.எஸ்.ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்னும், சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்னும் விளாசினர். சந்தோஷ் குமார் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, அஸ்வின், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. விமல் குமார் 31 பந்தில் 45 ரன்னும்,
மான் பாப்னா 28 பந்தில் 38 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹன்னி சைனி 14 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ஏற்கனவே சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
- சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டிமால் 93 ரன்னில் வெளியேறினார்.
- நிசங்கா 146 ரன்களிலும் ஜெயசூர்யா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
கொழும்பு:
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.
இந்நிலையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக ஷட்மன் இஸ்லாம் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, சோனல் தினுஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா - லஹிரு உதாரா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது.
அதில் லஹிரு உதாரா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து நிசங்காவுடன் தினேஷ் சண்டிமால் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசினர். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டிமால் 93 ரன்னில் வெளியேறினார்.
ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசங்கா சதம் விளாசி அசத்தினார். இதனால் 2-ம் நாள் முடிவில் இலங்கை அணி 2-வது விக்கெட்டை இழந்து 290 ரன்கள் எடுத்தது. நிசங்கா 146 ரன்களிலும் ஜெயசூர்யா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.






