என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • காலிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் மற்றும் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோர் மோதினர்.
    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஸ்வியாடெக் எளிதாக கைப்பற்றினார்.

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் ரஷ்யா வீராங்கனை எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஸ்வியாடெக் எளிதாக கைப்பற்றினார். 2-வது பரபரப்பாக சென்றது. இறுதியில் ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதன்மூலம் 6-4, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
    • இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

    பிர்மிங்காம்:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக பும்ரா இருந்தார். முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2-வது இன்னிங்சில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அதே சமயம் அவர் அதிக ஓவர்களையும் அவர் வீசினார்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என முன்பே அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் தான் அவர் விளையாடுவார் என பிசிசிஐயும் முன்பே தெரிவித்திருந்தது.

    எனவே அந்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து விளையாடுவது அவருக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் 2-வது போட்டியின் போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் பும்ரா விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

    • சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்களும், என்.எஸ். ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்களும் விளாசினர்.
    • ஆதிஷ் (19), நிர்மல் குமார் (16), ரிதிக் ஈஸ்வரன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 24ஆவது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி அந்த அணியின் சந்தோஷ் குமார் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அருண் கார்த்திக் 6 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஆதிஷ் (19), நிர்மல் குமார் (16), ரிதிக் ஈஸ்வரன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்களும், என்.எஸ். ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்கள் விளாச நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    • 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணியுடன் ஒப்பந்தம் செய்தார்.
    • தற்போது ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.

    உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

    இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைத்தளத்தில் "புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதே பேரார்வம், அதே கனவு. இணைந்து சதனைப் படைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஐந்து முறை பலோன் டிஆர் விருது வென்ற ரொனால்டோ, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணிக்கு சென்றார். இவருக்கு வருடத்திற்கு 20 கோடி அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.
    • நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது.

    நெல்லை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. இதில்

    இன்று நடைபெறும் 24- வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது. அந்த அணி நெல்லையை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது. 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    • காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்தார்.
    • டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் 2 -வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

    நீண்ட காலமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி இருக்கிறார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி ஆடும் லெவன்:-

    ஸ்டோக்ஸ் , ஆர்ச்சர், ஜோ ரூட், டக்கெட், பஷீர், பெத்தேல், ஹாரி புரூக், கார்ஸ், சாம் குக், கிராலி, ஓவர்டன், ஆலி போப், ஸ்மித், ஜோஷ் டங் , வோக்ஸ்.

    • ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜாஸ்மின் பயோலினி மற்றும் பீட்ரிஸ் ஹடாட் மையா ஆகியோர் மோதினர்.

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாட் மையா ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினி 7-5, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை.
    • சிலர் களத்திற்குள் வருகிறார்கள் என தெரிந்தால், நாம் டிவியை ஆன் செய்து அங்கேயே அமர்ந்து விடுமோ அவர்களுள் இவரும் ஒருவர்.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் இந்திய அணி வீரர்கள் 5 சதங்களை பதிவு செய்தனர். 5 சதங்களை அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது குறித்து ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்டின் ஆட்டத்தை குறித்து பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    அந்த வகையில் ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை. அவர் செய்வதெல்லாம் உங்களை கவர்ந்து இழுக்கும். சிலர் களத்திற்குள் வருகிறார்கள் என தெரிந்தால், நாம் டிவியை ஆன் செய்து அங்கேயே அமர்ந்து விடுமோ அவர்களுள் இவரும் ஒருவர்.

    என ஸ்டூவர்ட் பிராட் கூறினார்.

    இந்த போட்டியில் இரு இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிளே ஆப் சுற்றின் 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.
    • பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    நெல்லை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. நேற்று டன் 23 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. திருப்பூர் தமிழனஸ் 8 புள்ளிகளுடனும், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 6 புள்ளிகளுடனும், திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடனும், கோவை கிங்ஸ் 2 புள்ளிகளுடனும் உள்ளன.

    முன்னாள் சாம்பியனான கோவை 5 போட்டியில் தோற்று வாய்ப்பை இழந்து விட்டது. பிளே ஆப் சுற்றின் 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 24- வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.அந்த அணி நெல்லையை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றது. 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    • ரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்த போது நீங்கள் அவரை பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து கொள்ளலாம்.
    • இந்திய அணி விளையாடிய போது நான் 2 அல்லது 3 கேப்டன்களை பார்த்தேன்.

    லண்டன்:

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.

    5 சதங்கள் அடித்து இந்திய அணி தோற்றது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 சதம் அடித்து தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

    இந்த நிலையில் சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் விமர்சித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் இருந்த ஆளுமை தன்மை கில்லிடம் நான் பார்க்கவில்லை. அவர் ஒவ்வொரு பந்துகளுக்கும் எதிர்வினைதான் செய்கிறார். முன்கூட்டியே அவர் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கருதுகிறேன்.

    ரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்த போது நீங்கள் அவரை பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் அவர்களிடம் தான் ஆட்டத்தின் கட்டுப்பாடு இருக்கும்.

    இந்திய அணி விளையாடிய போது நான் 2 அல்லது 3 கேப்டன்களை பார்த்தேன். ஒரு கமிட்டி மூலம் இந்த கேப்டன்ஷிப் நடத்தப்படுகிறது. கேட்ச்களை தவற விட்டது மற்றும் பேட்டிங் வரிசை திடீரென சரிந்தது ஆகியவை தான் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாகும். இதனை சுப்மன் கில்லால் சரி செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்டர் மிலன் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
    • டார்ட்மென்ட் (ஜெர்மனி) 1-0 என்ற கோல் கணக்கில் உல்சானை (கொரியா) தோற்கடித்தது.

    சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்திய நேரப்படி இன்று காலை 'இ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் (இத்தாலி) -ரிவர் பிளேட் ( அர்ஜென்டினா) அணிகள் மோதின. இதில் இன்டர் மிலன் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மோன்டேரி (மெக்சிகோ) 4-0 என்ற கோல்கணக்கில் உர்வாவை (ஜப்பான்) தோற்கடித்தது. இந்த பிரிவில் இன்டர்மிலன் 7 புள்ளிகளுடனும், மோன்டேரி 5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதிபெற்றன.

    எப் பிரிவில் நடந்த ஆட்டங்களில் டார்ட்மென்ட் (ஜெர்மனி) 1-0 என்ற கோல் கணக்கில் உல்சானை (கொரியா) தோற்கடித்தது. புளூமிமெனன்ஸ் ( பிரேசில்) -மாமெலோடி சன்டவுண்ஸ் (தென் ஆப்பிரிக்கா ) அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. இந்த பிரிவில் டார்ட்மென்ட் 7 புள்ளிகளுடனும், புளூமிமெனன்ஸ் 5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

    • 1993-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றதில்லை.
    • இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுகிறது.

    இதன்படி ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரங்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டிராவில் ஹெட் 59 ரன்களும் கவாஜா 47 ரன்களும் அடித்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடியவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்துள்ளது. 

    ×