என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கோலி, ரோகித் ஆளுமை தன்மை கில்லிடம் இல்லை- நாசர் உசேன்
    X

    கோலி, ரோகித் ஆளுமை தன்மை கில்லிடம் இல்லை- நாசர் உசேன்

    • ரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்த போது நீங்கள் அவரை பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து கொள்ளலாம்.
    • இந்திய அணி விளையாடிய போது நான் 2 அல்லது 3 கேப்டன்களை பார்த்தேன்.

    லண்டன்:

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.

    5 சதங்கள் அடித்து இந்திய அணி தோற்றது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 சதம் அடித்து தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

    இந்த நிலையில் சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் விமர்சித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் இருந்த ஆளுமை தன்மை கில்லிடம் நான் பார்க்கவில்லை. அவர் ஒவ்வொரு பந்துகளுக்கும் எதிர்வினைதான் செய்கிறார். முன்கூட்டியே அவர் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கருதுகிறேன்.

    ரோகித் அல்லது விராட் கோலி கேப்டனாக இருந்த போது நீங்கள் அவரை பார்த்தாலே அவர் தான் கேப்டன் என்று அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் அவர்களிடம் தான் ஆட்டத்தின் கட்டுப்பாடு இருக்கும்.

    இந்திய அணி விளையாடிய போது நான் 2 அல்லது 3 கேப்டன்களை பார்த்தேன். ஒரு கமிட்டி மூலம் இந்த கேப்டன்ஷிப் நடத்தப்படுகிறது. கேட்ச்களை தவற விட்டது மற்றும் பேட்டிங் வரிசை திடீரென சரிந்தது ஆகியவை தான் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாகும். இதனை சுப்மன் கில்லால் சரி செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×