என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதும் ஆக்ரோசமாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு அபராதம்..!
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது.
- பேட் கம்மின்ஸ் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 123 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அடுத்து வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து 9-ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பேட் கம்மின்ஸ் விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெய்டன் சீல்ஸ் வேகப்பந்து வீ்ச்சாளர் கைப்பற்றினார். விக்கெட்டை வீழ்த்தியதும், வெளியே போ (Dressing Room) என்ற வகையில் ஆக்ரோசமாக சைகை காட்டினார்.
அந்த நிலையில் ஒரு வீரர் ஆட்டமிழக்கும்போது பந்து வீச்சாளர் ஐசிசி விதிமுறைக்கு மாறாக நடவடிக்கையில் ஈடுபட்டதாக, இந்த போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் தடைவிதிப்பதற்கான ஒரு புள்ளிகளையும் வழங்கியது. கடந்த 24 மாதங்களில் சீல்ஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது 2ஆவது முறையாகும். இதனால் தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்களே சேர்த்தது. 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.






