என் மலர்
விளையாட்டு
- நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் 'நம்பர் 1' இடத்தை இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா பிடித்துள்ளார்.
1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 1370 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
- கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
- அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார்.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் விளாசியதன் மூலம், கிரிக்கெட் போட்டியின் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் சதம் அடித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார்
உலகளவில் 3 போட்டிகளிலும் சதம் அடித்த வீராங்கனைகளின் வரிசையில் ஸ்மிருதி மந்தனா 5வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- பி பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.
சென்னை:
14-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்த பிரிவில் இடம்பெற வேண்டும் என்பதை குலுக்கல் மூலம் நேற்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் முடிவு செய்தது.
'ஏ' பிரிவு: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து
'பி' பிரிவு: முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து
'சி' பிரிவு: முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா
'டி' பிரிவு: ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா
'இ' பிரிவு: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா
'எப்' பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வங்காளதேச அணிகளும் இடம்பிடித்துள்ளன.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.
இதில் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மெக்சிகோவின் கொன்சாலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடியை சந்தித்தது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 1-6 என இழந்தது. இதற்கு பதிலடியாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றியது.
அடுத்து நடந்த சூப்பர் டை பிரேக்கரில் பாம்ப்ரி ஜோடி 13-15 என இழந்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 21 நிமிடம் நடந்தது.
- முதலில் ஆடிய கோவை அணி 203 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய சேலம் 135 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.
திண்டுக்கல்:
நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4வது கட்ட போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது. பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. அபிஷேக் 32 ரன்னும், லோகேஷ்வர் 29 ரன்னும், நிதிஷ் ராஜகோபால் 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். தேவ் ராகுல் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், சேலம் அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.
கோவை அணி சார்பில் வித்யுத் 5 விக்கெட்டும், திவாகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நாட்டிங்காம்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். ஹர்லீன் தியோல் 43 ரன்னும், ஷபாலி வர்மா 20 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து.
அந்த அணியின் கேப்டன் நாட் சீவர் பிரண்ட்42 பந்தில் 66 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இங்கிலாந்து 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு அளிக்கப்பட்டது.
இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
- இதில் அமெரிக்காவின்ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்தது.
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார்.
இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
திண்டுக்கல்:
நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.
இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் டக் அவுட்டானார். சுரேஷ் லோகேஷ்வர் 3 ரன்னில் வெளியேறினார். விஷால் வைத்யா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார்.
ஆட்டத்தின் 18வது ஓவரில் ஷாருக் கான் ஹாட்ரிக் சிக்சர் உள்பட 28 ரன்கள் எடுத்தார். அவர் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிப் போட்டியில் நெதர்லாந்து வீரர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.
இதில் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென்ஆப்பிரிக்கா.
- லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ், கார்பின் போஸ்ச் சதம் விளாசினர்.
ஜிப்பாப்வே- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் டெவால்ட் பிரேவிஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கோடி யூசுப் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.
டோனி டி ஜோர்சி, ப்ரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோர்சி 0 ரன்னிலும், ப்ரீட்ஸ்கே 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முல்டர் 17 ரன்னிலும், பெடிங்காம் 0 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா. 5ஆவது விக்கெட்டுக்கு லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் உடன் டெவால்டு பிரேவிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளயாடியது. பிரேவிஸ் 41 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனார்.
அடுத்து வந்த வெர்ரைன் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கார்பின் போஸ்ச் அபாரமாக விளையாடினார். பிரிட்டோரியஸ் அறிமுக போட்டியிலேயே 112 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 157 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 160 பந்தில் 153 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
போஸ்ச் 77 பந்தில் அரைசதமும், 124 பந்தில் சதமும் அடித்தார். தென்ஆப்பிரிக்கா முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்துள்ளது. போஸ்ச் 100 ரன்னுடனும், மபாகா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 28 ரன்கள் விளாசினார்.
- பாபா அபராஜித் 12 பந்தில் 20 ரன்கள் அடித்தார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய மதரை பாந்தர்ஸ் 156 ரன்கள் சேர்த்தது, பின்னர். 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது.
ஆஷிக், ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 17 பந்தில் 22 ரன்களும், ஹரிகரன் 17 பந்தில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாபா அபராஜித் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது, 14 ஓவரில் 114 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. என். ஜெகதீசன் 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 28 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 12.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 7 போட்டிகளில் 2-ல் மட்டும் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
- சதுர்வேத் 18 பந்தில் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
- ஆதீக் உர் ரஹ்மான் 28 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழைக் காரணமாக அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.
மதுரை பாந்தர்ஸ் அணியின் ராம் அரவிந்த், பாலசந்தர் அனிருத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அரவிந்த் ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அனிருத் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் சதுர்வேத் உடன் ஆதீக் உர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மதுரை பாந்தர்ஸ் 6.4 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சதுர்வேத் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் சிலம்பரசன் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விளையாடிய ஆதீக் உர் ரஹ்மான் 28 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சரத்குமார் 1 ரன்னில் வெளியேறினார். முருகன் அஸ்வின் அதிரடியாக 34 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
19ஆவது ஓவரை விஜய் சங்கர் வீசினார். இந்த ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார். 19 ஓவர் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. தன்வர் கடைசி ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுக்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்துள்ளது.






