என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீராங்கனை.. ஸ்மிருதி மந்தனா சாதனை
- கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
- அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார்.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் விளாசியதன் மூலம், கிரிக்கெட் போட்டியின் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் சதம் அடித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார்
உலகளவில் 3 போட்டிகளிலும் சதம் அடித்த வீராங்கனைகளின் வரிசையில் ஸ்மிருதி மந்தனா 5வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






