என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: மதுரை பாந்தர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
- விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 28 ரன்கள் விளாசினார்.
- பாபா அபராஜித் 12 பந்தில் 20 ரன்கள் அடித்தார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய மதரை பாந்தர்ஸ் 156 ரன்கள் சேர்த்தது, பின்னர். 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது.
ஆஷிக், ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 17 பந்தில் 22 ரன்களும், ஹரிகரன் 17 பந்தில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாபா அபராஜித் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது, 14 ஓவரில் 114 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. என். ஜெகதீசன் 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 28 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 12.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 7 போட்டிகளில் 2-ல் மட்டும் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.






