என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மாவின் திறமையை விமர்சனம் செய்ய இங்கிலாந்து வீரருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு சதம், ஒரு இரட்டை சதத்துடன் 529 ரன்கள் குவித்தார்.

    ரோகித் சர்மாவின் ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் அவரது சாதனையை விமர்சனம் செய்துள்ளார்.

    ரவுனாக் கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை விவரித்து பாராட்டியிருந்தார். அதற்கு பதில் அளித்து நிக் காம்ப்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வெளிநாட்டு தொடரில் விளையாடும்போது ரோகித் சர்மாவின் நிலைமை என்ன?’’ என்று பதிவிட்டிருந்தார்.

    இதனால் கடும் கோபம் அடைந்த ரோகித் சர்மாவின் ரசிகர்கள் நிக் காம்ப்டனுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். 

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்
    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்

    ரோகித் சர்மா நிக் காம்ப்டன்
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒரு சதம், ஒரு இரட்டை சதத்துடன் 340 ரன்கள் குவித்த மயாங்க் அகர்வாலின் சாதனை பேசப்படாமல் போய்விட்டது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என வென்றது.

    இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக பேசப்பட்டது. அதேவேளையில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வாலின் ஆட்டம் பேசப்படாமல் போய்விட்டது.

    விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் (215) விளாசினார். ரோகித் சர்மா சதம் (176) அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்த மயங்க் அகர்வால், முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய வீரர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

    2-வது இன்னிங்சில் ரோகித் சர்மா 127 ரன்கள் குவித்த நிலையில், மயங்க் அகர்வால் 7 ரன்னில் வெளியேறினார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. மயாங்க் அகர்வாலின் இரட்டை சதம் எடுபடாமல் போய்விட்டது.

    புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ரோகித் சர்மா 14 ரன்னில் வெளியேறிய நிலையில், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் (108) அடித்தார். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (254) அடித்தார். இதனால் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    மயங்க் அகர்வால்

    ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா இரட்டை சதம் (212) அடிக்க, மயங்க் அகர்வால் 10 ரன்னில் வெளியேறினார். இதனால் ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒட்டுமொத்தமாக மூன்று சதங்களுடன் 529 ரன்கள் குவித்த ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    இரண்டு சதங்களுடன் 340 ரன்கள் குவித்த மயங்க் அகர்வாலால் ஒரு ஆட்ட நாயகன் விருதைக்கூட பெற முடியாமல் ஏமாற்றமே அடைய முடிந்தது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், கேப்டன் விராட் கோலியுடன் எந்த நிலையில் பேசுவேன் என்பதை கங்குலி விளக்கியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் அணியின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் இருந்து  வர்ணனையாளராக பணிபுரிந்துள்ளார்.

    அப்போது இந்திய அணி கேப்டனிடம் கிரிக்கெட் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் கலந்துரையாடியிருப்பார்.

    விராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்க இருக்கும் சவுரவ் கங்குலியிடம் இந்த விஷயத்தில் தங்களுடைய பேச்சுவார்த்தை எப்படி இருக்கும் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலியை நான் 24-ந்தேதி சந்திக்க இருக்கிறேன் அப்போது பிசிசிஐ தலைவர் கேப்டனின் பேசுவது போன்று எனது பேச்சு இருக்கும். அவர் கேப்டன். அவர் முடிவு எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார்.
    இரண்டு சதங்கள் மற்றும் இரட்டை சதங்களுடன் 529 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 டெஸ்டில் 4 இன்னிங்சில் விளையாடி 529 ரன்கள் குவித்தார்.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். ராஞ்சியில் இன்றுடன் முடிவடைந்த கடைசி டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். இரண்டு டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒட்டு மொத்தமாக சிறப்பாக விளையாடியதால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா 529 ரன்கள் குவித்தார். அஸ்வின் 15 விக்கெட்டுக்களும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 13 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிப்பில் தொடக்க வீரர் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்தார். அவர் 3 டெஸ்டில் 4 இன்னிங்சில் விளையாடி 529 ரன் குவித் தார்.

    இதில் ஒரு இரட்டை சதம் உள்பட 3 சதம் அடங்கும். அதிகபட்சமாக 212 ரன்கள் குவித்தார். சராசரி 132.25 ஆகும். அவர் மொத்தமாக 62 பவுண்டரியும், 19 சிக்சரும் விளாசினார்.

    ரோகித் சர்மாவுக்கு அடுத்தப்படியாக மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 4 இன்னிங்சில் 340 ரன் குவித்து 2-வது இடத்தை பிடித்தார். இரட்டை சதம் உள்பட 2 சதம் அடித்தார். அதிகபட்சமாக 215 ரன்கள் குவித்தார். சராசரி 85 ஆகும். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 4 இன்னிங்சில் 317 ரன் குவித்தார். 2 முறை ஆட்டம் இழக்காததால் அவரது சராசரி 158.50 ஆகும். அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்தார்.

    ரகானே 1 சதம், ஒரு அரை சதம் உள்பட 216 ரன்னும், ஜடேஜா 2 அரை சதம் உள்பட 212 ரன்னும் எடுத்தனர்.

    இந்த டெஸ்ட் தொடரில் சென்னையை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். அவர் 3 டெஸ்டில் 15 விக்கெட் வீழ்த்தினார். 145 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். 3-வது டெஸ்டில் அவர் 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.

    ராஞ்சி டெஸ்டில் வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி மற்றும் ஜடேஜா தலா 13 விக்கெட் கைப்பற்றினர். ‌ஷமி 35 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது சிறந்து பந்து வீச்சாகும். அதற்கு அடுத்தபடியாக உமேஷ் யாதவ் 2 டெஸ்டில் 11 விக்கெட் கைப்பற்றினார்.
    டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
    ராஞ்சி: 

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில்  முடிந்தது. அதன்பின்னர் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன்  வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று  தொடரை கைப்பற்றிவிட்டது. 

    3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது, தென்  ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ-ஆன் பெற்றது. மீண்டும் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2வது  இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  தொடரையும் 3-0 என முழுமையாக கைப்பற்றியது. 

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இப்போட்டியின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.  

    தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வெற்றிதான், இந்த அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாகும். 

    இந்த டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸில் 116.3 ஓவர்கள் ஆடியது, தென் ஆப்பிரிக்கா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம்  104 ஓவர்களை ஆடி ஆல் அவுட் ஆனது.

    இந்த டெஸ்டின் கடைசி நாளான இன்று, வெறும் இரண்டு ஓவர்களே வீசப்பட்டன. ஆட்டம் வெறும் 11 நிமிடங்களே நடைபெற்றது. 

    சுழற்பந்து வீச்சாளர்களைப் போலவே வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கமும் அதிகமாக இருந்த அரிதான ஒரு தொடர் ஆகும்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா (13 விக்கெட்), ரவிச்சந்திரன் அஸ்வின் (15 விக்கெட்) சேர்ந்து 28 விக்கெட்டுகளும், வேகப்பந்து  வீச்சாளர்கள் முகமது ஷமி (3 டெஸ்ட்களில் 13), உமேஷ் யாதவ் (இரண்டு டெஸ்டில் 11), இஷாந்த் சர்மா (2 டெஸ்டில் 2) ஆகியோர் 26  விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்த தொடரின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ரோஹித் சர்மாதான்.

    இந்தியாவில், இந்திய அணி 11 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 5 வெற்றிகளுடன் 240 புள்ளிகள் என்று மற்ற அணிகளைக் காட்டிலும்  வெகுதொலைவில் முதலிடத்தில் உச்சம் பெற்றுள்ளது. 

    மறுபுறம், தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  தொடரின், தங்கள் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்றதால்  புள்ளிக்கணக்கை தொடங்க தவறிவிட்டது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுடன், தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
    ராஞ்சி:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

    இதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகி டெஸ்ட் போட்டி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டது. நேற்றைய ஆட்டநேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது.

    இந்திய அணி

    இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புரூயின்(30), நிகிடி(0) இருவரும், நதீம் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி 133 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி ஆகும்.

    இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
    கணவன் குறித்த கேள்விக்கு டோனிக்கு என்ன வயது ஆகிறது? அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா? என சர்பராஸ் அகமதுவின் மனைவி கோபமாக கொந்தளித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் டெஸ்ட், 20 ஓவர்  அணியிலிருந்தும் சமீபத்தில் சர்பராஸ் அகமது நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் அசாம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடருக்கான  கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.

    அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சர்பராஸ் அகமது இடம் பெறவில்லை, ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டார். 32 வயதாகும் சர்பராஸ் அகமது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று  செய்திகள் வெளியாகின.

    இதுகுறித்து சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத் சர்பிராஸ் அகமதுவிடம் நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் டோனியோடு ஒப்பிட்டு காட்டமாகப் பதில் அளித்தார்.

    என் கணவர் சர்பராஸ் அகமது ஏன் இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அதற்கு என்ன தேவை இருக்கிறது. இப்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. டோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா?. இப்போது டோனிக்கும் ஆகும் வயதில் இன்னும் விளையாடி வருகிறார்தானே, அவரென்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா?. என்னுடைய கணவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வலிமையுடன் திரும்பி வருவார். எனது கணவர் ஒரு போராளி, மீண்டும் திரும்பி வருவார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது கணவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால், அவர் மனவேதனை அடையவில்லை, நம்பிக்கை இழந்து விடவில்லை. பாகிஸ்தான் வாரியம் முடிவெடுத்துள்ளது. அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.

    இந்த முடிவை நாங்கள் 3 நாட்களுக்கு முன்பே தெரிந்து கொண்டோம். இத்துடன் எனது கணவருக்கு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. இனிமேல் எந்தவிதமான சுமையும், அழுத்தமும் இன்றி விளையாடுவார்  எனத் தெரிவித்துள்ளார்.
    எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம் என்று வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
    வங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மற்றும் டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடும் உள்நாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கு சீனியர் வீரர்கள் உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கோரிக்கைகள் வைத்து வங்காளதேச கிரிக்கெட் போர்டுக்கு மிரட்டில் விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட் விளையாடமாட்டோம் என ஷாகிப் அல் ஹசன், மெஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உள்பட சீனியர் வீரர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

    அப்போது ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘எங்களது போராட்டத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியை சேர்க்கவில்லை. ஏனெனில், அவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இஙகே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

    நாங்கள் கிரிக்கெட்டில் ஈடுபடப்போவதில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் திரும்பமாட்டோம்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 16 வயது நசீம் ஷா உள்பட மூன்று இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    இதற்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டன. டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு இடம் கிடைத்துள்ளது. இவருடன் 19 வயதான ஷாஹீன் அப்ரிடி, முசா கான் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களுடன் முகமது அப்பாஸ், இம்ரான் கான் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அசார் அலி (கேப்டன்), 2. அபிட் அலி, 3. ஆசாத் ஷபிக், 4. பாபர் அசாம், 5. ஹரிஸ் சோஹைல், 6. இமாம் உல் ஹக், 7. இம்ரான் கான், 8. இஃப்திகார் அகமது, 9. காஷிப் பாத்தி், 10. முகமது அப்பாஸ், 11. முகமது ரிஸ்வான், 12. முசா கான், 13. நசீம் ஷா, 14. ஷாஹீன் அப்ரிடி, 15. ஷான் மசூத், ்1்6. யாசிர் ஷா.
    விஜய் ஹசாரே டிராபி காலிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், லீக் ஆட்டம் புள்ளிகள் அடிப்படையில் தமிழ்நாடு, சத்தீஷ்கர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரண்டும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆளுரில் நடைபெற்றன.

    ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174  ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் தமிழ்நாடு அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது.

    பஞ்சாப் அணிக்கு 39 ஓவர்களில் 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு பஞ்சாப் அணியை விட அதிக புள்ளிகள் பெற்றிருந்ததால் அதனடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. மழை குறுக்கிடும்போது பஞ்சாப் அணிக்கு 160 பந்தில் 143 ரன்கள்தான் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் இருந்தன.

    போட்டி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் பஞ்சாப் அணி வென்றிருக்கும். மழையால் அதிர்ஷ்டம் இல்லாமல் சோகத்துடன் பஞ்சாப் அணி வெளியேறியது.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மும்பை - சத்தீஷ்கர் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சத்தீஷ்கர் அணி 45.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது.

    இதனால் சத்தீஷ்கர் அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது. மும்பை அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி அதிரடியாக விளையாடி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் நடத்த முடியாததால், போட்டி கைவிடப்பட்டது. இதனால் லீக் ஆட்டம் புள்ளிகளை கணக்கிட்டு சத்தீஷ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியில் மழை எமனாக புகுந்ததால் மும்பை அணி தாங்க முடியாத சோகத்துடன் தொடரில் இருந்து வெளியேறியது.
    ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ஹம்சா (0), டு பிளிசிஸ் (4), பவுமா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உமேஷ் யாதவ் டி காக் (5), கிளாசனை (5) வெளியேற்ற தென்ஆப்பிரிக்கா 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

    இதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகி டெஸ்ட் போட்டி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 3-வது நாளிலேயே ஆல்அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டது.

    உமேஷ் யாதவ் விக்கெட் வீழ்த்தியதும் மகிழ்ச்சியில் விராட் கோலி

    இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெற்றுவிடும். காலை காலை ஆட்டம் தொடங்கியதும், அரைமணி நேரத்திற்குள் தென்ஆப்பிரிக்காவை ஆல்அவுட் ஆக்கி இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    2-வது இன்னிங்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×