
இதில் ஒரு இரட்டை சதம் உள்பட 3 சதம் அடங்கும். அதிகபட்சமாக 212 ரன்கள் குவித்தார். சராசரி 132.25 ஆகும். அவர் மொத்தமாக 62 பவுண்டரியும், 19 சிக்சரும் விளாசினார்.
ரோகித் சர்மாவுக்கு அடுத்தப்படியாக மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 4 இன்னிங்சில் 340 ரன் குவித்து 2-வது இடத்தை பிடித்தார். இரட்டை சதம் உள்பட 2 சதம் அடித்தார். அதிகபட்சமாக 215 ரன்கள் குவித்தார். சராசரி 85 ஆகும். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 4 இன்னிங்சில் 317 ரன் குவித்தார். 2 முறை ஆட்டம் இழக்காததால் அவரது சராசரி 158.50 ஆகும். அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்தார்.
ரகானே 1 சதம், ஒரு அரை சதம் உள்பட 216 ரன்னும், ஜடேஜா 2 அரை சதம் உள்பட 212 ரன்னும் எடுத்தனர்.
இந்த டெஸ்ட் தொடரில் சென்னையை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். அவர் 3 டெஸ்டில் 15 விக்கெட் வீழ்த்தினார். 145 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். 3-வது டெஸ்டில் அவர் 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.
ராஞ்சி டெஸ்டில் வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப்பந்து வீரர் முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 13 விக்கெட் கைப்பற்றினர். ஷமி 35 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது சிறந்து பந்து வீச்சாகும். அதற்கு அடுத்தபடியாக உமேஷ் யாதவ் 2 டெஸ்டில் 11 விக்கெட் கைப்பற்றினார்.