search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுரவ் கங்குலி, விராட் கோலி
    X
    சவுரவ் கங்குலி, விராட் கோலி

    பிசிசிஐ தலைவர் கேப்டனிடம் உரையாடுவது போன்றுதான் கோலியுடன் எனது பேச்சு இருக்கும்- கங்குலி

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், கேப்டன் விராட் கோலியுடன் எந்த நிலையில் பேசுவேன் என்பதை கங்குலி விளக்கியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் அணியின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் இருந்து  வர்ணனையாளராக பணிபுரிந்துள்ளார்.

    அப்போது இந்திய அணி கேப்டனிடம் கிரிக்கெட் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் கலந்துரையாடியிருப்பார்.

    விராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்க இருக்கும் சவுரவ் கங்குலியிடம் இந்த விஷயத்தில் தங்களுடைய பேச்சுவார்த்தை எப்படி இருக்கும் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலியை நான் 24-ந்தேதி சந்திக்க இருக்கிறேன் அப்போது பிசிசிஐ தலைவர் கேப்டனின் பேசுவது போன்று எனது பேச்சு இருக்கும். அவர் கேப்டன். அவர் முடிவு எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார்.
    Next Story
    ×