search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது ஷமி
    X
    முகமது ஷமி

    ராஞ்சி டெஸ்ட்: 4-வது நாளுக்கு தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி- தென்ஆப்பிரிக்கா 132-8

    ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ஹம்சா (0), டு பிளிசிஸ் (4), பவுமா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உமேஷ் யாதவ் டி காக் (5), கிளாசனை (5) வெளியேற்ற தென்ஆப்பிரிக்கா 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

    இதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகி டெஸ்ட் போட்டி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 3-வது நாளிலேயே ஆல்அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டது.

    உமேஷ் யாதவ் விக்கெட் வீழ்த்தியதும் மகிழ்ச்சியில் விராட் கோலி

    இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெற்றுவிடும். காலை காலை ஆட்டம் தொடங்கியதும், அரைமணி நேரத்திற்குள் தென்ஆப்பிரிக்காவை ஆல்அவுட் ஆக்கி இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    2-வது இன்னிங்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×