என் மலர்
விளையாட்டு
விஜய் ஹசாரே டிராபி காலிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், லீக் ஆட்டம் புள்ளிகள் அடிப்படையில் தமிழ்நாடு, சத்தீஷ்கர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரண்டும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆளுரில் நடைபெற்றன.
ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் தமிழ்நாடு அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது.
பஞ்சாப் அணிக்கு 39 ஓவர்களில் 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு பஞ்சாப் அணியை விட அதிக புள்ளிகள் பெற்றிருந்ததால் அதனடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. மழை குறுக்கிடும்போது பஞ்சாப் அணிக்கு 160 பந்தில் 143 ரன்கள்தான் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் இருந்தன.
போட்டி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் பஞ்சாப் அணி வென்றிருக்கும். மழையால் அதிர்ஷ்டம் இல்லாமல் சோகத்துடன் பஞ்சாப் அணி வெளியேறியது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மும்பை - சத்தீஷ்கர் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சத்தீஷ்கர் அணி 45.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது.
இதனால் சத்தீஷ்கர் அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது. மும்பை அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி அதிரடியாக விளையாடி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் நடத்த முடியாததால், போட்டி கைவிடப்பட்டது. இதனால் லீக் ஆட்டம் புள்ளிகளை கணக்கிட்டு சத்தீஷ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியில் மழை எமனாக புகுந்ததால் மும்பை அணி தாங்க முடியாத சோகத்துடன் தொடரில் இருந்து வெளியேறியது.

ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.
முகமது ஷமியின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ஹம்சா (0), டு பிளிசிஸ் (4), பவுமா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உமேஷ் யாதவ் டி காக் (5), கிளாசனை (5) வெளியேற்ற தென்ஆப்பிரிக்கா 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெற்றுவிடும். காலை காலை ஆட்டம் தொடங்கியதும், அரைமணி நேரத்திற்குள் தென்ஆப்பிரிக்காவை ஆல்அவுட் ஆக்கி இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
2-வது இன்னிங்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகி டெஸ்ட் போட்டி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 3-வது நாளிலேயே ஆல்அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டது.

இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெற்றுவிடும். காலை காலை ஆட்டம் தொடங்கியதும், அரைமணி நேரத்திற்குள் தென்ஆப்பிரிக்காவை ஆல்அவுட் ஆக்கி இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
2-வது இன்னிங்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களுக்கும் முன் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனாலும், ஷாபாஸ் நதீமுக்கு 15 வருடம் கழித்துதான் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 30 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் இந்திய அணியில் அறிமுகமானார்.

அவருக்குப்பின் முதல்தர போட்டியில் அறிமுகமானவர்கள்தான் தற்போது இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும். அவர்கள் அனைவரும் முன்னதாகவே இந்திய அணியில் அறிமுகமான நிலையில், ஷாபாஸ் நதீம் மட்டும் 15 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நதீம் 110 முதல்தர போட்டிகளில் 424 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது 15 வயதில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். சிறப்பான பந்து வீச்சால் தலைசிறந்த பந்து வீச்சாளரானார். கடந்த மூன்று ரஞ்சி டிராபி சீசனில் அதிகளவில் விக்கெட் வீழ்த்தினார். என்றாலும் இந்தியா அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவருக்குப்பின் முதல்தர போட்டியில் அறிமுகமானவர்கள்தான் தற்போது இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும். அவர்கள் அனைவரும் முன்னதாகவே இந்திய அணியில் அறிமுகமான நிலையில், ஷாபாஸ் நதீம் மட்டும் 15 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நதீம் 110 முதல்தர போட்டிகளில் 424 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆண்ட்ரூ மெக்டொனால்டை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரு மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தின் லெய்செஸ்டர்ஷைர், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
2009 ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ள மெக்டொனால்டு, 2012-13 சீசனில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஆல்-ரவுண்டரான மெக்டெனால்டு ஆர்சிபி-யின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
இவரை மூன்று வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 100 பந்து கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெய்ல், ரபாடா மலிங்காவை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டால் 100 பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜூலை 17-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தத் தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை ஏலம் எடுக்க 8 அணிகளும் போட்டியிட்டன. இறுதியில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.
அந்த்ரே ரஸல், ஆரோன் பிஞ்ச், முஜீப் உர் ரஹ்மான், சுனிலை நரைன், இம்ரான் தாஹிர், மேக்ஸ்வெல் ஆகியோர் முதல் சுற்றிலேயே ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஆனால் டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, இலங்கை யார்க்கர் மன்ன் மலிங்கா ஆகியோரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

ராஞ்சி டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி பாலோ-ஆன் கொடுத்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்ய விரும்பாமல் தென்ஆப்பிரிக்காவை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதன்மூலம் 8-வது முறையாக எதிரணியை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது. இதனால் அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முகமது அசாருதீன் 7 முறையும், எம்எஸ் டோனி 5 முறையும், கங்குலி நான்கு முறையும் பாலோ-ஆன் கொடுத்துள்ளனர்.
1993-94-ல் இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு முறை (லக்னோ மற்றும் பெங்களூரு) பாலோ-ஆன் கொடுத்தது. அதன்பின் தற்போதுதான் இரண்டு முறை பாலோ-ஆன் கொடுத்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 8-வது முறையாக பாலோ-ஆன் கொடுத்த நிலையில், 7 முறை வெற்றியும், இரண்டு முறை டிராவும் கண்டுள்ளது. பாலே-ஆன் கொடுக்காமல் இந்தியா பேட்டிங் செய்த 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் பாலோ-ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 3-ம் நாள் தேநீர் இடைவெளி வரை 4 விக்கெட்டுக்கு 26 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
ராஞ்சி:
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை ரகானே மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்தனர்.
அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய ரகானே சதமடித்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. இந்தியா 116.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
நேற்றைய 2-வது நாள் தேனீர் இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்தது. 5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக சுபைர் ஹம்சா 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், அஸ்வின், முகமது சமி மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்திய அணி 335 ரன்கள் முன்னிலை எடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ ஆன் வழங்கியது. இதையடுத்து பாலோ-ஆன் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக்கும், டீன் எல்கரும் களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் குயிண்டன் டி காக் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸும் 4 ரன்களில் அவுட் ஆனார்.
தற்போது, தேநீர் இடைவெளி வரை 9.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறி வருகிறது.
உள்நாட்டு போட்டி சராசரியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை (சராசரி 98.22) பின்னுக்கு தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.
* இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இந்த தொடரில் இதுவரை 529 ரன்கள் குவித்துள்ளார். வினோ மன்கட், புதி குன்ட்ரன், சுனில் கவாஸ்கர் (5 முறை), ஷேவாக் ஆகியோருக்கு பிறகு டெஸ்ட் தொடர் ஒன்றில் 500 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆவார். இந்த வகையில் கடைசியாக ஷேவாக் 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மொத்தம் 544 ரன்கள் எடுத்திருந்தார்.
* முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வாலும் (215 ரன்), 2-வது டெஸ்டில் விராட் கோலியும் (254 ரன்), 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவும் (212 ரன்) இரட்டை சதம் அடித்து உள்ளனர். ஒரு டெஸ்ட் தொடரில் மூன்று இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடித்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
* உள்நாட்டில் ரோகித் சர்மா இதுவரை 6 சதம், 5 அரைசதம் உள்பட 18 இன்னிங்சில் ஆடி 1,298 ரன்கள் (சராசரி 99.84) எடுத்துள்ளார். உள்ளூரில் குறைந்தது 10 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் சிறந்த சராசரியை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை (சராசரி 98.22) பின்னுக்கு தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
* இந்த தொடரில் இந்தியா இதுவரை 47 சிக்சர்கள் (விசாகப்பட்டினம்-27 சிக்சர், புனே-7, ராஞ்சி-13) நொறுக்கியுள்ளது. இதன் மூலம் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு மட்டும் 19 சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2013-14-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 40 சிக்சர் கிளப்பியதே அதிகபட்சமாக இருந்தது.
* டெஸ்ட், ஒரு நாள் போட்டி இரண்டிலும் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இருவரும் இந்தியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோருடன் இப்போது ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி கேரள அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.
கொச்சி:
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த தொடக்க விழாவில் கண்கவர்கலை நிகழ்ச்சிகள், நடனம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து இரவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் கார்ல் மெக்ஹக் கோல் அடித்து குழுமியிருந்த 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஜாவியர் ஹெர்னாண்டஸ் கோல் பகுதிக்குள் தூக்கியடித்த பந்தை அகஸ்டின் இனிஹஸ் தலையால் முட்டி கார்ல் மெக்ஹக் பக்கம் திருப்பினார். அதை மெக்ஹக் லாவகமாக கோலுக்குள் உதைத்து தள்ளினார். ஐ.எஸ்.எல். வரலாற்றில் கொல்கத்தாவின் 100-வது கோல் இதுவாகும்.
பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நின்ற கேரளாவுக்கு 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கேரளா கேப்டன் பார்தலோமேவ் ஒக்பேச் கோலாக்கினார். 45-வது நிமிடத்தில் பார்தலோமேவ் ஒக்பேச் மீண்டும் ஒரு கோல் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். கொல்கத்தா வீரர்கள் பந்தை கடத்தி கொடுத்த விதத்தில் நடந்த குளறுபடியை ஒக்பேச் சரியாக பயன்படுத்திக் கொண்டு அசத்தினார். இதனால் முதல் பாதியில் கேரளா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பந்து அதிகமான நேரம் கேரளா வசமே (54 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. பிற்பாதியில் இரண்டு அணி வீரர்களும் பலமாக முயற்சித்தும் மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை. முடிவில் கேரளா 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை சாய்த்து இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

நான் சிறப்பான வகையில் விளையாடாமல் இருந்திருந்தால், மீடியாக்கள் மிகவும் மோசமாக எழுதியிருக்கும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்ட ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த அவர், ராஞ்சியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில இரட்டை சதம் விளாசினார். நான்கு இன்னிங்சில் 529 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, நான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் மீடியாக்கள் மிகவும் மோசமான வகையில் எழுதியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘நான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் என்னைப் பற்றி அதிகமாக எழுதியிருப்பார்கள். பத்திரிகைகள் முழுவதும் நான் பெற்ற வாய்ப்புகளை பற்றிதான் எழுதின. நான் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியும். இல்லையெனில் மீடியாக்கள் எனக்கு எதிராக எழுதியிருக்கும். தற்போது எல்லோரும் என்னைப் பற்றி நல்ல விஷயங்களை எழுதுவார்கள்.
தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவது எனக்கு சிறப்பான வாய்ப்பு. எனக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்கனவே இதுகுறித்து பேச்சு நடந்து கொண்டிருந்தது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆக, மனதளவில் நான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க தயாராகிவிட்டேன். இந்த வாய்ப்பு எந்த நேரத்திலும் என்னைத் தேடிவரும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.

ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.
ரோகித் சர்மா 117 ரன்னுடனும், ரகானே 83 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ரகானே சதம் அடித்தார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
தேனீர் இடைவேளை முடிந்தபின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்.

தொடர்ந்து விளையாடிய ரகானே 115 ரன்களிலும், ரோகித் சர்மா 212 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஜடேஜா 51 ரன்கள் சேர்த்தார். உமேஷ் யாதவ் 10 பந்தில் 5 சிக்சருடன் 31 ரன்கள் விளாசினார். இந்தியா 116.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அத்துடன் 2-வது நாள் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் லிண்டே நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
தேனீர் இடைவேளை முடிந்தபின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வரும் விராட் கோலி வங்காளதேச டி20 தொடரில் இருந்து விலகி ஓய்வு எடுக்க உள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா தொடர், ஐபிஎல், உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்கா தொடர் என ஓய்வில்லாமல் விளையாடி வருகிறார்.
இதனால் வேலைப்பளுவை காரணம் காட்டி வங்காளதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேச தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வருகின்ற 24-ந்தேதி நடக்கிறது. அப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.