என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.
    ராஞ்சி:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. 
    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரகானே தனது 6வது சதத்தை அடித்து அசத்தினார். ரகானே 115 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

    மற்றொரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தார். அவர் 255 பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 212 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரகானே சதமடித்து அசத்த, இந்தியா உணவு இடைவேளையில் 4 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.
    ராஞ்சி:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 

    இதற்கிடையே, 3-வது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார்.

    முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ரோகித் சர்மாவும், ரகானேவும் தங்களது அதிரடியை தொடங்கினர். 
    ரகானே தனது 6வது சதத்தை அடித்து அசத்தினார். ரகானே 115 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இரட்டை சதத்தை நோக்கி ஆடி வருகிறார்.

    இரண்டாம் நாளின் மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 199 ரன்னுடனும், ஜடேஜா 15 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், நோர்ஜே, ஜார்ஜ் லிண்டே  தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    கொச்சியில் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் கேரளா மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
    கொச்சி:

    6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இன்று தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்க உள்ளது.

    இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    போட்டியின் முதல் நாளான இன்று கொச்சியில் அமைந்துள்ள நேரு மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

    சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக்கில் எப்.சி.கோவாவை 23-ம் தேதி அவர்களது இடத்தில் சந்திக்கிறது.
    குஜராத்தில் நடைபெற்ற புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்கால் வாரியர்ஸ்.
    அகமதாபாத்:

    புரோ கபடி லீக்கின் 7வது தொடரின் இறுதிப்போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தனர். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமனிலையில் இருந்தன.

    இரண்டாவது பாதியில் தபாங் டெல்லி அணியினர் தொடர்ந்து புள்ளிகளை எடுத்தனர். ஆனாலும் அவர்களால் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    டெல்லி அணி வீரரை மடக்க முயற்சித்த பெங்கால் அணி வீரர்கள்

    இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெற்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
    மலேசியாவில் நடந்த சுல்தான் கோப்பை ஹாக்கியின் இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வென்ற இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    ஜோஹர் பாரு:

    மலேசியாவில் 9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியாவை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்து இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. இறுதியில், சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது முறையாக சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    ரஷியாவில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு இன்று பரிசுகளை வழங்கினார்.
    புதுடெல்லி:

    ரஷியாவில் உலன் உடே நகரில் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கமும், மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

    இந்நிலையில், ரஷியாவில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜுவை தலைநகர் டெல்லியில் இன்று சந்தித்தனர். 

    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்ற மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோருக்கு தலா 8 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது.
    சூதாட்ட வழக்கில் சிக்கிய தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    ஜோகன்ஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குலாம் போடி.

    46 வயதான அவர் 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    இந்தியாவில் பிறந்தவரான குலாம் போடி மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் போட்டியின் போது அவர் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டத்தில் சிக்கினார். இதற்காக குலாம் போடிக்கு 20 வருடம் தடை விதித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.

    குலாம்போடி மீதான சூதாட்ட வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. அவர் மீது 8 விதமான ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் குலாம்போடிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்கிறார்.
    வெற்றிகரமாக ஆட்டத்தை முடிப்பதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை பின்பற்ற விரும்புவதாக தினேஷ்கார்த்திக் கூறியுள்ளார்.
    சென்னை:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் தமிழக அணி தான் ஆடிய 9 ‘லீக்’ ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது.

    விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணி கேப்டனும், சர்வதேச வீரருமான தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது.

    பெங்கால் அணிக்கு எதிராக 62 பந்தில் 95 ரன்னும், மத்திய பிரதேசத்துக்கு எதிராக 28 பந்தில் 65 ரன்களும் குவித்து சாதித்தார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்திய அணியில் மீண்டும் இடம் பெறும் வகையில் தினேஷ் கார்த்திக் ஆட்டம் கவரும் வகையில் உள்ளது.

    இந்த நிலையில் தனது ஆட்டம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    கடைசி கட்டத்தில் சில ஓவர்கள் இருக்கும்போது அதிரடியாக விளையாடி ரன் குவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 4 வரிசையில் பேட் செய்து அதிக ரன்கள் எடுப்பது எளிதானது என்று எனக்கு தெரியும்.

    ஆனால் நெருக்கடியில் இருக்கும்போது அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    டோனி இந்திய அணிக்காக பல ஆண்டுகள் இதை செய்து இருக்கிறார். அவரையை நானும் பின்பற்றுகிறேன்.

    ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் நடந்த 20 ஓவர் தொடர்களில் நான் அப்படி தான் ஆடி வந்து இருக்கிறேன். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் என்று சொல்லப்படுவதில் மகிழ்ச்சி தான். அதை நான் பலமாக கருதுகிறேன்.

    தமிழக அணியில் ஷாருக்கான் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    ராஞ்சி:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 

    இந்நிலையில், 3-வது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 10 ரன்னிலும், புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 12 ரன்னிலும் வெளியேறினார். இதனால் இந்திய அணி 39 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    185 ரன்கள் சேர்த்துள்ள ரோகித் சர்மா - ரகானே ஜோடி

    விக்கெட்டுக்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடினார். அவர் மூன்றாவது முறையாக சதமடித்து அசத்தினார்.

    ரோகித் சர்மாவுக்கு அஜிங்கியா ரகானே நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் அரை சதமடித்தார். 

    இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் 58வது ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மழையும் பெய்துள்ளது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், நோர்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
    ராஞ்சி:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது.

    முதல் இரண்டு போட்டிகளைப் போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய அகர்வால் இந்த ஆட்டத்தில் சோபிக்கவில்லை. அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் நட்சத்திர ஆட்டக்காரரான புஜாரா ரன்கள் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அவுட் ஆனார். வெறும் 39 ரன்களில் அணியின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

    ரோகித் சர்மா

    இதையடுத்து களமிறங்கிய ரகானே, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். ரகானேவும் அரை சதம் கடந்தார். 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து திணறிய இந்திய அணியை ரோகித்-ரகானே ஜோடி சரிவில் இருந்து மீட்டது.

    இந்திய அணி தற்போது 52 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 108 ரன்களுடனும், ரகானே 74 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி செய்த சாதனையை இந்திய அணிக்காக நானும் நிகழ்த்துவேன் என தற்போதைய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ராஞ்சி:

    கிரிக்கெட் உலகில் தற்போது டி20 போட்டிகள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதாவது டெஸ்ட் மற்றும் 50 ஒவர் கிரிக்கெட் போட்டிகளை விட டி20 போட்டிகளை காணவே ரசிகர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். டி20 போட்டிகள் முதலில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டு போட்டிகளாக (கிளப் மேட்சஸ்) விளையாடப்பட்டது. இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, ஐசிசியின் கவனத்திற்கு செல்லவே டி20 போட்டிகளை சர்வதேச போட்டியாக அறிவித்தது.

    முதன் முதலில் டி20 உலக கோப்பை 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்றது. 12 நாடுகள் பங்குபெற்ற இந்த உலககோப்பை போட்டியில், மகேந்திர சிங் டோனி தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி கோப்பையை வென்றது. அதன் பிறகு 5 முறை டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இந்திய அணியால் வெற்றியை ருசிக்க முடியவில்லை.

    இந்நிலையில், 2007 ஆம் ஆண்டு டி20 கோப்பையை டோனி வென்று சாதனை நிகழ்த்தியது போல, தானும் அடுத்த ஆண்டு (2020) நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைப்பேன் என இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

    இது குறித்து விராட் கோலி கூறுகையில், ‘ஐசிசி நடத்திய முதல் டி20 உலக கோப்பை போட்டிகளிலேயே இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பது அறிய இயலாது. மகேந்திர சிங் டோனி தலைமையிலான அணி டி20 உலக கோப்பையை வென்றது போல என் தலைமையிலான அணியும் அடுத்து 2020ம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனை என்வசமாகும். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி கைப்பற்றும் என நம்புகிறேன்,’ என தெரிவித்தார்.

    2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. 50 ஒவர் போட்டிகளில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஒருமுறை கூட டி20 உலக கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
    ராஞ்சி:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளைப் போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் அறிமுக வீரராக ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஷாபாஸ் நதீம் அறிமுகம் ஆகிறார். அவரை சக வீரர்கள் கைதட்டி உற்சாகமாக அணிக்கு வரவேற்று வாழ்த்தினர். 

    அறிமுக வீரர் ஷாபாஸ் நதீம்

    தென் ஆப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த மகராஜுக்குப் பதில், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லிண்டே அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஹீன்ரிச் கிளாசனும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரகானே, ஜடேஜா, சகா, அஷ்வின், ஷாபாஸ் நதீம், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

    தென் ஆப்பிரிக்க அணி: டி காக், எல்கர், ஹம்சா, டு பிளசிஸ், பவுமா, கிளாசன், லிண்டே,  பீட், ரபாடா, நோர்ட்ஜே, நிகிடி.

    இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரேகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். 
    ×