
இதற்கு சீனியர் வீரர்கள் உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கோரிக்கைகள் வைத்து வங்காளதேச கிரிக்கெட் போர்டுக்கு மிரட்டில் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட் விளையாடமாட்டோம் என ஷாகிப் அல் ஹசன், மெஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உள்பட சீனியர் வீரர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘எங்களது போராட்டத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியை சேர்க்கவில்லை. ஏனெனில், அவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இஙகே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் கிரிக்கெட்டில் ஈடுபடப்போவதில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் திரும்பமாட்டோம்’’ என்றார்.